தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Al-Adabul-Mufrad-62

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒரு மனிதன் தனக்கோ அல்லது தனது குடும்பத்தாருக்கோ செலவு செய்தால் அதற்கு அல்லாஹ் கூலி வழங்காமல் இருப்பதில்லை. உங்களை சார்ந்து இருப்பவரிடமிருந்து துவங்குங்கள். பிறகு எஞ்சியதை உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் பின்னர் அதற்கு அடுத்த நிலை உறவினர்களுக்கும் செலவு செய்யுங்கள்.

என இப்னு உமர் (ரலி) கூறினார்கள்.

(al-adabul-mufrad-62: 62)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ بْنِ أَبِي لَيْلَى قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ بْنُ جَابِرٍ الْحَنَفِيُّ، عَنْ آدَمَ بْنِ عَلِيٍّ، عَنِ ابْنِ عُمَرَ:

مَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى نَفْسِهِ وَأَهْلِهِ يَحْتَسِبُهَا إِلَّا آجَرَهُ اللَّهُ تَعَالَى فِيهَا، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، فَإِنْ كَانَ فَضْلًا فَالْأَقْرَبَ الْأَقْرَبَ، وَإِنْ كَانَ فَضْلًا فَنَاوِلْ


Al-Adabul-Mufrad-Tamil-.
Al-Adabul-Mufrad-TamilMisc-.
Al-Adabul-Mufrad-Shamila-62.
Al-Adabul-Mufrad-Alamiah-.
Al-Adabul-Mufrad-JawamiulKalim-62.




இது பலவீனமான, மவ்கூஃபான செய்தி.

ضعيف الإسناد، فيه شيخ لمؤلف: محمد بن عمران بن أبي ليلي، عن أيوب بن جابر الحنفي – ضعيفان، وقد صح من حديث أبي هريرة مرفوعاُ نحوه – «إرواء الغليل» (833).

 

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரும் முஹம்மது இப்னு இம்ரான் மற்றும் அய்யூப் இப்னு ஜாபிர் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள்…

இதே நூலில் ஹதீஸ் எண் 196 ல் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக வரும் மற்றொரு ஹதீஸ் சரியானது என அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறுகிறார். பார்க்க : அல்அதபுல் முஃப்ரத்-196

ஆனால், அதில் வரும் ஆஸிம் பின் பஹ்தலஹ் (ஆஸிம் பின் அபின் நஜூத்) நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றலில் சிறிது குறையுள்ளவர் என தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

وقال الدارقطني : في حفظه شيء
تهذيب الكمال: (13 / 473)

இந்த கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன. பார்க்க : புகாரி-1427, 1428முஸ்லிம்-1884

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.