நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ், என் சமுதாயத்தினரின் (வேண்டுமென்றே செய்யாத) தவறுகளையும், மறதியையும், அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுச் செய்ததையும் மன்னித்துவிட்டான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(இப்னுமாஜா: 2045)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«إِنَّ اللَّهَ وَضَعَ عَنْ أُمَّتِي الْخَطَأَ، وَالنِّسْيَانَ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-2035.
Ibn-Majah-Shamila-2045.
Ibn-Majah-Alamiah-2035.
Ibn-Majah-JawamiulKalim-2035.
…
இந்தச் செய்தி சரியானதல்ல என்று அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் விமர்சித்துள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1296)
العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (1/ 561):
1340 – سَأَلْتُهُ عَنْ حَدِيثٍ رَوَاهُ مُحَمَّدُ بْنُ مُصَفًّى الشَّامِيُّ عَنِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ عَنِ الْأَوْزَاعِيِّ عَنْ عَطاء عَن بْنِ عَبَّاسٍ أَنّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا اسْتُكْرِهُوا عَلَيْهِ وَعَنِ الْخَطَأِ وَالنِّسْيَانِ وَعَنِ الْوَلِيدِ عَنْ مَالِكٍ عَنْ نَافِع عَن بن عُمَرَ مِثْلُهُ فَأَنْكَرَهُ جِدًّا وَقَالَ لَيْسَ يُرْوَى فِيهِ إِلَّا عَنِ الْحَسَنِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் ஹஸன் பஸரீ (ரஹ்) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வரும் செய்தியே முன்னுரிமை பெற்றது என்றும்; மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் சரியானதல்ல என்றும் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம் கூறியுள்ளார்.
(நூல்: அல்இலல் வ மஃரிஃபதுர் ரிஜால்-1340)
…
(நூல்: அவ்ஹாமுல் முஹத்திஸீன்-836, 1168)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-2045, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,
- அதாஉ பின் அபூரபாஹ் —> உபைத் பின் உமைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: ஷரஹ் மஆனில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுஸ் ஸகீர்-, தாரகுத்னீ-, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-,
- ஸைத் அல்அம்மீ —> ஸயீத் பின் ஜுபைர் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-,
- ஸயீத் அல்அல்லாஃப் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,
2 . உக்பா பின் ஆமிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்மஃரிஃபது வத்தாரீக்-, அல்முஃஜமுல் அவ்ஸத்-, குப்ரா பைஹகீ-,
3 . அபூதர் (ரலி), அபுத்தர்தா (ரலி) உம்முத்தர்தா (ரலி) ஆகியோர் வழியாக வரும் செய்திகள்:
அபூபக்ர் அல்ஹுதலீ என்பவரின் குளறுபடியான அறிவிப்புகள்:
பார்க்க: இப்னு மாஜா-2043, திக்ருல் இமாம் அபூஅப்தில்லாஹ்-, தஃப்ஸீரு இப்னு அபூஹாதிம்-, தாரீகு திமிஷ்க்-,
4 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-, முஸ்னத் ஷாமிய்யீன்-,
5 . அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தபகாதுல் முஹத்திஸீன்-, அக்பாரு அஸ்பஹான்-,
6 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-, ஹில்யதுல் அவ்லியா-, குப்ரா பைஹகீ-,
7 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் ஷாமிய்யீன்-,
8 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரீகு பஃக்தாத்-,
9 . ஹஸன் பஸரீ (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, ஸுனன் ஸயீத்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, ஃபவாஇத்-அபூஷுஐப்-, தஃப்ஸீருத் தபரீ-, தாரீகு பஃக்தாத்-,
அல்அர்பஈன்-நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
இறப்பு ஹிஜ்ரி 676
வயது: 45
எண்-39.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-2528,
சமீப விமர்சனங்கள்