ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண் திரைக்குப் பின்னால் இருந்துக்கொண்டு, தனது கையை நபி (ஸல்) அவர்களிடம் நீட்டினார். அவரின் கையில் கடிதம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள், அவரின் கையைப் பிடித்தார்கள். அதற்கு அந்தப்பெண், “அல்லாஹ்வின் தூதரே! எதற்கு என் கையை பிடித்தீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் ஆணா? அல்லது பெண்ணா? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப்பெண், “பெண்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் நகங்களை மருதாணி (போன்றதைக்) கொண்டு மாற்றியிருக்க வேண்டுமே! என்று கூறினார்கள்.
(almujam-alawsat-6706: 6706)وَبِهِ، عَنْ صَفِيَّةَ، عَنْ عَائِشَةَ،
أَنَّ امْرَأَةً مُدَّتْ يَدَهَا بِكِتَابٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَبَضَ يَدَهُ عَنْهَا، فَقَالَتْ: لِمَ قَبَضْتَ يَدَكَ عَنِّي؟ فَقَالَ: «رَجُلٌ أَوِ امْرَأَةٌ؟» قَالَتْ: امْرَأَةٌ قَالَ: «لَوْ كُنْتِ امْرَأَةً غَيَّرْتِ أَظْفَارَكِ بِالْحِنَّاءِ»
لَمْ يَرْوِ هَذَيْنِ الْحَدِيثَيْنِ عَنْ صَفِيَّةَ بِنْتِ عِصْمَةَ إِلَّا مُطِيعُ بْنُ مَيْمُونٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6706.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6881.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ ஸஃபிய்யா பின்த் இஸ்மா யாரென அறியப்படாதவர்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1360)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-4166 .
சமீப விமர்சனங்கள்