தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-10811

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் பயணம் செல்லும் போது (வழியில்) பசுமையான நிலப்பரப்பைக் கண்டால் பயணம் செய்வதை நிறுத்திவிட்டு உங்கள் கால்நடைகளுக்கு அதற்குரிய பங்கை கொடுங்கள். அல்லாஹ் இரக்கமுள்ளவன். இரக்கம் காட்டுவதை அவன் விரும்புகிறான். நீங்கள் (வழியில்) வறண்டுப்போன நிலப்பரப்பைக் கண்டால் அதை (விரைவாக) கடந்து செல்லுங்கள்.

இரவில் பயணம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில் இரவு நேரத்தில் தான் பூமி சுருட்டப்படுகிறது (சுருக்கப்படுகிறது).

இரவில் பாதையின் நடுப்பகுதியில் ஓய்வெடுப்பதை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். ஏனெனில் அதுதான் பாம்புகளும், வனவிலங்குகளும் ஒதுங்குமிடமாகவும், வந்துசெல்லும் இடமாகவும் உள்ளது.

அறிவிப்பவர்: அபுல் ஹுவைரிஸ்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10811)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا مُحَمَّدُ بْنُ أَبِي نُعَيْمٍ الْوَاسِطِيُّ، ثنا هُشَيْمٌ، حَدَّثَنِي الْمَدِينِيُّ، عَنْ أَبِي الْحُوَيْرِثِ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:

إِذَا كَانَتِ الْأَرْضُ مُخْصِبَةً، فَتَقَصَّدُوا فِي السَّيْرِ، وَأَعْطُوا الرِّكَابَ حَقَّهَا؛ فَإِنَّ اللهَ تَعَالَى رَفِيقٌ يُحِبُّ الرِّفْقَ، وَإِنْ كَانَتْ مُجْدِبَةً فَانْجُوا، وَعَلَيْكُمْ بِالدُّلْجَةِ؛ فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ، وَإِيَّاكُمْ وَالتَّعْرِيسَ عَلَى ظَهْرِ الطَّرِيقِ؛ فَإِنَّهُ مَأْوَى الْحَيَّاتِ، وَمَدْرَجَةُ السِّبَاعِ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10811.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-10665.




  • இது பலவீனமான, மவ்கூஃபான செய்தி.
  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அபூநுஐம் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார். என்றாலும் அபூஹாத்திம் அர்ராஸீ,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸினான் போன்றோர் நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் நம்பகமானவர் எனக் கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 900 ), தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3 / 713 )
  • மேலும் இதில் வரும் மதீனீய்யி என்பவர் யாரென அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-5302 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.