தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-662

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் நிரப்புவதிலேயே அவனுடைய வயிற்றை விட மிகவும் மோசமான பாத்திரம் எதுவும் இல்லை. (உண்ணும்) ஆசை அவனை மிகைத்துவிட்டதென்றால், மூன்றில் ஒரு பாகம் அவன் மூச்சு விடுவதற்கு இருக்கட்டும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 662)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْعَبَّاسِ الرَّازِيُّ، ثنا عَلِيُّ بْنُ مَيْسَرَةَ الرَّازِيُّ، ثنا حَسَّانُ بْنُ حَسَّانَ، عَنْ حَرِيزِ بْنِ عُثْمَانَ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَا مَلَأَ أَحَدٌ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، فَإِنْ غَلَبَتْهُ نَفْسُهُ فَلْيَدَعْ ثُلُثَا لِنَفْسِهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-662.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17082.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸ்ஸான் பின் ஹஸ்ஸான் பற்றி அபூஹாத்திம் அர்ராஸீ பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் முன்கருல் ஹதீஸ் என்றும், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.  (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். 1 / 381 )
  • இவர் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்களின் அறிவிப்பாளர் என்றாலும் மேற்கண்ட செய்தியை மற்றவர்கள் அறிவிப்பதற்கு மாற்றமாக அறிவித்துள்ளார் என்பதால் இதில் தவறிழைத்துள்ளார் என்று தெரிகிறது.
  • எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • சிலர் இந்த செய்தியை வைத்தே இந்த கருத்தில் வரும் ஹதீஸ்களை சரியானது என்று அல்லது ஹஸன் என்று கூறியுள்ளனர்.

மேலும் பார்க்க : அஹ்மத்-17186 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.