தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-4446

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

“ஒரு மனிதன் சிட்டுக்குருவியை வீணாகக் கொன்றால், அது மறுமை நாளில் மகத்துவமும் மாண்பும்கொண்ட அல்லாஹ்விடம் சப்தமிட்டு, “எனது இறைவா! இன்ன மனிதன் என்னை வீணாகக் கொன்றான். ஏதேனும் பயன்பாட்டுக்காக என்னைக் கொல்லவில்லை என்று முறையிடும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஷரீத் பின் ஸுவைத் (ரலி)

 

(நஸாயி: 4446)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ دَاوُدَ الْمِصِّيصِيُّ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ، عَنْ خَلَفٍ يَعْنِي ابْنَ مِهْرَانَ قَالَ: حَدَّثَنَا عَامِرٌ الْأَحْوَلُ، عَنْ صَالِحِ بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ قَالَ: سَمِعْتُ الشَّرِيدَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

مَنْ قَتَلَ عُصْفُورًا عَبَثًا عَجَّ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ يَقُولُ: يَا رَبِّ، إِنَّ فُلَانًا قَتَلَنِي عَبَثًا، وَلَمْ يَقْتُلْنِي لِمَنْفَعَةٍ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4446.
Nasaayi-Alamiah-4370.
Nasaayi-JawamiulKalim-4394.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்

2 . முஹம்மத் பின் தாவூத்

3 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
இமாம்

4 . அப்துல்வாஹித் பின் வாஸில்

5 . கலஃப் பின் மிஹ்ரான்

6 . ஆமிர் பின் அப்துல்வாஹித்

7 . ஸாலிஹ் பின் தீனார்

8 . அம்ர் பின் ஷரீத்

9 . ஷரீத் பின் ஸுவைத் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19506-ஸாலிஹ் பின் தீனார் என்பவரை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்கள் அறியப்படாதவர் என்று கூறியதாக அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்களிடம், முஃதமிர் —> அபூஷுஐப் (ஸாலிஹ் பின் தீனார்) —> இப்னு ஸீரீன் என்ற அறிவிப்பாளர்தொடர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, ஸுஃப்யான் அவர்கள் நீங்கள் அறியாத மனிதரிடமிருந்து ஹதீஸை அறிவித்தால் அதை எழுதாதீர்கள். காரணம் ஸுஃப்யான் அவர்கள், அபூஷுஐப் அல்மஜ்னூன் போன்ற அறியப்படாதவர்களிடமிருந்தும் அறிவிப்பார் என்று ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
கூறியதாக அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் பதலளித்தார்.

(நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ-1/215, அல்இக்மால்-6/328)

என்றாலும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் இதை ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டிருக்க வாய்ப்பில்லை.

ஸாலிஹ் பின் தீனாரிடமிருந்து சுமாரான தரத்தில் உள்ள ஆமிர் அல்அஹ்வல் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் ஸாலிஹ் அறியப்படாதவர் ஆவார்.


இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
இப்னு கலஃபூன் ஆகியோர் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.

(நூல்கள்: தஹ்தீபுல் கமால்-13/41 , தஹ்தீபுத் தஹ்தீப்-2/193, அல்இக்மால்-6/328)

இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/444)

இந்தக் கருத்தில் வேறு சரியான செய்தி உள்ளது என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.


2 . இந்தக் கருத்தில் ஷரீத் பின் ஸுவைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸாலிஹ் பின் தீனார் —> அம்ர் பின் ஷரீத் —> ஷரீத் பின் ஸுவைத் (ரலி)

பார்க்க: அஹ்மத்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-4446, ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-, …


மேலும் பார்க்க: நஸாயீ-4349 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.