அபூ தமீமா அல்ஹுஜமிய்யி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஊரின் சுவர்கள் உள்ள பகுதியில் இருந்தேன். அப்போது திடீரென ஒரு பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணைத் தவிர வேறு சிந்தனை அப்போது எனக்கு இல்லை. அவள் என்னைக் கடந்துச் சென்றாள். நான் அவளையே பார்த்துக் கொண்டு சென்று சுவற்றில் மோதிக்கொண்டேன். அந்த நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, நான் அழிந்து விட்டேன் என்றுக் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்ன விசயம் அபூதமீமாவே! என்று கேட்டார்கள். நான் நடந்ததைக் கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் “ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய அல்லாஹ் நாடினால் இவ்வுலகிலேயே அவரின் பாவத்திற்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். நமது இறைவன் ஒரு பாவத்திற்கு இருதடவை தண்டிக்காத கண்ணியமிக்கவன் ஆவான் என்று கூறினார்கள்.
(almujam-alawsat-5315: 5315)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ النَّرْسِيُّ قَالَ: نَا أَحْمَدُ بْنُ هِِشَامِ بْنِ بَهْرَامَ الْمَدَائِنِيُّ قَالَ: نَا هِشَامُ بْنُ لَاحِقٍ الْمَدَائِنِيُّ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَبِي تَمِيمَةَ الْهُجَيْمِيِّ قَالَ:
بَيْنَا أَنَا فِي حَائِطٍ مِنْ حِيطَانِ الْمَدِينَةِ إِذْ بَصُرْتُ بِامْرَأَةٍ، فَلَمْ يَكُنْ لِي هَمٌّ غَيْرُهَا حَتَّى جَازَتْنِي، ثُمَّ أَتْبَعْتُهَا بَصَرِي، حَتَّى حَازَيْتُ الْحَائِطَ، فَالْتَفَتُّ فَأَصَابَ وَجْهِيَ وَأَدْمَانِي، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: هَلَكَتُ. فَقَالَ: «وَمَا ذَاكَ يَا أَبَا تَمِيمَةَ؟» فَأَخْبَرْتُهُ فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ إِذَا أَرَادَ بِعَبْدٍ خَيْرًا عَجَّلَ لَهُ عُقُوبَةَ ذَنْبِهِ فِي الدُّنْيَا، وَرَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى أَكْرَمُ مِنْ أَنْ يُعَاقِبَ بِذَنْبٍ مَرَّتَيْنِ»
لَمْ يَرْوِ هَذَيْنِ الْحَدِيثَيْنِ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ إِلَّا هِشَامُ بْنُ لَاحِقٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-5315.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-5461.
إسناد ضعيف لأن به موضع إرسال ، وفيه هشام بن لاحق المدائني وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூதமீமா அல்ஹுஜமிய்யி (ரஹ்) நபித்தோழர் அல்ல என்பதால் இது முர்ஸல் வகையைச் சார்ந்த செய்தி.
- மேலும் இதில் வரும் முஹம்மது பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அறியப்படாதவர். - மேலும் இதில் வரும் ஹிஷாம் பின் லாஹிக் பலவீனமானவர்.
4 . இந்தக் கருத்தில் அபூதமீமா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5315 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-16806 .
சமீப விமர்சனங்கள்