ஹதீஸின் தரம்: More Info
தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதாஉ அல்ஆமிரீ
(al-adabul-mufrad-2: 2)حَدَّثَنَا آدَمُ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ قَالَ: حَدَّثَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ:
رِضَا الرَّبِّ فِي رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ
Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-2.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-2.
குறிப்பு: அல்அதபுல் முஃப்ரதின் சில பிரதிகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்என்று உள்ளது. அப்துல்லாஹ் பின் அம்ர் என்பதே சரி.
- இது மவ்கூஃபான செய்தி.
மேலும் பார்க்க : திர்மிதீ-1899 .
(நான் கேட்கும் கேள்விகளுக்கு இந்த ஹதீஸிற்க்கு எந்த சம்பந்தமும் இல்லை.ஆனால் நான் கேட்கும் கேள்வி அதபுல் முஃரதில்தான்.அதபுல் முஃரதில் இந்த ஹதீஸே முதல் ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த இடத்தில் இந்த கேள்வி கேட்கிறேன்;)
பேஸ்புக்கில் இந்த பதிவை பார்த்தேன்:கஷ்டங்களின் போது பெருமானாரை நினைப்பதும் அழைப்பதும் ஸஹாபாக்களின் வழிமுறையே!
®®®®®®®®®®®®®®®®
حدثنا أبو نعيم قال حدثنا سفيان عن أبي إسحاق عن عبد الرحمن بن سعد قال خدرت رجل بن عمر فقال له رجل اذكر أحب الناس إليك فقال يا محمد
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்களுக்கு கால் மரத்துப் போன சந்தர்ப்பத்தில் உங்களுக்கு மிகவும் விருப்பமான ஒருவரை நினைவு கூறும்படி அவர்களுடம் கூறப்பட்டது. அதற்கு அவர்கள் ” யா முஹம்மத்” என கூறினார்கள்.
ஆதாரம் : இமாம் புஹாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அல் அதபுல் முபர்ரத் ஹதீஸ் எண் : 964
இந்த ஹதீஸ் நம்பகமான அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. அல்பானி போன்ற அறை குறை மதியாளர்கள் இவ்வறிப்பை பலவீனமாக்கி இருக்கின்ற போதிலும் அவரது ஆய்வுக்கு போதியளவிலான மறுப்புக்கள் வழங்கப்பட்டு இந்த ஹதீஸ் ஸஹீஹானது என நிறுவப்பட்டுள்ளது.
(இந்த ஹதீஸை பதிவு செய்யவும்)
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. நீங்கள் கூறிய செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-964.