தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4349

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 

சிட்டுக்குருவிகளை உண்ண அனுமதி.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சிட்டுக்குருவிகளையோ அதைவிடப் பெரிய பறவைகளையோ நியாயமான முறையில் இல்லாமல் கொன்றால், அவனை அதுபற்றி மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ் விசாரிக்காமல் விடமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“அல்லாஹ்வின் தூதரே! அதனுடைய நியாயமான முறை என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவற்றை அறுத்து அவன் உண்பது (நியாயமான முறையாகும்); (வீணாகப் பிடித்து) அவற்றின் தலையை முறித்து வீசிவிடுவது (நியாயமற்ற முறையாகும்)” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(நஸாயி: 4349)

إِبَاحَةُ أَكْلِ الْعَصَافِيرِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ صُهَيْبٍ، مَوْلَى ابْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مِنْ إِنْسَانٍ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقِّهَا، إِلَّا سَأَلَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَنْهَا»، قِيلَ يَا رَسُولَ اللَّهِ، وَمَا حَقُّهَا؟ قَالَ: «يَذْبَحُهَا فَيَأْكُلُهَا، وَلَا يَقْطَعُ رَأْسَهَا يَرْمِي بِهَا»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4349.
Nasaayi-Alamiah-4274.
Nasaayi-JawamiulKalim-4298.




(குறிப்பு: இந்தச் செய்தியை ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்களே முழுமையாக அறிவித்துள்ளார். சிலர் வார்த்தையை சுருக்கமாகவும், சிலர் கருத்தை சுருக்கமாகவும் அறிவித்துள்ளனர்)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் அப்துல்லாஹ்

3 . ஸுஃப்யான் பின் உயைனா

4 . அம்ர் பின் தீனார்

5 . ஸுஹைப் (இப்னு ஆமிர்-ரலி-அவர்களின் அடிமை)

6 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுஹைப் என்பவர் யார்?

இந்தச் செய்தியை அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
அவர்களிடமிருந்து அறிவிக்கும் அதிகமானோர் இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் அடிமையான ஸுஹைப் என்றே அறிவித்துள்ளனர் என்பதால் இதுவே சரியானதாகும்.


الجرح والتعديل لابن أبي حاتم (9/ 438):
2195 – أبو موسى ‌الحذاء روى عن عبد الله بن عمرو عن النبي صلى الله عليه وسلم روى الثوري عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عنه سمعت أبي يقول ذلك. نا عبد الرحمن قال سمعت ابى يقول: أبو موسى ‌الحذاء لا يعرف

பார்க்க: குப்ரா நஸாயீ-1374 .


الجرح والتعديل لابن أبي حاتم (4/ 445):
1954 – ‌صهيب ‌الحذاء مولى عبد الله بن عامر أبو موسى مكي روى عن عبد الله بن عمرو روى عنه عمرو بن دينار سمعت أبي يقول


تهذيب الكمال في أسماء الرجال (13/ 243):
2907 – صهيب الحذاء ، أبو موسى المكي، مولى عَبد اللَّهِ بْن عامر.
رَوَى عَن: عَبد اللَّهِ بْن عَمْرو بن العاص (س) .
رَوَى عَنه: عَمْرو بن دينار (س) .
ذكره ابنُ حِبَّان فِي كتاب “الثقات”.
وفرق أبو حاتم بينه وبين أبي موسى الحذاء. الذي يروي عَنْ عَبد اللَّهِ بْن عَمْرو بن العاص (س) ، ويروي عَنه: حبيب بْن أبي ثابت (س) ، ومجاهد بن جبر، وَقَال فيه : لا يعرف ولا يسمى .
روى له النَّسَائي حديثا…


1 . இவரின் பெயர் பற்றி ஸுஹைப் அல்ஹத்தாஃ, அபூமூஸா மக்கீ (இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் அடிமை) என்றும்; இவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து அம்ர் பின் தீனார் அவர்கள் ஹதீஸை அறிவித்துள்ளார் என்றும் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

2 . அபூமூஸா அல்ஹத்தாஃ என்ற பெயரில் ஒருவர் உள்ளார். இவர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஹபீப் பின் அபூஸாபித் அவர்கள் ஹதீஸை அறிவித்துள்ளார் என்று ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள் அறிவித்துள்ளார் என்று அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்களில் கூறப்பட்டுள்ளது. அபூமூஸா அல்ஹத்தாஃ என்பவர் பற்றி அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், இவர் யார் என அறியப்படாதவர் என்றும்; இவரின் இயற்பெயர் அறியப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/438, 4/445, தஹ்தீபுல் கமால்-13/243)

(அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள், ஸுஹைப் அல்ஹத்தாஃ என்பவர் பற்றிய குறிப்பில் இவர் அறியப்படாதவர் என்று கூறவில்லை. ஆனால் சில ஹதீஸ் சாஃப்ட்வேர்களில் இவ்வாறு கூறியதாக இருப்பது தவறாகும்)


புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
ஆகியோர் ஸுஹைப் அல்ஹத்தாஃ, அபூமூஸா அல்ஹத்தாஃ என்ற பெயரில் தனித்தனியான குறிப்புகளைக் கூறியிருப்பதால் இவரை இருவர் என கருதியுள்ளனர் எனத் தெரிகிறது.

(நூல்கள்: தாரீகுல் கபீர்-5809, 644 , அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/438, 4/445, அஸ்ஸிகாத்-4/381, 5/584)


மிஸ்ஸீ இமாம் அவர்கள் இரண்டு பெயர்களும் ஒருவரைத் தான் குறிக்கின்றன எனக் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்களும் குறிப்பிட்டுள்ளார்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-13/243, 34/333, தஹ்தீபுத் தஹ்தீப்-2/219, 4/595)


ميزان الاعتدال (4/ 578):
(10654) -‌‌ أبو موسى الحذاء [س] .
عن عبد الله بن عمرو في صلاة القاعد.
لا يعرف. تفرد به حبيب بن أبي ثابت، ولعله عبد الله بن باباه، فإن الأعمش سماه عن حبيب عنه، ثم قال بعده صاحب التهذيب:

(10655) – أبو موسى الحذاء المكي.
له عن عبد الله بن عمرو. واسمه صهيب. وعنه عمرو بن دينار.
قلت : هو الاول. فما يظهر لي وجه التفرقة. ويكون صدوقا

தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், அபூமூஸா அல்ஹத்தாஃ என்பவர் இடம்பெறும் வேறொரு செய்தியைக் குறிப்பிடும்போது இவர் அப்துல்லாஹ் பின் பாபாஹ் வாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். காரணம் அஃமஷ் அவர்கள், அந்தச் செய்தியை ஹபீப் பின் அபூஸாபித் —>அப்துல்லாஹ் பின் பாபாஹ் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: இப்னு மாஜா-1229 .

ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
அவர்கள், ஹபீப் பின் அபூஸாபித் —> அபூமூஸா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

பார்க்க: குப்ரா நஸாயீ-1374 .

அபூமூஸா என்பவர் அபூமூஸா அல்ஹத்தாஃ-ஸுஹைப் என்பவர் ஆவார். இவர் அப்துல்லாஹ் பின் அம்ர் அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளார். இவரும், முதலில் கூறப்பட்டவரும் ஒருவரே ஆவார். இருவரையும் வெவ்வேறானவர்கள் என்று கூறுவதற்கு காரணம் இல்லை. எனவே இவர் ஸதூக் எனும் தரத்தில் உள்ளவர் ஆவார் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: மீஸானுல் இஃதிதால்-4/578)

(அப்துல்லாஹ் பின் பாபாஹ் என்பவர் வேறு ஒருவர் ஆவார். அஃமஷ், ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97
இறப்பு ஹிஜ்ரி 161
வயது: 64
ஆகியோரின் அறிவிப்புகளில் ஸவ்ரீ அவர்களின் அறிவிப்புக்கே அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் முன்னுரிமை தந்துள்ளார்)


ராவீ-19888-ஸுஹைப் அல்ஹத்தாஃ, ராவீ-2661-அபூமூஸா அல்ஹத்தாஃ இருவரும் ஒருவரே என்று முடிவு செய்வதே சரியானதாகும். இதற்கான காரணம்:

1 . இருவரும் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்துள்ளதாக குறிப்பு உள்ளது.

2 . இருவரும் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளனர்.

3 . இருவரின் புனைப் பெயர் ஒன்றாக உள்ளது. (அபூமூஸா என்பது புனைப்பெயர். அவரின் இயற்பெயர் அறியப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஸுஹைப் என்பவரின் புனைப்பெயர் அபூமூஸா என்று உள்ளது)

4 . அல்ஹத்தாஃ எனும் தொழில் பெயரை இருவருக்கும் கூறப்பட்டுள்ளது.

5 . இரு பெயர்களும் வெவ்வேறானவர்களை குறிப்பிடுகிறது என்பதற்கு சரியான காரணம் இல்லை.

(தகவல்: ஃபள்லுர்ரஹீமுல் வதூத்-10/252, 253)


العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (2/ 445):

‌‌2972 – حَدثنِي هَارُون بن مَعْرُوف قَالَ حَدثنَا بن عُيَيْنَة قَالَ قلت لمسعر ‌من ‌رَأَيْت ‌أَشد ‌تثبتا ‌فِي ‌الحَدِيث قَالَ مَا رَأَيْت مثل الْقَاسِم وَعَمْرو بن دِينَار يَعْنِي الْقَاسِم بن عبد الرَّحْمَن

மிஸ்அர் பின் கிதாம் அவர்களிடம் ஹதீஸை பிறரிடம் கேட்பதிலும், பிறருக்கு அறிவிப்பதிலும் மிகவும் பேணுதல் உள்ளவர்களாக; உறுதிப்படுத்திக்கொள்ளக்கூடியவர்களாக யாரை நீங்கள் கண்டீர்கள் என்று ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள் கேட்க, அதற்கு மிஸ்அர் அவர்கள், காஸிம் பின் அப்துர்ரஹ்மான், அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
ஆகியோரை போன்று பேணுதல் உள்ளவர்களை நான் கண்டதில்லை என்று பதிலளித்தார்.

(நூல்கள்: அல்இலல் வ மஃரிஃபதுர்ரிஜால்-2972, ஸியரு அஃலாமின் நுபலா-5/302)

  • மேற்கண்ட செய்தியில் இடம்பெறும் ஸுஹைப் அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    அறிவித்துள்ளார் என்பதுடன், அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    அவர்கள் பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்பார் என்று மிஸ்அர் அவர்கள் கூறியிருப்பதால் ஸுஹைப் அவர்களை பலமானவர் என்று முடிவு செய்யலாம். இந்தக் கருத்து வேறு வகையான அறிவிப்பாளர்தொடரிலும் வந்திருப்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.
  • மேலும் ஸுஹைபிடமிருந்து ஹபீப் பின் அபூஸாபித் என்பவரும் அறிவித்துள்ளார் என்பதால் இவரை அறியப்படாதவர் என்று கூறமுடியாது. (அம்ர் பின் தீனார்,பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    ஹபீப் ஆகிய 2 பேரும் முக்கியமான தாபிஈன்கள் ஆவார்கள்)
  • இவர் அறிவிக்கும் செய்தியின் கருத்திலும் நகாரத் – மறுக்கபட வேண்டிய அம்சம் எதுவும் இல்லை.
  • இதனுடன் மற்ற துணைச் சான்றுகள்: இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவரை பலமானவர் பட்டியலில் கூறியுள்ளார். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    அவர்கள் இவரின் செய்தியை பதிவு செய்துள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள் இவர் இடம்பெறும் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவரை ஸதூக் எனும் தரத்தில் கூறியுள்ளார்.

السيل الجرار المتدفق على حدائق الأزهار ط-أخرى (4/ 380)

وهكذا حديث من قتل عصفورا عبثا عج إلى الله يوم القيامة يقول يا رب إن فلانا قتلني عبثا ولم يقتلني منفعة وهو حديث مروي من طرق قد صحح الأئمة بعضها

இந்தச் செய்தியை சில அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர் என ஷவ்கானீ அவர்கள் தனது அஸ்ஸைலுல் ஜர்ரார் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். (அஸ்ஸைலுல் ஜர்ரார்-4/380)


بيان الوهم والإيهام في كتاب الأحكام (4/ 589):
(2132) وَذكر من طَرِيق النَّسَائِيّ، عَن عبد الله بن عَمْرو بن العَاصِي يرفعهُ، قَالَ: ” من قتل عصفورا فَمَا فَوْقهَا بِغَيْر حَقّهَا، سَأَلَهُ الله عز وجل عَنْهَا يَوْم الْقِيَامَة. قيل: يَا رَسُول الله، وَمَا حَقّهَا؟ ” الحَدِيث.
وَسكت عَنهُ، وَإِنَّمَا يرويهِ سُفْيَان بن عُيَيْنَة، عَن عَمْرو بن دِينَار، عَن صُهَيْب مولى بني عَامر، عَن عبيد الله بن عَمْرو.
وصهيب هَذَا، هُوَ الْحذاء مولى عبد الله بن عَامر، لَا تعرف لَهُ حَال وَلَا راو عَنهُ إِلَّا عَمْرو بن دِينَار

இருவரையும் வெவ்வேறானவர்கள் என்று சிலர் கருதியதால் ஸுஹைப் அல்ஹத்தாஃ என்பவரை இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்கள் இவரின் நிலை அறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

(நூல்: பயானுல் வஹ்மி வல்ஈஹாம்-4/589, 590)


تراجعات الألباني (ص139 بترقيم الشاملة آليا):
صفحة 153:
206 – ما من إنسان يقتل عصفورا … يذبحها فيأكلها
رواه س ، ح عن عبد الله بن عمرو
ضعيف: ضعيف الجامع (5157)

ثم حسن: صحيح الترغيب والترهيب (1092 – 2266)

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், இவரை அறியப்படாதவர் என்று முடிவு செய்ததால் இவர் இடம்பெறும் மேற்கண்ட செய்தியை பலவீனமானது என்று தனது சில நூல்களில் கூறியுள்ளார். இதே செய்தியை தர்ஃகீப்-1092 எண்ணில் ஹஸன் லிஃகைரிஹீ என்று கூறியுள்ளார்.

5 – حسن لغيره. وهو الذي قبله، ولكن لم تكثر طرقه، ويكفي فيه طريقان لم يشتد ضعفهما.

ஸஹீஹ் தர்ஃகீப் நூலில் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் ஹதீஸ்களை 5 வகையான தரங்களில் குறிப்பிடுவதாக அதன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். ஒரு செய்தி மிகவும் பலவீனம் இல்லாத இரு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருந்தால் அதை ஹஸன் லிஃகைரிஹீ என்று குறிப்பிடுவதாக கூறியுள்ளார். (ஒரு செய்தி மிகவும் பலவீனம் இல்லாத அதிகமான வெவ்வேறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்திருந்தால் அதை ஸஹீஹ் லிஃகைரிஹீ என்று குறிப்பிடுவதாக 4 வது வகையைக் கூறியுள்ளார்.)

இதே செய்தியை தர்ஃகீப்-2266 எண்ணில் ஹஸன் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஸுஹைப் என்ற பெயரில் உள்ள வேறு சிலர்:

1 . ராவீ-19894-ஸுஹைப் அர்ரூமீ-ஸுஹைப் பின் ஸினான்-நபித்தோழர்.

(தாரீகுல் கபீர்-5806)

2 . ராவீ-19887-ஸுஹைப் அல்பக்ரீ-அபுஸ்ஸஹ்பாஃ

(தாரீகுல் கபீர்-5807)

(இவரை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை என்று சில தகவல் உள்ளது. இவரைப் பற்றி தனித்தகவல் சேர்க்கவேண்டியுள்ளது)

3 . ராவீ-19890-ஸுஹைப் அல்ஹாஷிமீ (அப்பாஸ் பின் முத்தலிப் (ரலி) அவர்களின் அடிமை)

(தாரீகுல் கபீர்-5808)

4 . ராவீ-19890-ஸுஹைப்-இப்னு ஆமிர் (ரலி) அவர்களின் அடிமை

(தாரீகுல் கபீர்-5809)

மேற்கண்ட செய்தியின் கருத்தில் இடம்பெறும் சில அறிவிப்பாளர்தொடர்களில் ஸுஹைப் என்பவரை இந்த நான்கு பேரின் பெயர்களிலும் கூறப்பட்டுள்ளது.

3 வது, 4 வது பெயர் உடையவர்களை ஜவாமிஉல் கலிமில் ஒரே நபர்களாக கூறப்பட்டுள்ளது.

5 . ஸுஹைப் (அல்உத்வாரியின் அடிமை)

(தாரீகுல் கபீர்-5810)

இது போன்று இன்னும் சிலர் ஸுஹைப் என்ற பெயரில் உள்ளனர்.


1 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> ஸுஹைப் (இப்னு ஆமிரின் அடிமை) —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-2393 , அஹ்மத்-6550 , 6551 , 6861 , 6960 , தாரிமீ-2021 , முஸ்னத் பஸ்ஸார்-2463 , குப்ரா நஸாயீ-4519 , 4841நஸாயீ-4349 , 4445 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-872 , அல்முஃஜமுல் கபீர்-14344 , ஹாகிம்-7574 , குப்ரா பைஹகீ-18128 , 19131 , ஷுஅபுல் ஈமான்-10564 ,


  • அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> ஸுஹைப் (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமை) —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8414 , அல்முஃஜமுல் கபீர்-14345 ,


  • அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
    இறப்பு ஹிஜ்ரி 126
    —> ஸுஹைப் (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் அடிமை) —> நபி (ஸல்)

பார்க்க: அல்உம்மு-ஷாஃபிஈ-7/375.

الأم للإمام الشافعي (7/ 375 ط الفكر):
(قال الشافعي): وقد أخبرنا سفيان بن عيينة عن عمرو بن دينار عن صهيب مولى عبد الله بن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال «‌من ‌قتل ‌عصفورا ‌بغير ‌حقها ‌حوسب ‌بها قيل وما حقها؟ قال أن يذبحها فيأكلها ولا يقطع رأسها فيرمي به»

ஷாஃபிஈ இமாம் அவர்களின் அல்உம்மு என்ற நூலின் மேற்கண்ட பிரதியில் ஸுஹைப் என்பவரை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் அடிமை என்றும், இவர் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பதாகவும் இடம்பெற்றுள்ளது. ஆனால் சரிபார்க்கப்பட்ட முஸ்னத் ஷாஃபிஈ அவர்களின் நூலில் மற்றவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ளது.

مسند الشافعي – ترتيب سنجر (3/ 294):
1615 – أَخْبَرَنَا الشَّافِعِيُّ رضي الله عنه، قَالَ: أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ صُهَيْبٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ: أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ: «مَنْ قَتَلَ عُصْفُورًا فَمَا فَوْقَهَا بِغَيْرِ حَقٍّ سَأَلَهُ اللَّهُ عز وجل عَنْ قَتْلِهِ» .
قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا حَقُّهَا؟ قَالَ: «أَنْ يَذْبَحَهَا فَيَأْكُلَهَا ‌وَلا ‌يَقْطَعَ رَأْسَهَا فَيَرْمِيَ بِهَا»

இப்னு உயைனா அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும், இப்னு உயைனா —> அம்ர் பின் தீனார் பிறப்பு ஹிஜ்ரி 46/56
இறப்பு ஹிஜ்ரி 126
—> ஸுஹைப் (இப்னு ஆமிரின் அடிமை) —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) —>  நபி
(ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் அறிவித்துள்ளனர்.


  • இப்னு ஜுரைஜ் —> அதாஉ பின் அபூரபாஹ் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-14331 ,


2 . ஷரீத் பின் ஸுவைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: நஸாயீ-4446 .

3 . யஸீத்-அபூஉமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-638 .


4 . கதாதா (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8413 .


5 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் ஷிஹாப்-524, அல்மஜாலிஸு வ ஜவாஹிருல் இல்ம்-3181 ,


  • முஸ்னத் ஷிஹாப்-524.

مسند الشهاب القضاعي (1/ 312)
524 – أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَحْمَدَ الْمُعَلِّمُ، ثنا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ الْأَذَنِيُّ، ثنا أَبُو عَرُوبَةَ الْحَرَّانِيُّ، ثنا عَبَّادُ بْنُ يَعْقُوبَ، ثنا السَّرِيُّ بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، عَنْ أَبِي الْجَارُودِ، عَنِ الْحَسَنِ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَلَهُ صُرَاخٌ عِنْدَ الْعَرْشِ تَقُولُ: يَا رَبِّ سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي فِي غَيْرِ مَنْفَعَةٍ؟ “

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20672-அப்பாத் பின் யஃகூப், ராவீ-16280-அபுல்ஜாரூத்-ஸியாத் பின் முன்திர் ஆகியோர் மிகப் பலவீனமானவர்கள். ராவீ-16850-ஸரிய்யு பின் அப்துல்லாஹ் பலவீனமானவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


  • அல்மஜாலிஸு வ ஜவாஹிருல் இல்ம்-3181.

المجالسة وجواهر العلم (7/ 289)
3181 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ النِّبَاجِيُّ وَرَّاقُ يَحْيَى بْنِ مَعِينٍ، نا عَبَّادُ بْنُ مُوسَى الأَزْرَقُ، نا السَّرِيُّ بْنُ يَحْيَى، عَنْ زِيَادِ بْنِ الْمُنْذِرِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ؛ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا؛ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَلَهُ صُرَاخٌ: رَبِّ! سَلْ هَذَا لِمَ قَتَلَنِي عَبَثًا بِلا مَنْفَعَةٍ»

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-6289-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மர்வான்
பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர்; ராவீ-16280-அபுல்ஜாரூத்-ஸியாத் பின் முன்திர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.


 

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.