அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, “மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாசல் சிறந்ததா? அல்லது பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் சிறந்ததா? என்று உரையாடிக்கொண்டிருந்தோம்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய (இந்த மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது, பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் தொழும் நான்கு தொழுகைகளை விடச் சிறந்தது.
“பைத்துல் மக்திஸ் தொழும் இடங்களில் நல்லது. பைத்துல் மக்திஸை பார்க்கும் தூரத்தில் ஒரு வில் வளையும் அளவுக்காவது ஒருவருக்கு இடம் இருப்பது இந்த உலகத்தையும், இந்த உலகிலுள்ள அனைத்தையும் விட சிறந்தது எனக் கருதும் நிலை (மறுமை நாளுக்கு நெருக்கத்தில்) ஏற்படும்” என்று கூறினார்கள்.
(almujam-alawsat-8230: 8230)حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، نا أَحْمَدُ بْنُ حَفْصٍ، حَدَّثَنِي أَبِي، نا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنِ الْحَجَّاجِ بْنِ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ:
تَذَاكَرْنَا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا أَفْضَلُ: مَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ مَسْجِدُ بَيْتِ الْمَقْدِسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَرْبَعِ صَلَوَاتٍ فِيهِ، وَلَنِعْمَ الْمُصَلَّى، وَلَيُوشِكَنَّ أَنْ يَكُونَ لِلرَّجُلِ مِثْلُ سِيَةِ قَوْسِهِ مِنَ الْأَرْضِ حَيْثُ يَرَى بَيْتَ الْمَقْدِسِ خَيْرًا لَهُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ قَتَادَةَ إِلَّا الْحَجَّاجُ، وَسَعِيدُ بْنُ بَشِيرٍ، تَفَرَّدَ بِهِ عَنِ الْحَجَّاجِ: إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، وَتَفَرَّدَ بِهِ عَنْ سَعِيدٍ: مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي دَاوُدَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8230.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . மூஸா பின் ஹாரூன்
3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹஃப்ஸ்
4 . ஹஃப்ஸ் பின் அப்துல்லாஹ்
5 . இப்ராஹீம் பின் தஹ்மான்
6 . ஹஜ்ஜாஜ் பின் ஹஜ்ஜாஜ் அல்பாஹிலீ
7 . கதாதா
8 . அபுல்கலீல்-ஸாலிஹ் பின் அபூமர்யம்
9 . அப்துல்லாஹ் பின் ஸாமித்
10 . அபூதர் (ரலி)
1 . மூஸா பின் ஹாரூன் அவர்களைப் போன்று முஹம்மத் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார். (ஹாகிம்-8553)
2 . கதாதா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹஜ்ஜாஜ் பின் ஹஜ்ஜாஜ் அவர்கள், கதாதா —> அபுல்கலீல் —> அப்துல்லாஹ் பின் ஸாமித் —> அபூதர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்…
3 . கதாதா அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் பஷீர் என்பவர், கதாதா —> ஸயீத் பின் ஹஸன் பின் யஸார் —> அப்துல்லாஹ் பின் ஸாமித் —> அபூதர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். (பஸ்ஸார்-3965,… )
ஸயீத் பின் பஷீர் போன்றே கதாதா அவர்களிடமிருந்து ஹிஷாம் அத்தஸ்துவாஈ அவர்கள் அறிவித்துள்ளதை பஸ்ஸார் இமாம் குறிப்பிட்டுள்ளார்.
4 . சில அறிவிப்பாளர்தொடரில் ஸயீத் பின் ஹஸன் பின் யஸார் என்பவர் கூறப்படாமல், கதாதா —> அப்துல்லாஹ் பின் ஸாமித் —> அபூதர் (ரலி) என்று உள்ளது.
இந்த பல வகை அறிவிப்பாளர்தொடர்களில், கதாதா —> அபுல்கலீல் —> அப்துல்லாஹ் பின் ஸாமித் —> அபூதர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரே சரியானது என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் குறிப்பிட்டுள்ளார்.
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (6/ 244)
1105- وَسُئِلَ عَنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَرْبَعِ صَلَوَاتٍ فِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ … الْحَدِيثَ.
فَقَالَ: يَرْوِيهِ قَتَادَةُ، وَاخْتُلِفَ عَنْهُ؛
فَرَوَاهُ حَجَّاجُ بْنُ الْحَجَّاجِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ.
وَاخْتُلِفَ عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ، فَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عُقْبَةَ السَّدُوسِيُّ، عَنِ الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ بشير، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ.
وَكَذَلِكَ رَوَى سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، وَقَالَ عَلِيُّ بْنُ حُجْرٍ، وَهِشَامُ بْنُ خَالِدٍ، وَغَيْرُهُمَا: عَنِ الْوَلِيدِ، عَنْ سَعِيدِ بْنِ بَشِيرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، لَمْ يَذْكُرْ بَيْنَهُمَا أَحَدًا، وَقَتَادَةُ لَمْ يَسْمَعْهُ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ.
وَقَوْلُ حَجَّاجِ بْنِ حَجَّاجٍ: عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ أَشْبَهُ بالصواب.
(நூல்: அல்இலலுல் வாரிதா-1105, 6/243)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-34194-கதாதா பின் திஆமா ஸதூஸிய்யி அவர்கள் பலமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். எனவே அன்அனாவாக இவர் அறிவித்தால் ஏற்கக்கூடாது என்பது சிலரின் கருத்தாகும். ஆனால் இவரிடமிருந்து ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் அறிவிக்கும்போது அன்அனாவாக அறிவித்தாலும் இந்த பிரச்சனை இல்லை என்பதற்கு ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் உத்தரவாதம் அளித்துள்ளார் என்பதால் அந்த செய்திகளில் பிரச்சனை இல்லை என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். - வேறுசிலர் பொதுவாக கதாதா அவர்களின் தத்லீஸ் செய்தியை ஏற்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
- மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் அபுல்கலீல்-ஸாலிஹ் பின் அபூமர்யம் அவர்களின் மாணவர்களில் கதாதா அவர்களே முன்னுரிமை பெற்ற மாணவர் ஆவார். எனவே இந்தச் செய்தியை கதாதா தத்லீஸ் செய்துள்ளார் என்று கூறமுடியாது.
- இவ்வாறே இந்தச் செய்தியை இப்ராஹீம் பின் தஹ்மான் அவர்கள் ஹஜ்ஜாஜ் பின் ஹஜ்ஜாஜ் அவர்களிடமிருந்து, ஹஜ்ஜாஜ் —> கதாதா என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.
- நேரடியாக கதாதா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளதாக மஷ்யகது இப்னு தஹ்மான்-62 இல் உள்ளது.
இப்ராஹீம் பின் தஹ்மான் அவர்கள், கதாதாவை சந்திக்கவில்லை என்பதால் அது முன்கதிஃ ஆகும். (என்றாலும் சிலர் இந்த அறிவிப்பாளர்தொடரை சரி என்றும் கூறியுள்ளனர்)
இதில் வரும் ராவீ-3742-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹஃப்ஸ், ராவீ-13635-ஹஃப்ஸ் பின் அப்துல்லாஹ் ஆகியோர் ஹஸன்தரத்தில் உள்ளவர்கள் என்பதால் இந்தச் செய்தி ஹஸன் தரமாகும்.
6 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இப்னு தஹ்மான், ஹஜ்ஜாஜ் பின் ஹஜ்ஜாஜ் —> கதாதா —> அபுல்கலீல் —> அப்துல்லாஹ் பின் ஸாமித் —> அபூதர் (ரலி)
பார்க்க: மஷ்யகது இப்னு தஹ்மான்-62 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6983 , 8230 , ஹாகிம்-8553 ,
- மஷ்யகது இப்னு தஹ்மான்-62.
مشيخة ابن طهمان (ص: 118)
62 – عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: تَذَاكَرْنَا وَنَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهُمَا أَفْضَلُ: أَمَسْجِدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ بَيْتُ الْمَقْدِسِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَرْبَعِ صَلَوَاتٍ فِيهِ وَلَنِعْمَ الْمُصَلَّى هُوَ , وَلَيُوشِكَنَّ لَأَنْ يَكُونَ لِلرَّجُلِ مِثْلُ شَطَنِ فَرَسِهِ مِنَ الْأَرْضِ حَيْثُ يَرَى مِنْهُ بَيْتَ الْمَقْدِسِ خَيْرًا لَهُ مِنَ الدُّنْيَا جَمِيعًا» . قَالَ: أَوْ قَالَ: «خَيْرٌ لَهُ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
…
- ஸயீத் பின் பஷீர் —> கதாதா —> அப்துல்லாஹ் பின் ஸாமித் —> அபூதர் (ரலி)
பார்க்க: முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-608, தாரீகு திமிஷ்க்-, ஷுஅபுல் ஈமான்-3849 ,
…
மேலும் பார்க்க: புகாரி-1190 .
சமீப விமர்சனங்கள்