இப்னு அபூஹாதிம்-அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத்-அபூமுஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தந்தை (அபூஹாதிம்) அவர்களிடம் யஹ்யா பின் அய்யூப் அவர்களின் வழியாக முரண்பட்ட அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கப்படும் ஒரு ஹதீஸ் பற்றி கேட்டேன்.
அந்த ஹதீஸ்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் கீழாடையின்றி (பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட உங்களது பெண்களில் எவரும் (பல பெண்கள் சேர்ந்துக் குளிக்கும் பொதுக்) குளிப்பிடங்களில் நுழைய வேண்டாம்.
முரண்பட்ட அறிவிப்புகள்:
1 . யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் வஹ்ப் அவர்கள், யஹ்யா பின் அய்யூப் —> யஃகூப் பின் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹுனைன் —> முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரஹ்பீல் —> அப்துல்லாஹ் பின் யஸீத் —> அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
2 . யஹ்யா பின் அய்யூப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் லைஸ் பின் ஸஃத், அம்ர் பின் ரபீஉ பின் தாரிக் ஆகிய இருவரும், யஹ்யா பின் அய்யூப் —> யஃகூப் பின் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹுனைன் —> முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரஹ்பீல் —> அப்துல்லாஹ் பின் ஸுவைத் அல்கத்மீ —> அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.
3 . என்றாலும் இதில் லைஸ் பின் ஸஃத் தனது அறிவிப்பாளர்தொடரில் ஒரு நபரை கூடுதலாகக் குறிப்பிட்டுள்ளார். அவரின் அறிவிப்பாளர் தொடர் கீழ்க்கண்டவாறு உள்ளது.
யஹ்யா பின் அய்யூப் —> யஃகூப் பின் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹுனைன் —> அப்துர்ரஹ்மான் பின் ஜுபைர் —> (பனூ அப்துத்தார் கோத்திரத்தைச் சேர்ந்த) முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரஹ்பீல் —> அப்துல்லாஹ் பின் ஸுவைத் அல்கத்மீ —> அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)
அதற்கு என் தந்தை அபூஹாதிம் அவர்கள், “இந்த அறிவிப்பாளர்தொடர்களில் “அப்துல்லாஹ் பின் ஸுவைத் அல்கத்மீ” என்று கூறப்படும் அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானது” என்று கூறினார்.
அபூமுஹம்மத் (எனும் இப்னு அபூஹாதிம்) ஆகிய நான் கூறுகிறேன்:
அல்லாஹ்வே நன்கறிந்தவன். என்னைப் பொறுத்தவரை, இப்னு வஹ்ப் அவர்கள் அறிவிக்கும், யஹ்யா பின் அய்யூப் —> யஃகூப் பின் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் பின் ஹுனைன் —> முஹம்மத் பின் ஸாபித் பின் ஷுரஹ்பீல் —> அப்துல்லாஹ் பின் யஸீத் அல்கத்மீ —> அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே மிகவும் சரியானதாகும்.
(alilal-ibn-abi-hatim-192: 192)وسألتُ أبِي عَن حدِيثٍ ؛ رواهُ يحيى بنُ أيُّوب ، واختُلِف فِي الرِّوايةِ على يحيى بنِ أيُّوب.
فروى عَبدُ اللهِ بنُ وهبٍ ، عن يحيى بنِ أيُّوب ، عن يعقُوب بنِ إِبراهِيم بنِ عَبدِ اللهِ بنِ حُنينٍ ، عن مُحمّدِ بنِ ثابِتِ بنِ شُرحبِيل ، عن عَبدِ اللهِ بنِ يزِيد ، عن أبِي أيُّوب الأنصارِيّ ، أنَّ رسُول اللهِ صلى الله عليه وسلم ، قال :
من كان يُؤمِنُ بِاللهِ واليومِ الآخِرِ فلا يدخُلُ الحمّام إِلاَّ بِمِئزرٍ ، ومن كان يُؤمِنُ بِاللهِ واليومِ الآخِرِ مِن نِسائِكُم فلا تدخُلن الحمّام.
وروى اللّيثُ بنُ سعدٍ ، وعمرُو بنُ الرّبِيعِ بنِ طارِقٍ ، كِلاهُما عن يحيى بنِ أيُّوب ، عن يعقُوب بنِ إِبراهِيم بنِ عَبدِ اللهِ بنِ حُنينٍ ، عن مُحمّدِ بنِ ثابِتِ بنِ شُرحبِيل ، عن عَبدِ اللهِ بنِ سُويدٍ الخطمِيِّ ، عن أبِي أيُّوب ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم ، غير أنَّ اللّيث زاد فِي الإِسنادِ رجُلاً روى اللّيثُ ، عن يحيى بنِ أيُّوب ، عن يعقُوب بنِ إِبراهِيم ، عن عَبدِ الرّحمنِ بنِ جُبيرٍ ، عن مُحمّدِ بنِ ثابِتِ بنِ شُرحبِيل القُرشِيِّ ، مِن بنِي عَبدِ الدّارِ ، أنَّ عَبد اللهِ بن سُويدٍ الخطمِيّ ، أخبرهُ عن أبِي أيُّوب ، عن رسُولِ اللهِ صلى الله عليه وسلم.
فسمِعتُ أبِي يقُولُ : عَبدُ اللهِ بنُ سُويدٍ أشبهُ.
قال أبو محمد : والّذِي عِندِي واللّهُ أعلمُ ، أنَّ الأصحّ على ما رواهُ ابنُ وهبٍ ، عن يحيى بنِ أيُّوب ، عن يعقُوب ، عن مُحمّدِ بنِ ثابِتٍ ، عن عَبدِ اللهِ بنِ يزِيد الخطمِيِّ ، عن أبِي أيُّوب.
Alilal-Ibn-Abi-Hatim-Tamil-.
Alilal-Ibn-Abi-Hatim-TamilMisc-.
Alilal-Ibn-Abi-Hatim-Shamila-192.
Alilal-Ibn-Abi-Hatim-Alamiah-.
Alilal-Ibn-Abi-Hatim-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்