தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-857

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

ஏழு அறிவிப்புகளில் மூன்றாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,

“ஒரு மனிதர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்” என்று ஹதீஸ் ஆரம்பித்து ஹதீஸ் எண்-856 இல் உள்ளவாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் இதில், “ஒவ்வொரு மனிதரும் அங்கத் தூய்மை செய்து தொழுதால்தான் தொழுகை (ஏற்றுக்கொள்ளப்படும்); முழுமையாகும். தண்ணீர் உறுப்புகளில் முழுமையாகச் சென்றடைய வேண்டும். அதன்பிறகு தக்பீர் சொல்லி, மாண்பும் வல்லமையும் மிக்க இறைவனைப் புகழ்ந்து – துதித்துக் குர்ஆனிலிருந்து ஓத முடிந்ததை ஓத வேண்டும்.

பின்பு ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் அவற்றுக்குரிய இடங்களில் பொருந்துமாறு நிம்மதியாக ருகூஉ செய்ய வேண்டும்.

பின்பு, ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று சொல்லி நேராக நிற்க வேண்டும். பின்பு, ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் அவற்றுக்குரிய இடங்களில் பொருந்துமாறு நிம்மதியாக ஸஜ்தா செய்ய வேண்டும்.

பின்பு, அல்லாஹு அக்பர் சொல்லி தலையை உயர்த்தி நேராக அமர வேண்டும். பின்பு, ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி எலும்புகளின் இணைப்புகள் சரியாகப் பொருந்தி நிம்மதியாக (இரண்டாவது) ஸஜ்தா செய்வார். பின்பு தலையை உயர்த்தி ‘அல்லாஹு அக்பர்’ சொல்லி நிலைக்கு வருவார். இவ்வாறு அவர் செய்தால் அவருடைய தொழுகை முழுமையாகிவிடும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது.)

அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)

(அபூதாவூத்: 857)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ، عَنْ عَمِّهِ،

أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ، فَذَكَرَ نَحْوَهُ قَالَ فِيهِ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَا تَتِمُّ صَلَاةٌ لِأَحَدٍ مِنَ النَّاسِ حَتَّى يَتَوَضَّأَ، فَيَضَعَ الْوُضُوءَ – يَعْنِي مَوَاضِعَهُ – ثُمَّ يُكَبِّرُ، وَيَحْمَدُ اللَّهَ جَلَّ وَعَزَّ، وَيُثْنِي عَلَيْهِ، وَيَقْرَأُ بِمَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَرْكَعُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ حَتَّى يَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَسْجُدُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، وَيَرْفَعُ رَأْسَهُ حَتَّى يَسْتَوِيَ قَاعِدًا، ثُمَّ يَقُولُ: اللَّهُ أَكْبَرُ، ثُمَّ يَسْجُدُ حَتَّى تَطْمَئِنَّ مَفَاصِلُهُ، ثُمَّ يَرْفَعُ رَأْسَهُ فَيُكَبِّرُ، فَإِذَا فَعَلَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلَاتُهُ “


Abu-Dawood-Tamil-730.
Abu-Dawood-TamilMisc-730.
Abu-Dawood-Shamila-857.
Abu-Dawood-Alamiah-730.
Abu-Dawood-JawamiulKalim-731.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் அலீ பின் யஹ்யா என்ற அறிவிப்பாளருக்கு பின், யஹ்யா பின் கல்லாத் விடப்பட்டுள்ளார். இந்தக் கருத்தில் வரும் மற்ற பெரும்பாலான அறிவிப்பாளர்தொடர்களில் யஹ்யா பின் கல்லாத் கூறப்பட்டுள்ளார். எனவே இது ஷாத் என்பதால் பலவீனமானதாகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-858 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.