தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-6757

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

  1. தீர்ப்பின் சட்டங்களை அறிந்துக்கொள்ளாமல் நீதிபதி பதவியில் அமர்ந்து மக்களின் உரிமைகளை நாசமாக்கியவர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் புகுவார்.
  3. நீதியை அறிந்து நியாயமாக தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

(almujam-alawsat-6757: 6757)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي زُرْعَةَ، ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، نَا مُحَمَّدُ بْنُ مَسْرُوقٍ الْكِنْدِيُّ، ثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَرْزَمِيُّ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، وَيُونُسَ بْنِ خَبَّابٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْقُضَاةُ ثَلَاثَةٌ، اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ، رَجُلٌ قَعَدَ لِلنَّاسِ فَقَضَى بَيْنَهُمْ، وَلَا عِلْمَ لَهُ بِالْقَضَاءِ، فَأَهْلَكَ حُقُوقَهُمْ، وَرَجُلٌ عَلِمَ فَجَارَ وَهُوَ يَعْلَمُ، وَرَجُلٌ عَلِمَ فَقَضَى بِعِلْمِهِ بِالْحَقِّ فَهَذَا فِي الْجَنَّةِ»

لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ إِلَّا الْعَرْزَمِيُّ، وَلَا رَوَاهُ عَنِ الْعَرْزَمِيِّ إِلَّا مُحَمَّدُ بْنُ مَسْرُوقٍ، تَفَرَّدَ بِهِ: هِشَامُ بْنُ عَمَّارٍ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6757.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-6934.




1. إسناد فيه يونس بن خباب الأسيدي وهو كذاب

2.إسناد شديد الضعف فيه محمد بن عبيد الله العرزمي وهو متروك الحديث

  • இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் யூனுஸ் பின் கப்பாப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது பொய்யான செய்தி.
  • இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் உபைதுல்லாஹ் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .

 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.