தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-486

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

486. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தனக்கு ஹலால் இல்லாத பெண்ணை தொடுவதை விட இரும்பு ஊசியால் தன்னுடைய தலையை காயப்படுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: (ரலி)

மஃகில் பின் யஸார் (ரலி)

معقل بن يسار المزني

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: மஃகில் பின் யஸார் பின் அப்துல்லாஹ் பின் மஃபர் பின் ஹர்ராக் பின் லாயீ பின் கஅப் பின் அப்த் பின் ஸவ்ர் பின் ஹத்மா பின் லாதிம் பின் உஸ்மான் பின் அம்ர் பின் அட் பின் தாபிகா

தந்தை பெயர்: யஸார் பின் அப்துல்லாஹ் பின் மஃபர்

வம்சம்: அல்மஸ்னீ

புனைப்பெயர்: அபூ அலீ, அபூ யஸார், அபூ அப்துல்லாஹ்

ஊர் பெயர்: பஸரா

பயணித்த ஊர்கள்: ஹிஜாஸ், மதீனா, பஸரா

பிறப்பு: ஹிஜாஸ்

இறப்பு: ஹிஜ்ரி 59, பஸரா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

மஃகில் பின் யஸார் ரலி ஒரு நபித்தோழர் ஆவார். இவர் ரிழ்வான் உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்களில் ஒருவர். இவர் பஸராவில் வாழ்ந்து அங்கேயே ஹிஜ்ரி 59 ஆம் ஆண்டு காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): நபி (ஸல்), நுஃமான் பின் மக்ரன் அல்மஸ்னீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இம்ரான் பின் ஹுஸைன், முஆவியா பின் குர்ரா பின் இயாஸ், அல்கமா பின் அப்துல்லாஹ், அல்கம் பின் அப்துல்லாஹ் அல்அஃரஜ், அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ, ஹஸன் அல் பஸரீ, நாஃபிஃ பின் அபூ நாஃபிஃ, அபுல் மலீஹ் பின் உஸாமா, முஸ்லிம் பின் முக்ராக் அல்அப்தீ, இயாத் அபூ காலித் அல்பஜ்லீ

வேறு பெயர்கள்: அபூ யஸார், அபூ அலீ, அபூ அப்துல்லாஹ்


ஆதாரம்: muslimscholars.info (3120) · Should verify


حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثنا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، أَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، ثنا شَدَّادُ بْنُ سَعِيدٍ الرَّاسِبِيُّ، قَالَ: سَمِعْتُ يَزِيدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ الشِّخِّيرِ يَقُولُ: سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لَا تَحِلُّ لَهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-486.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16910.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் யஸீத் பின் அப்துல்லாஹ்விடமிருந்து அறிவிக்கும் ஷத்தாத் பின் ஸயீத் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும், அப்துஸ்ஸமத் பின் அப்துல்வாரிஸ் அவர்கள், இவரைப்பற்றி பலவீனமானவர் என கூறியுள்ளார் என புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களும் கூறியுள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 432 , தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2 / 155)
  • மேற்கண்ட செய்தியின் வார்த்தையிலும், நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்தும் ஷத்தாத் பின் ஸயீத் தவறு செய்துள்ளார்.
  • அபுல் அலாஉ-யஸீத் பின் அப்துல்லாஹ் (ரஹ்) விடமிருந்து பஷீர் பின் உக்பா அறிவிக்கும் போது இந்த செய்தியை மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் கூற்றாகவும், வேறு கருத்திலும் அறிவித்துள்ளார். பஷீர் பின் உக்பா பலமானவர் என்பதால் இவரின் அறிவிப்பின்படி இந்த செய்தி  மஃகில் பின் யஸார் (ரலி) அவர்களின் கூற்றுதான் என்று தெரிகிறது. (பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17316 )

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-486 , 487 , முஸ்னத் ரூயானீ-1283 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-17316 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-7214 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.