தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-109

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இன்ன பனூ கூட்டத்தாரின் குப்பை மேட்டில் போடப்பட்டு மூன்று நாட்கள் கிடந்தார்கள். பிறகு அங்கு 12 பேர் வந்தார்கள். அவர்களில் எனது பாட்டனார் மாலிக் பின் அபூஆமிர், ஹுவைத்திப் பின் அப்துல்உஸ்ஸா, ஹகீம் பின் ஹிஸாம், அப்துல்லாஹ் பின் ஸுபைர், ஆயிஷா பின்த் உஸ்மான் ஆகியோர் இருந்தனர்.

…அவர்களிடம் 4 வயது ஒட்டகமும், விளக்கும் இருந்தது…

அதில் உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கிடத்தி பகீஃ எனும் பொதுமையவாடிக்கு கொண்டு வந்தனர்…

பிறகு அவருக்கு யார் ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு ஹகீம் பின் ஹிஸாம் அல்லது ஹுவைத்திப் தொழ வைத்தார்.

பிறகு அங்கு அவர்களை அடக்கம் செய்ய நாடினார்கள். அப்போது பனூ மாஸின் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை முஸ்லிம்களுடன் நீங்கள் அடக்கம் செய்தால் மக்களிடத்தில் நான் சொல்லி விடுவேன் என்று கூறினார். எனவே அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கவ்கப் என்பவரின் தோட்டத்துக்கு கொண்டு வந்தார்கள். பிறகு கப்ர் குழித் தோண்டி அதில் உடலை வைத்தார்கள். அப்போது ஆயிஷா பின்த் உஸ்மான் அவர்கள் சத்தமிட்டு அழ ஆரம்பித்து விட்டார். உடனே இப்னுஸ் ஸுபைர் அவர்கள், அமைதியாக இரு. அல்லாஹ்வின் மீது ஆணையாக! திரும்ப கத்தினால் உன் கண்ணிலேயே குத்தி விடுவேன் என்று கூறினார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்து மண்ணைப் போட்ட பிறகு, இப்போது உனக்கு வேண்டிய அளவு கத்தி (அழுது) கொள்! என்று இப்னுஸ் ஸுபைர் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்மலிக் பின் அப்துல்அஸீஸ்

மாலிக் இமாம் கூறினார்:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், இதற்கு முன்பு இந்த தோட்டத்தை கடந்து சென்றுள்ளார்கள். அப்போது அவர்கள், இந்த இடத்தில் ஒரு நல்ல மனிதர் அடக்கம் செய்யப்படுவார் என்று கூறினார்கள்.

அபுல்காஸிம் கூறுகிறார்:

ஹுஷ்ஷு (அல்லது ஹஷ்ஷு) என்பதின் பொருள் தோட்டமாகும்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 109)

حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي الطَّاهِرِ بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، ثنا عَبْدُ الْمَلِكِ الْمَاجِشُونُ، قَالَ: سَمِعْتُ مَالِكًا، يَقُولُ:

قُتِلَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَقَامَ مَطْرُوحًا عَلَى كُنَاسَةِ بَنِي فُلَانٍ ثَلَاثًا، فَأَتَاهُ اثْنَا عَشَرَ رَجُلًا، فِيهِمْ جَدِّي مَالِكُ بْنُ أَبِي عَامِرٍ، وَحُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى، وَحَكِيمُ بْنُ حِزَامٍ، وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ، وَعَائِشَةُ بِنْتُ عُثْمَانَ مَعَهُمْ مِصْبَاحٌ فِي حِقٍّ فَحَمَلُوهُ عَلَى بَابٍ، وَإِنَّ رَأْسَهُ يَقُولُ عَلَى الْبَابِ طَقْ طَقْ حَتَّى أَتَوْا بِهِ الْبَقِيعَ، فَاخْتَلَفُوا فِي الصَّلَاةِ عَلَيْهِ، فَصَلَّى عَلَيْهِ حَكِيمُ بْنُ حِزَامٍ أَوْ حُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى – شَكَّ عَبْدُ الرَّحْمَنِ – ثُمَّ أَرَادُوا دَفْنَهُ، فَقَامَ رَجُلٌ مِنْ بَنِي مَازِنٍ فَقَالَ: وَاللهِ لَئِنْ دَفَنْتُمُوهُ مَعَ الْمُسْلِمِينَ، لَأُخْبِرَنَّ النَّاسَ، فَحَمَلُوهُ حَتَّى أَتَوْا بِهِ إِلَى حَشِّ كَوْكَبٍ، فَلَمَّا دَلُّوهُ فِي قَبْرِهِ صَاحَتْ عَائِشَةُ بِنْتُ عُثْمَانَ، فَقَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: اسْكُتِي فَوَاللهِ لَئِنْ عُدْتِ لَأَضْرِبَنَّ الَّذِي فِيهِ عَيْنَاكِ، فَلَمَّا دَفَنُوهُ وَسَوَّوْا عَلَيْهِ التُّرَابَ قَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: صِيحِي مَا بَدَا لَكِ أَنْ تَصِيحِي، قَالَ مَالِكٌ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ، قَبْلَ ذَلِكَ يَمُرُّ بِحُشٍّ كَوْكَبٍ فَيَقُولُ: لَيُدْفَنَنَّ هَهُنَا رَجُلٌ صَالِحٌ ” قَالَ أَبُو الْقَاسِمِ: ” الْحُشُّ: الْبُسْتَانُ “


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-109.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-107.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அம்ர் பின் அபுத்தாஹிர்

3 . அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் ஹகம்

4 . அப்துல்மலிக் பின் அப்துல்அஸீஸ்-அல்மாஜிஷூன்

5 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் (ரஹ்)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26544-அப்துல்மலிக் பின் அப்துல்அஸீஸ்-அல்மாஜிஷூன் என்பவரை சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

قال مصعب الزبيري : كان مفتي أهل المدينة في زمانه .
وذكره ابن حبان في « الثقات » .
وقال ابن عبد البر : كان فقيها فصيحا . دارت عليه الفتيا ، وعلى أبيه قبله ، وهو فقيه ابن فقيه ، وكان ضرير البصر ، وكان مولعا بسماع الغناء .
قال : وقال أحمد بن حنبل : قدم علينا ومعه من يغنيه .

وقال يحيى بن أكثم : كان عبد الملك بحرا لا تكدره الدلاء .
وقال أحمد بن المعدل : كلما تذكرت أن التراب يأكل لسان عبد الملك صغرت الدنيا في عيني . فقيل له : أين لسانك من لسانه ؟ فقال : كان لسانه إذا تعايا أفصح من لساني إذا تحايا .

இவரை பற்றி பாராட்டியவர்கள்:

  • இவர் மதீனாவில் மார்க்கத்தீர்ப்பு அளிக்கும் முஃப்தியாக இருந்தார் என்றும், சிறந்த இலக்கியவாதியாக இருந்தார் என்றும் முஸ்அப் ஸுபைரீ, இப்னு அப்துல்பர், யஹ்யா பின் அக்ஸம், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் முஅத்தில் ஆகியோர் கூறியுள்ளனர்.
  • இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள், இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரை ஸதூக் என்றும் குறைந்த ஹதீஸுடையவர் என்றும் கூறியுள்ளார்.
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் ஸதூக் என்றாலும் சில செய்திகளை தவறாக அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

(முஃப்தியாக இருப்பது, இலக்கியவாதியாக இருப்பது ஹதீஸ்கலையில் நற்சான்றாக ஆகாது. அந்தக் காலத்தில் ஃபிக்ஹ் துறையில் ஈடுபடுவோர் ஹதீஸை பற்றி தெரியாமலும் இருந்துள்ளனர்.)


وقال الساجي : ضعيف في الحديث ، صاحب رأي ، وقد حدث عن مالك بمناكير : حدثني القاسم ، ثنا الأثرم قال : قلت لأحمد : إن عبد الملك بن الماجشون يقول في سند : أو كذا . قال : من عبد الملك ؟ عبد الملك من أهل العلم ؟ من يأخذ من عبد الملك ؟ وحدثني محمد بن روح ، سمعت أبا مصعب يقول : رأيت مالك بن أنس طرد عبد الملك ؛ لأنه كان يتهم برأي جهم .
قال الساجي : وسألت عمرو بن محمد العثماني عنه ، فجعل يذمه . وقال مصعب الزبيري : كان يفتي ، وكان ضعيفا في الحديث .


وقال الآجري ، عن أبي داود : كان لا يعقل الحديث .
قال ابن البرقي : دعاني رجل إلى أن أمضي إليه ، فجئناه ، فإذا هو لا يدري الحديث أيش هو .

இவரை பற்றி விமர்சித்தவர்கள்:

  • இவர் முஃப்தியாக இருந்தார் என்ற தகவலைக் கூறிய முஸ்அப் ஸுபைரீ அவர்கள், இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.
  • ஸாஜீ அவர்கள், இவர் ஹதீஸில் பலவீனமானவர்; மார்க்கத்தில் சுயக்கருத்தை கூறும் பிரிவினர்களைச் சேர்ந்தவர்; மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    இமாமிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • இவர் அறிவிக்கும் ஒரு செய்தி பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    இமாமிடம் கேட்கப்பட்டபோது, இந்த அப்துல்மலிக் என்பவர் யார்? இவர் கல்வியாளரா? இவரிடமிருந்து யார் கல்வியை பெறுவது? என்று கூறினார்.
  • இப்னுல் பர்கீ அவர்கள், இவரிடம் ஹதீஸைக் கேட்க ஒருவர் அழைத்தார். அவரிடம் நாங்கள் சென்று பார்த்தபோது அவருக்கு ஹதீஸ் என்றால் என்னவென்றே தெரியாதவராக இருந்தார் என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இவரின் மாணவர்களில் ஒருவரான அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இமாம் அவர்களும் கூறியுள்ளார்.
  • அபூயஃலா அல்கலீலி அவர்கள், இவர் அந்தளவுக்கு பலமானவர் அல்ல என்று கூறியுள்ளார்.
  • இப்ராஹீம் பின் முன்திர் அல்ஹிஸாமீ அவர்கள், இவர் மார்க்கவிசயத்தில் சந்தேகிக்கப்பட்டவராக இருந்தார் என்று கூறியுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-18/358, அல்இக்மால்-8/325, அல்காஷிஃப்-3/324, தஹ்தீபுத் தஹ்தீப்-2/618, தக்ரீபுத் தஹ்தீப்-1/624, தஹ்ரீரு தக்ரீபுத் தஹ்தீப்-4195)

1 . எனவே இந்த நிலையில் உள்ளவர்கள் அறிவிக்கும் செய்திகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இவர்கள் தனித்து அறிவிக்கும் செய்திகள் பலவீனமானவையாகும். இந்தச் செய்தியை இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


2 . மேலும் உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு ஹிஜ்ரீ 35 இல் நடந்தது. மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் பிறந்தது ஹிஜ்ரீ 89 அல்லது 93 ஆகும். இந்தச் செய்தியை தனக்கு யார் அறிவித்தார் என்பதை மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
இமாம் அவர்கள் குறிப்பிடவில்லை.

எனவே இது பலவீனமான செய்தியாகும்.


இப்னு ஹஸ்ம் பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 456
வயது: 72
அவர்கள்,  இந்தச் செய்தி பொய்யான செய்தி என்று கீழ்க்கண்டவாறு விமர்சித்துள்ளார்.

الفصل في الملل والأهواء والنحل (4/ 123):
وَأما قَوْله من قَالَ أَنه رضي الله عنه أَقَامَ مطروحاً على مزبلة ثَلَاثَة أَيَّام فكذب بحت وأفك مَوْضُوع وتوليد من لَا حَيَاء فِي وَجهه بل قتل عَشِيَّة وَدفن من ليلته رضي الله عنه شهد دَفنه طَائِفَة من الصَّحَابَة وهم جُبَير بن مطعم وَأَبُو الجهم بن حيفة وَعبد الله بن الزبير ومكرم بن نيار وَجَمَاعَة غَيرهم هَذَا مِمَّا لَا يتمادى فِيهِ أحد مِمَّن لَهُ علم بالأخبار

وَلَقَد أَمر رَسُول الله صلى الله عليه وسلم يَرْمِي أجساد قَتْلَى الْكفَّار من قُرَيْش يَوْم بدر فِي القليب وَألقى التُّرَاب عَلَيْهِم وهم شَرّ خلق الله تَعَالَى

وَأمر عليه السلام أَن يحْفر أخاديد لقتلى يهود قُرَيْظَة ‌وهم ‌شَرّ ‌من ‌وارته ‌الأَرْض فمواراة الْمُؤمن وَالْكَافِر فرض على الْمُسلمين فَكيف يجوز لذَلِك حَيَاء فِي وَجهه أَن ينْسب إِلَى عَليّ وَهُوَ الإِمَام وَمن بِالْمَدِينَةِ من الصَّحَابَة أَنهم تركُوا رجلا مَيتا ملقى بَين أظهرهم على مزبلة لَا يوارونه وَلَا نبالي مُؤمنا كَانَ أَو كَافِرًا وَلَكِن الله يَأْبَى إِلَّا أَن يفضح الْكَذَّابين بألسنتهم وَلَو فعل هَذَا عَليّ لكَانَتْ جرحة لِأَنَّهُ لَا يخلوا إِن يكون عُثْمَان كَافِرًا أَو فَاسِقًا أَو مُؤمنا فَإِن كَانَ كَافِرًا أَو فَاسِقًا عِنْده فقد كَانَ فرضا على عَليّ أَن يفْسخ أَحْكَامه فِي الْمُسلمين فَإِذا لم يفعل فقد صَحَّ أَنه كَانَ مُؤمنا عِنْده فَكيف يجوز أَن ينْسب ذُو حَيَاء إِلَى عَليّ أَنه ترك مُؤمنا مطروحا مَيتا على مزبلة لَا يَأْمر بموارته أم كَيفَ يجوز أَن يَظُنّهُ بِهِ أَنه أنفذ أَحْكَام كَافِر أَو فَاسق على أهل الْإِسْلَام مَا أحد أَسْوَأ ثَنَاء على عَليّ من هَؤُلَاءِ الكذبة الفجرة…


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.