தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-858

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஏழு அறிவிப்புகளில் நான்காம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கட்டளையிட்டபடி முழுமையாக அங்கத் தூய்மை செய்யாதவரை உங்களுடைய தொழுகை முழுமையடையாது. எனவே, அவர் தமது முகத்தையும், முழங்கைகள் வரை இரு கைகளையும் கழுவ வேண்டும்.

தன் தலையை ஈரக்கையால் தடவி (மஸ்ஹ் செய்து), கரண்டை வரை இரு கால்களைக் கழுவ வேண்டும். அதன்பின் ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி தக்பீர் கட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிக்க வேண்டும்.

பின்பு குர்ஆனில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட (இலகுவான தெரிந்த) வசனங்களை ஓத வேண்டும். (என்று உள்ளது. பின்பு மேற்கண்டவாறு நபிமொழி தொடர்கிறது.)

அதன்பிறகு தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்ய வேண்டும். (ஸஜ்தாவில்) தமது முகத்தைப் பூமியில் பதியச் செய்ய வேண்டும். தம் நெற்றியை பூமியில் பதியச் செய்து இணைப்புகள் சரியாக அவற்றுக்குரிய இடங்களில் ஆகி அமைதியடையும்வரை ஸஜ்தா செய்வார். (என்று ஹம்மாமின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

பின்பு, தக்பீர் சொல்லி தமது புட்டத்தின் மீது நேராக அமருவார். தமது முதுகை நேராக வைப்பார். பின்பு நான்கு ரக்அத்களையும் இவ்வாறுதான் தொழுகை முடியும் வரை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இவ்வாறு செய்யாதவரை உங்களில் எவரின் தொழுகையும் முழுமையாகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)

(அபூதாவூத்: 858)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، وَالْحَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَا: حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، بِمَعْنَاهُ، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّهَا لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يُسْبِغَ الْوُضُوءَ كَمَا أَمَرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ، فَيَغْسِلَ وَجْهَهُ وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ، وَيَمْسَحَ بِرَأْسِهِ وَرِجْلَيْهِ إِلَى الْكَعْبَيْنِ، ثُمَّ يُكَبِّرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَيَحْمَدَهُ، ثُمَّ يَقْرَأَ مِنَ الْقُرْآنِ مَا أَذِنَ لَهُ فِيهِ وَتَيَسَّرَ»، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ حَمَّادٍ، قَالَ: ” ثُمَّ يُكَبِّرَ فَيَسْجُدَ فَيُمَكِّنَ وَجْهَهُ – قَالَ هَمَّامٌ: وَرُبَّمَا قَالَ: جَبْهَتَهُ مِنَ الْأَرْضِ – حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ وَتَسْتَرْخِيَ، ثُمَّ يُكَبِّرَ فَيَسْتَوِيَ قَاعِدًا عَلَى مَقْعَدِهِ وَيُقِيمَ صُلْبَهُ “، فَوَصَفَ الصَّلَاةَ هَكَذَا أَرْبَعَ رَكَعَاتٍ حَتَّى تَفْرُغَ، لَا تَتِمُّ صَلَاةُ أَحَدِكُمْ حَتَّى يَفْعَلَ ذَلِكَ


Abu-Dawood-Tamil-730.
Abu-Dawood-TamilMisc-730.
Abu-Dawood-Shamila-858.
Abu-Dawood-Alamiah-730.
Abu-Dawood-JawamiulKalim-731.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்

2 . ஹஸன் பின் அலீ

3 . ஹிஷாம் பின் அப்துல்லாஹ், ஹஜ்ஜாஜ் பின் மின்ஹால்.

4 . ஹம்மாம் பின் யஹ்யா

5 . இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ்

6 . அலீ பின் யஹ்யா பின் கல்லாத்

7 . யஹ்யா பின் கல்லாத்

8 . ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)


  • தொழுகையை சரியாக தொழாதவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை கற்றுத்தந்த இந்த செய்தி பலவகையான அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
  • இவற்றில் முக்கியமானவை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) வழியாக வரும் செய்திகளாகும். (பார்க்க: புகாரி-757) இது புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    போன்ற பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழுகையில் எவை கட்டாயமானவை? எவை ஸுன்னத்தானவை? என்பதற்கு இந்த வகை ஹதீஸ்களையே ஃபுகஹாக்கள் எனும் மார்க்க சட்டமேதைகள் முக்கிய ஆதாரமாக கருதுகின்றனர்.
  • மேற்கூறப்பட்டவாறு ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) வழியாகவும் இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    ஆகிய நூல்களில் பதிவு செய்யப்படவில்லை. இந்தச் செய்தியின் மதார்-அஸல் அறிவிப்பாளர் அலீ பின் யஹ்யா ஆவார். அதாவது இவரிடமிருந்து தான் மற்ற அதிகமானோர் இந்த செய்தியை அறிவித்துள்ளனர். மேலும் பலவகையான அறிவிப்பாளர்தொடரிலும்; வார்த்தை அமைப்புகளில் கூடுதலாகவும், குறைவாகவும் அறிவித்துள்ளனர்.
  • இவற்றில் கூடுதலான கருத்தை அறிவிக்கும் சில அறிவிப்பாளர்களின் செய்திகள், அவர்களின் தரத்தின் அடிப்படையில் ஏற்கப்படும் அல்லது மறுக்கப்படும்.

அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து 8 பேர் அறிவித்துள்ளனர்:

1 . இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ்-

  • இவரிடமிருந்து ஹம்மாத் அறிவித்துள்ளார்.

…அபூதாவூத்-857 , அமாலீ-460 , அல்முஃஜமுல் கபீர்-4526

ஹம்மாத் பின் ஸலமா

ஹம்மாதிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர்=மூஸா பின் இஸ்மாயீல், இப்ராஹீம் பின் ஹஜ்ஜாஜ், ஹஜ்ஜாஜ் பின் மின்ஹால் ஆகியோர் அறிவித்துள்ளனர். இவர்களில் ஹஜ்ஜாஜ் பின் மின்ஹால் மட்டுமே அல்லாஹு அக்பர் என்று தக்பீர் வார்த்தையை கூறியுள்ளார். மற்ற இருவர் கூறவில்லை.

மேலும் ஹம்மாத் வழியாக வரும் சில செய்திகளில் யஹ்யா பின் கல்லாத் கூறப்பட்டுள்ளார். சிலவற்றில் கூறப்படவில்லை. இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஹம்மாம் அவர்கள் யஹ்யா பின் கல்லாதை கூறியுள்ளார்.

ஹம்மாதும், ஹம்மாமும் கருத்துவேறுபாடு கொண்டால் ஹம்மாம் அவர்களின் அறிவிப்புக்கே முன்னுரிமை தரவேண்டும். ஹம்மாதின் அறிவிப்பாளர்தொடர் போன்று முஹம்மத் பின் அம்ரும் அறிவித்துள்ளார். என்றாலும் அதிகமானோர் யஹ்யா பின் கல்லாதைக் கூறி அறிவித்துள்ளனர் என்பதால் அது தான் மஹ்ஃபூல் ஆகும்.

…ஆஹாத்-1977, ஹாகிம்-882 ,

..ஹம்மாதிமிருந்து அறிவிக்கும் அஃப்பான், யஹ்யா பின் கல்லாதை கூறியுள்ளார். ஆனால் நபித்தோழரை கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார். ஹம்மாதின் மாணவர்களில் அஃப்பான் தான் முன்னுரிமை பெற்றவர்.

ஹம்மாத் வழியாக வரும் செய்திகளில் இவ்வாறு கருத்துவேறுபாடு இருப்பதால் தான் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஸுர்ஆ ஆகியோர் ஹம்மாத் இந்த செய்தியை சரியாக மனனமிடவில்லை என்று கூறியுள்ளனர்.

(தாரீகுல் கபீர்-3/320, இலலுல் ஹதீஸ்-1/82)

எனவே ஹம்மாதின் அறிவிப்பில் அல்லாஹு அக்பர் என்ற வார்த்தை கூடுதலாக உள்ளது.

இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ்விடமிருந்து ஹம்மாம் அறிவித்துள்ளார்:

அபூதாவூத்-858 (மேற்கண்ட செய்தி)

இவரின் அறிவிப்பில் மட்டுமே உளூவை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஹம்மாதும், ஹம்மாமும் சேர்ந்து கூடுதலாக சில கருத்துகளை அறிவித்துள்ளனர்.

1 . ஆரம்பத்தில் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் கூறுதல்.

2 . கிராஅத்துக்குப் பின் வரும் அடுத்தடுத்த நிலைகளில் தக்பீர்கள் கூறுதல்.

3 . ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் கூறுதல்.

சிலவற்றை ஹம்மாம் மட்டும் தனித்து அறிவித்துள்ளார்.

4 . உளூவை விரிவாக கூறியது.

5 . ஸஜ்தாவின் போது நெற்றியையும், முகத்தையும் பூமியில் பதியச் செய்தல்.

இதனடிப்படையில் இஸ்ஹாக் பின் அப்துல்லாஹ் சில கூடுதல் தகவல்களை அறிவித்துள்ளார் என்று முடிவு செய்யவேண்டும்.

இந்த 5 கருத்தும் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகளில் இல்லை.


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

2 . முஹம்மத் பின் இஸ்ஹாக்

…அபூதாவூத்-860 ,

இவரின் அறிவிப்பில் உள்ள கூடுதல் தகவல்:

6 . முதல் இருப்பில் தஷஹ்ஹுத் ஓதுதல்

7 . முதல் இருப்பில் இஃப்திராஷ் முறையில் அமர்தல்.


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

3 . முஹம்மத் பின் அம்ர்

இவர் வழியாக வரும் செய்திகளில் பெரும்பாலானவற்றில் யஹ்யா பின் கல்லாத் கூறப்படவில்லை…

..முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-2526 , அஹ்மத்-18995 ,

இவரின் அறிவிப்பில் உள்ள கூடுதல் தகவல்:

8 . ஸுரத்துல் ஃபாத்திஹா ஓதுதல்

9. ருகூவில் முதுகை நேராக வைத்தல்


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

4 . தாவூத் பின் கைஸ்

இவரின் செய்திகளில் கூடுதல் தகவல் எதுவும் இல்லை.


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

5 . முஹம்மத் பின் அஜ்லான்.

ஹதீஸ்கள்…

இவரிடமிருந்து அறிவிக்கும் ஏழு பேர் முஹம்மத் பின் அஜ்லான் —> அலீ பின் யஹ்யா —> யஹ்யா பின் கல்லாத் —> ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இவர் வழியாக அறிவிக்கும் நள்ர் பின் அப்துல்ஜப்பார் என்பவர் மட்டும் இப்னு அஜ்லான் அவர்களுக்கும் அலீ பின் யஹ்யா அவர்களுக்கும் இடையில் ஒரு அறியப்படாத மனிதரை கூறி அறிவித்துள்ளார். (ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-1594)

இவரிடமிருந்து அறிவிக்கும் புகைர், யஹ்யா பின் கல்லாதை கூறாமல் அறிவித்துள்ளார். (அல்கிராஅது கல்ஃபல் இமாம்-புகாரீ-112)

இவரின் அறிவிப்பில் கூடுதல் தகவல் இல்லை.


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

6 . ஷரீக் பின் அப்துல்லாஹ் பின் அபூநமிர்.

ஹதீஸ்கள்…ஷரஹ் மஆனில் ஆஸார்-1/232 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-2243 ,

இவர் வழியாக அறிவிக்கும் யஹ்யா பின் ஸாலிஹ், யஹ்யா பின் கல்லாதை கூறவில்லை.

இவர் வழியாக அறிவிக்கும் இஸ்மாயீல் பின் அபூஉவைஸ் அவர்கள், யஹ்யா பின் கல்லாதை கூறியுள்ளார்.

(அல்முஃஜமுல் கபீர்-4521)… இலலுல் ஹதீஸ்-221,


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

7 . அப்துல்லாஹ் பின் அவ்ன்.

ஷரீக் —> அப்துல்லாஹ் பின் அவ்ன் —> அலீ பின் யஹ்யா

அல்முஃஜமுல் கபீர்-4530 ,

அப்துல்லாஹ் பின் அவ்ன் அவர்களின் பல மாணவர்களில் ஷரீக் மட்டும் தனித்து அறிவித்துள்ளார். எனவே இது ஃகரீப் ஆகும்…


அலீ பின் யஹ்யா அவர்களிடமிருந்து அறிவித்தவர்:

8 . யஹ்யா பின் அலீ (இவர் அலீ பின் யஹ்யாவின் மகனாவார்)

..முஸ்னத் தயாலிஸீ-, அபூதாவூத்-861 , …

இவரிடமிருந்து இஸ்மாயீல் பின் ஜஃபர் மட்டுமே ஹதீஸ்களை அறிவித்துள்ளார். எனவே சிலர் இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்…இவரை இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இத்துடன் இவர் பிரபலமான அறிஞர்களில் ஒருவர் என்றும், உறுதியானவர் என்றும் கூறியுள்ளார் என்பதால் அறியப்படாதவரை பலமானவர் என்று முடிவு செய்யும் அடிப்படையில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அவர்கள் இதைக் கூறவில்லை என்று தெரிகிறது.

திர்மிதீ-302 , இதில் யஹ்யா பின் அலீ தனது தந்தை அலீ பின் யஹ்யா விடமிருந்து அறிவிக்காமல் தனது பாட்டனார் யஹ்யா பின் கல்லாதிடமிருந்து அறிவித்துள்ளதாக வந்துள்ளது. இஸ்மாயீல் பின் ஜஃபர் வழியாக வரும் செய்திகளில் இதில் மட்டுமே இவ்வாறு வந்துள்ளது என்பதால் இது தவறாக இருக்க வாய்ப்புள்ளது. இவர் தனது பாட்டனாரிடமிருந்து இந்த செய்தியை கேட்டிருக்கவும் வாய்ப்புள்ளது.

இவரின் அறிவிப்பில் உள்ள கூடுதல் தகவல்:

10 . குர்ஆனில் எதுவும் மனனமில்லாவிட்டால் தஹ்மீத், தக்பீர், தஹ்லீல்.

11. பாங்கு, இகாமத் கூறுதல்…


2 . இந்தக் கருத்தில் ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-857 , 858 , 859860861 ,


மேலும் பார்க்க: புகாரி-757 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.