தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-5911

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய இந்த (மதீனாவின் மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலுக்கு, நல்லதை கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் வந்தால் அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரிடும்) போராளியைப் போன்றவர் ஆவார்.

இதல்லாமல் மக்களிடம் பேசுவதற்காக ஒருவர் வந்தால் அவர் மற்றவர்களின் பொருளை ஆச்சரியத்துடன் பார்ப்பவர் போன்றவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 5911)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ دَخَلَ مَسْجِدِي هَذَا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ لِيُعَلِّمَهُ، كَانَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ، وَمَنْ دَخَلَهُ لِغَيْرِ ذَلِكَ مِنْ أَحَادِيثِ النَّاسِ، كَانَ بِمَنْزِلَةِ مَنْ يَرَى مَا يُعْجِبُهُ وَهُوَ شَيْءٌ غَيْرُهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-5911.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-5772.




ஆய்வின் சுருக்கம்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் யஃகூப் பின் ஹுமைத் பின் காஸிப் என்பவர் பற்றி விமர்சனம் இருந்தாலும் இவரைப் போன்று அப்துல்லாஹ் பின் உமர் அல்கத்தாபீ அவர்களும் அறிவித்துள்ளார். இவர் பலமானவர் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.

(பார்க்க: ஜுஸ்உ மின் ஹதீஸி அபூஹஃப்ஸ்-உமர் பின் இப்ராஹீம்-13)


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . தப்ரானீ இமாம்

2 . அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹன்பல்

3 . யஃகூப் பின் ஹுமைத் பின் காஸிப்

4 . அப்துல்அஸீஸ் பின் அபூஹாஸிம்

5 . அபூஹாஸிம்-ஸலமா பின் தீனார்

6 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49276-யஃகூப் பின் ஹுமைத் பின் காஸிப் என்பவர் பற்றி சிலர் பாராட்டியுள்ளனர். சிலர் விமர்சித்துள்ளனர்.

பாராட்டியவர்கள்:

  • இவர் பலமானவர்; நம்பிக்கைக்குரியவர்; ஹதீஸ் ஆசிரியர் என்று முஸ்அப் பின் அப்துல்லாஹ் அஸ்ஸுபைரீ அவர்கள் கூறியுள்ளார்.
  • இவர் விசயத்தில் நாம் நல்லதையே காண்கிறோம். இவர் ஸதூக்-உண்மையாளர் என்று புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளார்.
  • இவர் பலமானவர் என்று மஸ்லமா பின் காஸிம் கூறியுள்ளார்.
  • ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
    இறப்பு ஹிஜ்ரி 405
    வயது: 84
    அவர்கள், இவரை விமர்சித்தவர்கள் ஆதாரத்துடன் விமர்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் சுமாரான தரத்தில் உள்ளவர். சில அரிதான செய்திகளை அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
  • தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள், இவரை ஹாஃபிள் என்றும், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை ஸதூக்; சில இடத்தில் தவறாக அறிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

விமர்சித்தவர்கள்:

  • இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியதாக அப்பாஸ் அத்தூரீ அறிவித்துள்ளார். என்றாலும் முஹம்மத் பின் நஸ்ர், இப்னு முஹ்ரிஸ் ஆகியோர் இவர் ஒரு பொருட்டே அல்ல. கெட்டவர். பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்ற கருத்தில் கூறியுள்ளனர்.
  • அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    அவர்கள், இவர் முர்ஸலான செய்திகளை மவ்ஸூலாக அறிவித்துள்ளதைக் கண்டோம் என்று கூறியுள்ளார்.

இவர் தண்டனைப் பெற்றவர் என்ற காரணத்தின் அடிப்படையில் இவர் பலவீனமானவர் என்று சிலர் கூறியுள்ளனர்…

…(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-, தஹ்தீபுல் கமால்-, அல்இக்மால்-, அல்காஷிஃப்-, அல்இஸாபா-, தஹ்தீபுத் தஹ்தீப்-, தக்ரீபுத் தஹ்தீப்-, துஹ்ஃபதுத் தஹ்ஸீல்-)

இந்தச் செய்தியை யஃகூப் பின் ஹுமைத் பின் காஸிப் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே அப்துல்லாஹ் பின் உமர் அல்கத்தாபீ அவர்களும் அறிவித்துள்ளார். இவர் பலமானவர் என்பதால் இது ஸஹீஹ் லிஃகைரிஹீ ஆகும்.


1 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

அப்துல்லாஹ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
அவர்களின் அறிவிப்பு:

  • யஃகூப் பின் ஹுமைத் பின் காஸிப் —> அப்துல்அஸீஸ் பின் அபூஹாஸிம் —> அபூஹாஸிம்-ஸலமா பின் தீனார் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5911 ,


அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஹஸன் அவர்களின் அறிவிப்பு:

பார்க்க: ஹில்யதுல் அவ்லியா-4097,

حلية الأولياء وطبقات الأصفياء (3/ 254)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُظَفَّرِ، ثَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ الْجَعْدِ، ثَنَا يَعْقُوبُ بْنُ كَاسِبٍ، ثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ دَخَلَ مَسْجِدِي هَذَا يَتَعَلَّمُ حَرْفًا أَوْ يُعَلِّمُهُ كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللهِ تَعَالَى، وَمَنْ دَخَلَهُ لِغَيْرِ ذَلِكَ كَانَ كَمَنْزِلَةِ الَّذِي يَرَى الشَّيْءَ يُعْجِبُهُ وَهُوَ لِغَيْرِهِ»
هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، تَفَرَّدَ بِهِ عَنْهُ ابْنُهُ عَبْدُ الْعَزِيزِ


அப்துல்லாஹ் பின் உமர் அல்கத்தாபீ பிறப்பு ஹிஜ்ரி 319
இறப்பு ஹிஜ்ரி 388
வயது: 69
அவர்களின் அறிவிப்பு:

  • அப்துல்அஸீஸ் பின் அபூஹாஸிம் —> அபூஹாஸிம்-ஸலமா பின் தீனார் —> ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)

13 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، نا عَبْدُ اللَّهِ الْخَطَّابِيُّ، نا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ دَخَلَ مَسْجِدِي هَذَا لا يَدْخُلُهُ إِلا يُعَلِّمُ خَيْرًا أَوْ يَتَعَلَّمُهُ، فَهُوَ بِمَنْزِلَةِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَمَنْ دَخَلَهُ بِغَيْرِ ذَلِكَ كَانَ بِمَنِزْلَةِ الَّذِي يَرَى مَا يُعْجِبُهُ وَهُوَ شَيْءٌ غَيْرُهُ “

(நூல்: ஜுஸ்உ மின் ஹதீஸி அபூஹஃப்ஸ்-உமர் பின் இப்ராஹீம்-13)

யஃகூப் பின் ஹுமைத் பின் காஸிப் அவர்கள் அறிவிப்பதைப் போன்றே இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் உமர் அல்கத்தாபீ என்பவரும் அறிவித்துள்ளார். இவர் பலமானவர் ஆவார்.

இந்தச் செய்தியை அபூஹாஸிம்-ஸலமா பின் தீனார் அவர்களிடமிருந்து அவரின் மகன் அப்துல்அஸீஸ் பின் அபூஹாஸிம் மட்டும் அறிவித்துள்ளார். இவரை சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர்.

ஹாதிம் பின் இஸ்மாயீல் அவர்கள் மட்டுமே இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களை விமர்சித்துள்ளார் என்ற தகவல் உள்ளது. ஆனால் இதற்கான காரணம் கூறப்படவில்லை. விமர்சனத்திற்குரிய காரணம் இல்லை என்பதால் இதை ஏற்கமுடியாது.

எனவே இது சரியான அறிவிப்பாளர்தொடராகும்.


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-227 .


3 . அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-34616 .


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-7473 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.