அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நடத்தையில்) சந்தேகம் ஏற்பட்டாலே தவிர வேறு எதற்காகவும் பெண்களை விவாகரத்து செய்யாதீர்கள். ஏனெனில் காமத்திற்காக (மட்டும்) திருமணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அல்லாஹ் விரும்பமாட்டான்.
அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)
(almujam-alawsat-7848: 7848)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْوَاسِطِيُّ، نا وَهْبُ بْنُ بَقِيَّةَ، نا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ الْمُلَائِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عِيسَى، عَنْ عُمَارَةَ بْنِ رَاشِدٍ، عَنْ عُبَادَةَ بْنِ نَسِيٍّ، حَدَّثَنِي أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تُطَلِّقُوا النِّسَاءَ إِلَّا مِنْ رِيبَةٍ، فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الذَّوَّاقِينَ وَلَا الذَّوَّاقَاتِ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7848.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-8057.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20694-உபாதா பின் நஸிய்யி அவர்கள், அபூமூஸா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லை என்ற கருத்தில் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார்.
(நூல்: இலலுல் ஹதீஸ்-1284 (4/98)
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- இப்னுல் கத்தான் அவர்கள், இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களை சரியானதல்ல என்று விமர்சித்துள்ளார்கள். (நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம்-1281)
1 . இந்தக் கருத்தில் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3064 , 3065 , 3066 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7848 ,
2 . ஷஹ்ர்..
3 . அபூஉமாமா
இதனுடன் தொடர்புடைய செய்தி:
பார்க்க: அக்பாரு அஸ்பஹான்-240 .
சமீப விமர்சனங்கள்