ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
7602. நபி (ஸல்) அவர்கள் திடீர் மரணத்தை விட்டு (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடுபவர்களாக இருந்தார்கள். மரணத்திற்கு முன் நோய்வாய்ப்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّائِغُ، ثنا بِشْرُ بْنُ عُبَيْسٍ، ثنا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ عُمَرَ بْنِ حَفْصٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي أُمَامَةَ قَالَ:
«كَانَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ يَتَعَوَّذُ مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَكَانَ يُعْجِبُهُ أَنْ يُمَرَّضَ قَبْلَ أَنْ يَمُوتَ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7602.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-7480.
إسناد شديد الضعف فيه عثمان بن عبد الرحمن الوقاصي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள், பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று விமர்சித்துள்ளார்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-7602 , 7603 ,
மேலும் பார்க்க : அஹ்மத்-15496 .
சமீப விமர்சனங்கள்