அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது இறைவனை பயந்து; தனது கற்பைப் பேணிநடந்து; தனது கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவளுக்காக சொர்க்கத்தின் எட்டுவாசல்களும் திறக்கப்பட்டு, “நீ விரும்பிய வாசல் வழியாக நுழைந்துக் கொள்!” என்று அவளிடம் கூறப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-4715: 4715)حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُعَاوِيَةَ الْعُتْبِيُّ قَالَ: نَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ: نَا ابْنُ لَهِيعَةَ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَيُّمَا امْرَأَةٍ اتَّقَتْ رَبَّهَا، وَحَفِظَتْ فَرْجَهَا، وَأَطَاعَتْ زَوْجَهَا، فُتِحَ لَهَا ثَمَانِيَةُ أَبْوَابٍ مِنَ الْجَنَّةِ، فَقِيلَ لَهَا: ادْخُلِي مِنْ حَيْثُ شِئْتِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ إِلَّا ابْنُ لَهِيعَةَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4715.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4855.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22433-அப்துர்ரஹ்மான் பின் முஆவியா அல்உத்பீ என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை.
- தப்ரானீ அவர்களின் ஆசிரியர்களைப் பற்றி தனிநூலாக தொகுத்துள்ள அபுத்தய்யிப் அவர்கள், இவரை அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-539)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னு ஹிப்பான்-4163.
சமீப விமர்சனங்கள்