அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (இஸ்ரா, மிஃராஜ்—ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அப்போது அவர்கள், முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள். மேலும் “சொர்க்கத்தின் மண் தூய்மையானது; அதன் தண்ணீர் மதுரமானது; மேலும் சொர்க்கம் விசாலமான காலியிடமாகும்; அதில் மரம் நடவேண்டுமென்றால் ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்), அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே), லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்), வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் (அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது) என்ற வார்த்தைகளைக் கூறவேண்டும் என்பதையும் உமது சமுதாயத்திற்கு தெரியப்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(almujam-alawsat-4170: 4170)حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ الْمُثَنَّى الْجُهَنِيُّ التُّسْتَرِيُّ قَالَ: نا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْخَزَّازُ قَالَ: نا سَيَّارُ بْنُ حَاتِمٍ قَالَ: نا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«رَأَيْتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي، فَقَالَ: يَا مُحَمَّدُ أَقْرِئْ أُمَّتَكَ السَّلَامَ، وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ، عَذْبَةُ الْمَاءِ، وَإِنَّهَا قِيعَانٌ، وَغِرَاسُها قَوْلُ: سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ مَسْعُودٍ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ عَنِ الْقَاسِمِ ”
لم يروه عن القاسم إلاَّ عبد الرحمن ولا عنه إلاَّ عبد الواحد ولم يروه عن عبد الواحد مرفوعا إلاَّ سياد
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4170.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4302.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் பலவீனமானவர்; ராவி அலீ பின் ஹஸன், ராவி முஹம்மது பின் ஹாரிஸ் போன்றோர் யாரென அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-3462 .
சமீப விமர்சனங்கள்