ஏழு அறிவிப்புகளில் ஆறாம் அறிவிப்பு: ஹதீஸ் எண்-856 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. இதில்,
“நீ தொழுகையில் நின்றால், ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லி அதன்பின் குர்ஆனிலிருந்து உனக்கு இலகுவானதை ஓது.
தொழுகைக்கு இடையே (முதல்) இருப்பில் அமர்ந்தால், நிம்மதியாக அமர்ந்துகொள். உனது இடது தொடையை விரித்து (அமர்ந்து) அத்தஹிய்யாத் ஓது. பின்பு மூன்றாவது ரக்அத்திற்கு நீ எழுந்தால், உனது தொழுகை முடியும் வரை இதே போல் செய்துகொள்! என்று நபி (ஸல்) சொன்னார்கள் (என்று கூடுதலாகக் காணப்படுகிறது)
அறிவிப்பவர்: ரிஃபாஆ பின் ராஃபிஃ (ரலி)
(அபூதாவூத்: 860)حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي عَلِيُّ بْنُ يَحْيَى بْنِ خَلَّادِ بْنِ رَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – بِهَذِهِ الْقِصَّةِ – قَالَ:
«إِذَا أَنْتَ قُمْتَ فِي صَلَاتِكَ، فَكَبِّرِ اللَّهَ تَعَالَى، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ عَلَيْكَ مِنَ الْقُرْآنِ» وَقَالَ فِيهِ: «فَإِذَا جَلَسْتَ فِي وَسَطِ الصَّلَاةِ فَاطْمَئِنَّ، وَافْتَرِشْ فَخِذَكَ الْيُسْرَى ثُمَّ تَشَهَّدْ، ثُمَّ إِذَا قُمْتَ فَمِثْلَ ذَلِكَ حَتَّى تَفْرُغَ مِنْ صَلَاتِكَ»
Abu-Dawood-Tamil-730.
Abu-Dawood-TamilMisc-730.
Abu-Dawood-Shamila-860.
Abu-Dawood-Alamiah-730.
Abu-Dawood-JawamiulKalim-731.
சமீப விமர்சனங்கள்