தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-929

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரின் நாற்பது பெரும்பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்;

அவரை அடக்கம் செய்ய குழி வெட்டினால் அவர் மறுமைநாளில் எழுப்பப்படும் வரை அவருக்காக தங்குமிடத்தை ஏற்படுத்தியவரைப் போன்றவராவார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: அபூ ராஃபிஉ (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 929)

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَلُولٍ الْبَصْرِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ، ثنا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ شُرَحْبِيلَ بْنِ شَرِيكٍ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ، قَالَ: سَمِعْتُ أَبَا رَافِعٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ أَرْبَعِينَ كَبِيرَةً، وَمَنْ حَفَرَ لِأَخِيهِ قَبْرًا حَتَّى يَجُنَّهُ فَكَأَنَّمَا أَسْكَنَهُ مَسْكَنًا مَرَّةً حَتَّى يُبْعَثَ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-929.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-924.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46885-ஹாரூன் பின் மலூல் பலமானவர் என்று இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    மட்டுமே கூறியுள்ளார்.
  • இந்த செய்தியை அப்துல்லாஹ் பின் யஸீதிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் நாற்பது தடவை என்று அறிவிக்கின்றனர். ஹாரூன் பின் மலூல் மட்டும் நாற்பது பெரும் பாவம் என்று அறிவிக்கிறார்.
  • எனவே இது ஷாத் என்ற வகையில் பலவீனமாகும் என்றும், இதை சரிகண்ட சில அறிஞர்கள் தவறிழைத்துவிட்டனர் என்றும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் கூறியுள்ளார்.

(அள்ளயீஃபா-‌‌6781)


மேலும் பார்க்க: ஹாகிம்-1307 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.