தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-67

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகிக்கு அல்லாஹ்விடத்தில் ஆறு பரிசுகள் கிடைக்கும்.

1 . அவரின் ஒரு சொட்டு இரத்தம் சிந்தும் போதே அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுவிடும்.

2 . மிகப்பெரிய திடுக்கத்தை விட்டு பாதுகாப்பு பெறுவார்.

3 . சொர்க்கத்தில் தனது இருப்பிடத்தைக் காண்பார்.

4 . அவருக்கு சொர்க்கத்து கண்ணழகிகளை திருமணம் செய்து கொடுக்கப்படும்.

5 . கப்ருடையை வேதனையை விட்டு காப்பாற்றப்படுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 67)

حَدَّثَنَا أَبُو يُزَيدَ الْقَرَاطِيسِيُّ، قَالَ: ثنا يَعْقُوبُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادِ بْنِ أَنْعَمَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«لِلشَّهِيدِ سِتُّ خِصَالٍ، يُغْفَرُ لَهُ بِأَوَّلِ دَفْعَةٍ مِنْ دَمِهِ، وَيُؤَمَّنُ مِنَ الْفَزَعِ، وَيَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ، وَيُزَوَّجُ مِنَ الْحُورِ الْعِينِ، وَيُجَارُ مِنْ عَذَابِ الْقَبْرِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-67.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அப்துர்ரஹ்மான் பின் ஸியாத் பின் அன்அம் நல்ல மனிதர் என்றாலும் நினைவாற்றலில் பலவீனமானவர் என சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/505, தக்ரீபுத் தஹ்தீப்-1/578)

6 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-67 ,

சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-1663 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.