தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-847

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர­லி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 847)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ النَّضْرِ الْعَسْكَرِيُّ، ثَنَا سَعِيدُ بْنُ حَفْصٍ النُّفَيْلِيُّ، ثَنَا مُوسَى بْنُ أَعْيَنَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ مِشْرَحِ بْنِ هَاعَانَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ:

قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَفِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَانِ؟ قَالَ: «نَعَمْ، فَإِنْ لَمْ يَسْجُدْهُمَا فَلَا يَقْرَأْهُمَا»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-847.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-14279.




இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25382-அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். மற்றொரு  அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர், உக்பா பின் ஆமிர் (ரலி­) அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
விமர்சித்துள்ளார்கள்.

وفيه ابن لهيعة وهو ضعيف وقد ذكر الحاكم أنه تفرد به

التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير: (2 / 17)

وهو حديث في إسناده ضعيفان احدهما ابن لهيعة والثانى مشرح بن هاعان

البدر المنير في تخريج الأحاديث والآثار الواقعة في الشرح الكبير: (4 / 252)

மேலும் பார்க்க : திர்மிதீ-578

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.