தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-456

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுதுவருபவரை நரகத்துக்கு அல்லாஹ் தடைசெய்து விடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 456)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ عُقْبَةَ الشَّيْبَانِيُّ، ثنا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ، قَالَ: أَخْبَرَتْنِي أُخْتِي أُمُّ حَبِيبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ صَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-456.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-19004.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸயீத் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூஆஸிம் அவர்கள் ஸயீத் பின் அப்துல்அஸீஸ் —> ஸுலைமான் பின் மூஸா —> மக்ஹூல் —> அன்பஸா பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளதாக வந்துள்ளது. ஆனால் இது தவறாகும்.

அபூஆஸிம் அவர்கள், ஸயீத் பின் அப்துல்அஸீஸ் —> ஸுலைமான் பின் மூஸா —> முஹம்மது பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் தான் அறிவித்துள்ளார். இவ்வாறே குப்ரா நஸாயீ-1486 , நஸாயீ-1816 , இப்னு குஸைமா-1190 ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளது.

علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية ط-أخرى (9/ 278)

وخالَفه أَبو عاصِم، فرواه عَن سَعيد، عن سُليمان، عَن مُحمد بن أَبي سُفيان، عَن أُم حَبيبَة، ولَم يَقُل عَنبَسة.

அபூஆஸிமின் அறிவிப்பைக் குறிப்பிட்ட தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள் அபூஆஸிம் என்பவர் ஸயீத் பின் அப்துல்அஸீஸ் —> ஸுலைமான் பின் மூஸா —> முஹம்மது பின் அபூஸுஃப்யான் —> உம்மு ஹபீபா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்ததாகத் தான் கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-9/278)

  • அபூஆஸிம் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் அறிவித்திருந்தால் அதையும் குறிப்பிட்டிருப்பார். ஆனால் அதைக் குறிப்பிடவில்லை என்பதால் மேற்கண்ட அறிவிப்பாளர்தொடர் தவறாகும். இந்த அறிவிப்பாளர்தொடரை மர்வான் பின் முஹம்மத் தான் அறிவித்துள்ளார்.

(மேலும் இதில் இடம்பெறும் மக்ஹூல் அவர்கள் அன்பஸா அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பது தனி விசயம்)

மேலும் பார்க்க: அஹ்மத்-26764 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.