பாடம்:
பெற்றோரின் திருப்தி…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(திர்மிதி: 1899)
بَابُ مَا جَاءَ مِنَ الفَضْلِ فِي رِضَا الوَالِدَيْنِ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«رِضَى الرَّبِّ فِي رِضَى الوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، نَحْوَهُ،
وَلَمْ يَرْفَعْهُ وَهَذَا أَصَحُّ،
وَهَكَذَا رَوَى أَصْحَابُ شُعْبَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، مَوْقُوفًا، وَلَا نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ غَيْرَ خَالِدِ بْنِ الحَارِثِ، عَنْ شُعْبَةَ وَخَالِدُ بْنُ الحَارِثِ ثِقَةٌ مَأْمُونٌ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ المُثَنَّى يَقُولُ: مَا رَأَيْتُ بِالبَصْرَةِ مِثْلَ خَالِدِ بْنِ الحَارِثِ، وَلَا بِالكُوفَةِ مِثْلَ عَبْدِ اللَّهِ بْنِ إِدْرِيسَ وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-1899.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-1817.
ஷுஃபா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிப்பவர்களில் சிலர் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும், சிலர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளனர்.
- அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவிப்பவர்கள்:
1 . ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
– (நூல்: அல்ஜாமிஉ-இப்னு வஹ்ப்)
2 . ஆதம் பின் இயாஸ் – (நூல்: அல்அதபுல் முஃப்ரத்)
3 . முஹம்மது பின் ஜஃபர் – (நூல்: திர்மிதீ)
4 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் இப்ராஹீம் – (நூல்: தப்ரானீ)
5 . நள்ரு பின் ஷுமைல் -(நூல்: ஷரஹுஸ் ஸுன்னா)
- ஒன்பது அறிவிப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவிப்பவர்களே மிக பலமானவர்கள் என்பதால் இந்த செய்தி அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொல் என்பதே உண்மை.
- மேலும் யஃலா பின் அதாஉ விடமிருந்து ஹுஷைம், அஷ்அஸ் பின் ஸஃத், ஸதகா பின் அப்துல்லாஹ் போன்றோர் அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : திர்மிதீ-1899 , முஸ்னத் பஸ்ஸார்-2394 , இப்னு ஹிப்பான்-429 , அல்முஃஜமுல் கபீர்- 14368 , ஹாகிம்-7249 , ஷுஅபுல் ஈமான்-7446 , 7447 ,
2. மவ்கூஃப்
சமீப விமர்சனங்கள்