தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7473

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், நல்லதைக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது (அதை பிறருக்கு) கற்பிக்க வேண்டும் என்று கருதி காலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவருக்கு முழுமையான ஹஜ் செய்தவருக்கு கிடைக்கும் கூலி போன்றது கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7473)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، ثنا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ قَالَ:

«مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامًّا حِجَّتُهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7473.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7346.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்.

2 . அப்தான் பின் அஹ்மத்.

3 . ஹிஷாம் பின் அம்மார்.

4 . முஹம்மத் பின் ஷுஐப்.

5 . ஸவ்ர் பின் யஸீத்.

6 . காலித் பின் மஃதான்.

7 . அபூஉமாமா (ரலி)


  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47280-ஹிஷாம் பின் அம்மார் பின் நுஸைர் என்பவர் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் பலமானவர் என்றும் புத்திசாலி என்றும் பாராட்டியுள்ளார். இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். அல்ல என்றும் கூறியுள்ளாா். மேலும் இவர் ஸுவைத் பின் அப்துல்அஸீஸ் வழியாக அறிவிக்கும் செய்திகள் (ஸுவைத் பலவீனமானவர் என்பதால்) பலவீனமானது என்றும் கூறியுள்ளார்.
  • இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 80
    அவர்கள் ஸதூக்-நம்பகமானவர் (சுமாரானவர்) என்று கூறியுள்ளார். இவ்வாறே அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    நஸாயீ,பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஆகியோரும் கூறியுள்ளனர்.
  • அபூஸுர்ஆ அவர்கள், இவரிடமிருந்து ஹதீஸைக் கேட்காதவர்கள் 10 ஆயிரம் ஹதீஸ்களை இழக்க நேரிடும் என்று பாராட்டியுள்ளார்.
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் ஸதூக்-நம்பகமானவர் என்று கூறியிருப்பதுடன் இவர் மிகவும் மதிப்பு மிக்கவர்; புத்திசாலி என்று பாரட்டியுள்ளார். (இவ்வாறு இவர் குணத்தைப் பற்றி பலர் பாராட்டியுள்ளனர்.)

இவரைப் பற்றிய விமர்சனங்கள்:

1 . குர்ஆன் படைக்கப்பட்டது என்று இவர் கூறினார் என்ற தகவல் கிடைத்ததால் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்கள் இவரை வழித் தவறியவர், தடுமாறியவர் என்று விமர்சித்தார்…

2 . இவர் முதியவரான போது இவரின் மனனத் தன்மை மாறி விட்டது. (அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்துச் செய்திகளையும் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்கு சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். (அதாவது தல்கீனை ஏற்பவராக இருந்தார்…விவரம்). இதற்கு முந்தைய காலத்தில் இவர் அறிவித்தவை மிகச் சரியானது என்றும், இவர் ஸதூக் என்ற தரத்தில் உள்ளவர் என்றும் இமாம் அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
கூறியுள்ளார். (இவர் தல்கீனை ஏற்பவர் என்று ஆரம்பகால அறிஞர் மஃன் அவர்களும் கூறியுள்ளார்)

3 . இவர் அறிவிக்கும் 400 ஹதீஸ்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம் விமர்சித்துள்ளார்.

4 . இவர் ஹதீஸை அறிவிப்பதற்கு கூலி வாங்குவார் என்று சிலர் விமர்சித்துள்ளனர்…

(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-9/66, தஹ்தீபுல் கமால்-30/242, தாரீகுல் இஸ்லாம்-5/1272, ஸியரு அஃலாமின் நுபலா-11/420, மீஸானுல் இஃதிதால்-‌‌9234, 4/302, தத்கிரதுல் ஹுஃப்பால்-458, 2/29, தஹ்தீபுத் தஹ்தீப்-4/276, தக்ரீபுத் தஹ்தீப்-1/1022…)


1 . மேற்கண்ட 4 வகையான விமர்சனங்களுக்கும் சில அறிஞர்கள் பதில் கூறியுள்ளனர்…

2 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இவரைப் பற்றிய குறை, நிறை விமர்சனங்களிலிருந்து இவர் பலமானவர் என்றே முடிவு செய்துள்ளார். இதற்கு அடையாளமாக இவரைப்பற்றிய குறிப்பில் صح என்று கூறியுள்ளார். இதன் கருத்து அல்அமலு அலா தவ்ஸீகிஹீ-இவர் பலமானவர் என்பதே முடிவாகும் (அமலாகும்) என்பதாகும்.

(மீஸானுல் இஃதிதால்-‌‌9234, 4/302).


1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸவ்ர் பின் யஸீத் —> காலித் பின் மஃதான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7473 , முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-423 , ஹாகிம்-311 , ஹில்யதுல் அவ்லியா-8082 , அல்ஆதாப்-பைஹகீ-860 , அல்மத்ஹல் இலஸ்ஸுனன்-370 ,


  • முஸ்னதுஷ் ஷாமிய்யீன்-423.

مسند الشاميين للطبراني (1/ 238)
423 – حَدَّثَنَا خَطَّابُ بْنُ سَعْدٍ الدِّمَشْقِيُّ، ثنا هِشَامُ بْنُ عَمَّارٍ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، ثنا ثَوْرُ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامٍّ حَجَّتُةُ»


  • ஹில்யதுல் அவ்லியா-8082.

حلية الأولياء وطبقات الأصفياء (6/ 97)
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ , ثَنَا خَطَّابُ بْنُ سَعِيدٍ الدِّمَشْقِيُّ , ثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ , ثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ , ثَنَا ثَوْرٌ , عَنْ خَالِدٍ , عَنْ أَبِي أُمَامَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامٍّ حَجُّهُ»


  • அல்ஆதாப்-பைஹகீ-860.

الآداب للبيهقي (ص: 347)
860 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أَنْبَأَنَا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ الْقَنْطَرِيُّ، حَدَّثَنَا أَبُو قِلَابَةَ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ. وَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحَجَّةِ»


  • அல்மத்ஹலு இலஸ்ஸுனன்-370.

المدخل إلى السنن الكبرى للبيهقي (ص: 263)
370 – وَأَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ، أبنا أَبُو الْحُسَيْنِ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ تَمِيمٍ الْقَنْطَرِيُّ بِبَغْدَادَ , ثنا أَبُو قِلَابَةَ، ثنا أَبُو عَاصِمٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدًا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ , وَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيعَلِّمَهُ كَانَ لَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحَجَّةِ»


  • அல்அமாலீ-ஷஜரீ-274.

ترتيب الأمالي الخميسية للشجري (1/ 75)
274 – أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ رَيْذَةَ، قَالَ: أَخْبَرَنَا الطَّبَرَانِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ، كَانَ لَهُ كَأَجْرِ حَاجٍّ تَامَّةٌ حَجَّتُهُ»


தாரீகு திமிஷ்க்-,

 


  • ஜுமைஃ பின் ஸவ்ப் —> காலித் பின் மஃதான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: ஃபவாஇத் தம்மாத்-1680.

فوائد تمام (2/ 257)
1680 – أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عَرْفَجَةَ، ثنا يَزِيدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الصَّمَدِ، ثنا يَحْيَى بْنُ صَالِحٍ، ثنا جُمَيْعُ بْنُ ثَوْبٍ، ثنا خَالِدٌ، عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَنْ تَوَضَّأَ فِي أَهْلِهِ، ثُمَّ غَدَا إِلَى مَسْجِدِهِ أَوْ رَاحَ لَا يُرِيدُ إِلَّا أَنْ يَتَعَلَّمَ أَوْ يُعَلِّمَ، كُتِبَتْ لَهُ بِكُلِّ خُطْوَةٍ حَسَنَةٌ، انْقَطَعَ مِنْ كِتَابِ ابْنِ عَرْفَجَةَ، حَتَّى إِذَا تَوَسَّطَ قَالَ: «اللَّهُمَّ أَنْزِلْنِي مَنْزِلًا مُبَارَكًا، وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ كُتِبَ لَهُ أَجْرُ عِتْقِ رَقَبَةٍ»


  • ஹபீப் பின் அபூமர்ஸூக் —> காலித் பின் மஃதான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்மஜ்ரூஹீன்-இப்னு ஹிப்பான்-895.

المجروحين لابن حبان ت حمدي (15/ 229)
895 – كثير بن حمير الأصم
شيخ يروي عن الشاميين ما لم يتابع عليه، لا يجوز الاحتجاج بخبره إذا انفرد.
روى عن سالم أبي المهاجر، عن حبيب بن أبي مرزوق، عن خالد بن معدان، عن أبي أمامة، قال: قال رسول الله – صلى الله عليه وسلم -: “مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ [إِلا] أَنْ يَتَعَلَّمَ خيْرًا أَوْ يُعَلِّمَهُ، كَانَ لَهُ مِثْلُ أَجْرِ الْحَاجِّ تامٌّ حَجَّهُ، وَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلا أَنْ يَتَعَلَّمَ خَيْرًا أوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ مِثْلُ أَجْرِ حَاجٍّ أوْ مُعْتَمِرٍ تَامٌّ لَهُ حَجَّهُ وَعُمْرَتُهُ”.

حدثناه أحمد بن عمرو بن جابر بالرملة، قال: حدثنا ربيعة بن الحارث الجبلاني، قال: حدثنا موسى بن أيوب، قال: حدثنا كثير بن حمير الأصم، عن سالم أبي المهاجر.



الكنى والأسماء للدولابي (1/ 439)
785 – حَدَّثَنِي أَبُو حُمَيْدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْمُغِيرَةِ بْنِ سِنَانٍ قَالَ: أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ أَبِي حَامِدٍ جَمِيعِ بْنِ ثَوْبَانَ قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: ” مَنْ جَلَسَ مَجْلِسًا فَقَالَ: اللَّهُمَّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَا جَلَسَ فِيهِ مَا لَمْ يُحْدِثْ أَوْ يَرْفُثْ “



இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5911 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.