தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-14331

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 14331)

حدثنا عبدُالله بن وُهَيب الغَزِّي، ثنا محمَّد بن أبي السَّريِّ العَسْقَلاني، ثنا شُعَيب بن إسحاق، عن ابن جُرَيج، عن عَطاء، عن عبد الله بن عَمرو- رفعَهُ- قال:

«مَا مِنْ دَابَّةٍ- طَائِرٍ ولاَ غَيْرِهِ- يُقْتَلُ بِغَيْرِ حَقٍّ إِلاَّ سَيُخَاصِمُهُ يَوْمَ القِيَامَةِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-14331.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26208-அப்துல்லாஹ் பின் உஹைப் அல்ஃகஸ்ஸீ என்பவர் தப்ரானீ அவர்களின் ஆசிரியர் ஆவார். மேலும் இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    போன்ற பலரும் இவரிடமிருந்து சில செய்திகளை அறிவித்துள்ளனர் என்று இப்னு அஸாகிர் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: தாரீகு திமிஷ்க்-3610, 33/273)

  • தப்ரானீ அவர்களின் ஆசிரியர்களைப் பற்றிய குறிப்பைத் தொகுத்துள்ள அபுத்தய்யிப் அவர்கள் இவரின் நிலை அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: இர்ஷாதுல் காழீ-618)

  • என்றாலும் இவரிடமிருந்து முக்கியமான அறிஞர்கள் அறிவித்திருப்பதால் இவர் ஸதூக் எனும் நடுத்தரமானவர் நடுத்தரமானவர் - حسن الحديث ஆவார்.
  • மேலும் ராவீ-38040-முஹம்மத் பின் அபுஸ்ஸரீ என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். சில செய்திகளை இவர் தவறாக அறிவித்துள்ளார். பலமானவர்கள் வழியாக மட்டுமே அறிவிப்போம் என்ற கொள்கையுடைய அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்களும் இவரிடமிருந்து அறிவித்துள்ளார். அபூஸுர்ஆ, அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    ஆகியோரும் அறிவித்துள்ளனர்.
  • மேற்கண்ட செய்தியின் கருத்தில் வேறு சரியான செய்திகளும் வந்திருப்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.

மேலும் பார்க்க: நஸாயீ-4349 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.