போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள், நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தை பெறுங்கள், பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-8312: 8312)حَدَّثَنَا مُوسَى بْنُ زَكَرِيَّا، نا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ فُضَيْلٍ الْجَزَرِيُّ، نا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ أَبِي دَاوُدَ، نا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اغْزُوا تَغْنَمُوا، وَصُومُوا تَصِحُّوا، وَسَافِرُوا تَسْتَغْنُوا»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ سُهَيْلٍ، بِهَذَا اللَّفْظِ، إِلَّا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-8312.
Almujam-Alawsat-Shamila-8312.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-8531.
إسناد شديد الضعف فيه موسى بن زكريا التستري وهو متروك الحديث (جوامع الكلم)
இதன் அறிவிப்பாளர்தொடர் மிக பலவீனமானது.
- இதில் வரும் மூஸா பின் ஸக்கரிய்யா மத்ரூக் ஆவர்.
பார்க்க : லிஸானுல் மீஸான் பாகம் : 8, பக்: 198
وحكى الحاكم عن الدارقطني أنه متروك
لسان الميزان: (8 / 198)
تكلم فيه الدارقطني
لسان الميزان: (8 / 198)
- மேலும் இதில் வரும் சுஹைர் பின் முஹம்மத் என்பவர் பலவீனமானவராவார்.
அவரிடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது மறுக்கப்பட வேண்டியவையாகும். அவரிடமிருந்து பஸராவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பது ஆதாரப்பூர்வமானதாகும் என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
கூறுகிறார்கள். சுஹைர் இடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பதில் மறுக்கப்பட வேண்டியவைகள் உள்ளன என்று அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
கூறியுள்ளார்கள்.
நூல் ; தஹ்தீபுத் தஹ்தீப்
- சுஹைர் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மத் பின் சுலைமான் பின் அபிதாவூத் ஆவார். இவர் ஹிரான் பகுதியைச் சார்ந்தவர். ஹிரான் என்பது சிரியாவை பகுதியைச் சார்ந்ததாகும்.
- ஹிரான் பகுதியுள்ளவர்கள் சிரியாவைச் சார்ந்தவர்கள்.
நூல் : ஷரஹுல் அகீதத்துத் தஹாவிய்யா
- எனவே இந்தச் செய்தி சிரியா நாட்டவர் மூலம் அறிவிப்பதால் இது சரியான செய்தி அல்ல.
சமீப விமர்சனங்கள்