தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-403

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும்…இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள். அந்த மனிதர், நூஹ் நபிக்கும், இப்ராஹீம் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.

மேலும் அந்த மனிதர், ரஸூல்மார்கள் எத்தனை பேர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “315 பேர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(almujam-alawsat-403: 403)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خُلَيْدٍ قَالَ: نا أَبُو تَوْبَةَ قَالَ: نا مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، عَنْ زَيْدِ بْنِ سَلَّامٍ، أَنَّهُ سَمِعَ أَبَا سَلَّامٍ، يَقُولُ: حَدَّثَنِي أَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَبِيًّا كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ» . قَالَ: كَمْ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ» . قَالَ: كَمْ بَيْنَ نُوحٍ وَإِبْرَاهِيمَ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ» . قَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَمْ كَانَتِ الرُّسُلُ؟ قَالَ: «ثَلَاثُمَائةٍ وَخَمْسَةَ عَشَرَ»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي أُمَامَةَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ. تَفَرَّدَ بِهِ: مُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-403.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-414.




மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-6190 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.