முஸ்லிம் பின் அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றியின்போது ஸஃபா குன்றின் மீது இருந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் (பைஅத் எனும்) உறுதிமொழி வாங்கிகொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது உறுதிமொழி கூறிய ஒரு பெண்ணின் கை ஆணின் கையைப்போன்று இருந்ததால் நபி (ஸல்) அவரிடமிருந்து உறுதிமொழியை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே அந்தப் பெண் திரும்பிச் சென்று தனது கையில் மஞ்சள்நிற சாயமிட்டு வந்தார்.
மேலும் ஒரு மனிதர் இரும்பு மோதிரம் அணிந்துக் கொண்டு வந்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரும்பு மோதிரம் அணிந்திருக்கும் கையை அல்லாஹ் தூய்மையாக்கமாட்டான்” என்று கூறினார்கள்.
(almujam-alawsat-1114: 1114)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا أَبُو جَعْفَرٍ قَالَ: نا عَبَّادُ بْنُ كَثِيرٍ الرَّمْلِيُّ، عَنْ شُمَيْسَةَ بِنْتِ نَبْهَانَ، عَنْ مَوْلَاهَا مُسْلِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ:
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُبَايِعُ النِّسَاءَ عَامَ الْفَتْحِ عَلَى الصَّفَا، فَجَاءَتِ امْرَأَةٌ كَأَنَّ يَدِهَا يَدَ الرَّجُلِ، فَأَبَى أَنْ يُبَايِعَهَا حَتَّى ذَهَبَتْ فَغَيَّرَتْ يَدَهَا بِصُفْرَةٍ، وَأَتَاهُ رَجُلٌ فِي يَدِهِ خَاتَمٌ مِنْ حَدِيدٍ» ، فَقَالَ: «مَا طَهَّرَ اللَّهُ يَدًا فِيهَا خَاتَمٌ مِنْ حَدِيدٍ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-1114.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1133.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19318-ஷம்ஸிய்யா பின்த் நப்ஹான் யாரென அறியப்படாதவர்; ராவீ-20654-அப்பாத் பின் கஸீர் அர்ரம்லீ-அஷ்ஷாமீ என்பவர் மிக பலவீனமானவர் ஆவார்.
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-1054 .
சமீப விமர்சனங்கள்