தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Alilal-Ibn-Abi-Hatim-1296

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

இப்னு அபூஹாதிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை இமாம் அபூஹாதிம் அவர்களிடம் முஹம்மத் பின் முஸஃப்பா அவர்கள் வலீத் பின் முஸ்லிம் —> அல்அவ்ஸாஈ —> அதாஉ —> இப்னு அப்பாஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸ் பற்றிக் கேட்டேன்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ், என் சமுதாயத்தினரின் (வேண்டுமென்றே செய்யாத) தவறுகளையும், மறதியையும், அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுச் செய்ததையும் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

மேலும் முஹம்மத் பின் முஸஃப்பா அவர்கள் இதை வலீத் பின் முஸ்லிம் —> இப்னு ஜுரைஜ் —> அதாஉ —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார். (அல்முஃஜமுல் அவ்ஸத்-8275, 8276)

மேலும் வலீத் பின் முஸ்லிம் —> மாலிக் —> நாஃபிஃ —> இப்னு உமர் (ரலி) என்ற அறிவிப்பாளர் தொடரிலும் அறிவித்துள்ளார்.

மேலும் வலீத் பின் முஸ்லிம் —> இப்னு லஹீஆ —> மூஸா பின் வர்தான் —> உக்பா பின் ஆமிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.


அதற்கு என் தந்தை அபூஹாதிம் அவர்கள் கூறினார்கள்:

இந்த ஹதீஸ்கள் ‘முன்கர்’ (பலவீனமான, மறுக்கத்தக்க) வகையைச் சார்ந்தவை. மேலும் இவை இட்டுக் கட்டப்பட்டவை போலத் தோன்றுகின்றன.

மேலும் என் தந்தை கூறினார்கள்:

இந்த ஹதீஸை அதாஉ அவர்களிடமிருந்து அவ்ஸாஈ அவர்கள் செவியுறவில்லை. மாறாக, அவர் பெயர் குறிப்பிடப்படாத ஒருவரிடமிருந்து இதைக் கேட்டுள்ளார். அவர் அப்துல்லாஹ் பின் ஆமிர் அல்லது இஸ்மாயீல் பின் முஸ்லிம் ஆகியவர்களாக இருக்கலாம் என்று நான் ஊகிக்கிறேன்.

எனவே இந்த ஹதீஸ் சரியானதல்ல. மேலும் இதன் அறிவிப்பாளர்தொடரும் உறுதியானதல்ல.

(alilal-ibn-abi-hatim-1296: 1296)

وسألتُ أبِي عَن حدِيثٍ ؛ رواهُ مُحمّدُ بنُ المُصفّى ، عنِ الولِيدِ بنِ مُسلِمٍ ، عنِ الأوزاعِيِّ ، عن عطاءٍ ، عنِ ابنِ عبّاسٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، قال :

إِنَّ الله عزّ وجلّ وضع عن أُمّتِي الخطأ ، والنِّسيان ، وما استُكرِهُوا عليهِ.
وروى ابنُ مُصفّى ، عنِ الولِيدِ بنِ مُسلِمٍ ، عنِ الأوزاعِيِّ ، عن عطاءٍ ، عنِ ابنِ عبّاسٍ : مِثلهُ.
وعنِ الولِيدِ ، عن مالِكٍ ، عن نافِعٍ ، عنِ ابنِ عُمر ، مِثلهُ.
وعنِ الولِيدِ ، عنِ ابنِ لهِيعة ، عن مُوسى بنِ وردان ، عن عُقبة بنِ عامِرٍ ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم : مِثلُ ذلِك.
قال أبِي : هذِهِ أحادِيثُ مُنكرةٌ ، كأنّها موضُوعةٌ.
وقال أبِي : لم يسمعِ الأوزاعِيُّ هذا الحدِيث ، من عطاءٍ ، إنه سمِعهُ مِن رجُلٍ لم يُسمِّهِ ، أتوهّمُ أنّهُ عَبدُ اللهِ بنُ عامِرٍ ، أو إِسماعِيلُ بنُ مُسلِمٍ ، ولا يصِحُّ هذا الحدِيثُ ، ولا يثبُتُ إِسنادُهُ.


Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-1296.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.




பார்க்க: இப்னு மாஜா-2045 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.