பாடம் : 23
(ஈரக் கையால்) முன்தலையின் மீதும் தலைப்பாகையின் மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொள்வது.
461. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்னால் (தாமதமாக) வந்து கொண்டிருந்தார்கள். நானும் அவர்களுடன் வந்துகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (வாகனத்திலிருந்து இறங்கி) இயற்கைக் கடனை முடித்துக் கொண்டு வந்து, உம்மிடம் தண்ணீர் உள்ளதா? என்று கேட்டார்கள். நான் தண்ணீர் குவளையை அவர்களிடம் எடுத்துச்சென்றேன். அவர்கள் தம்முடைய முன் கைகளையும் முகத்தையும் கழுவினார்கள். பிறகு தமது முழங்கையை வெளியே எடுக்கப்போனபோது சட்டைக் கை குறுகலாக இருந்தது. எனவே, தமது கையை (அவர்கள் அணிந்திருந்த) நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நீளங்கியைத் தோளில் போட்டுக்கொண்டார்கள். பிறகு தமது முழங்கை வரைக் கழுவினார்கள். பின்னர் (ஈரக் கையால்) தமது முன்தலையின் மீதும் தலைப்பாகை மீதும் காலுறைகள்மீதும் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். பிறகு வாகனத்தில் ஏறினார்கள். நானும் ஏறிக்கொண்டேன். நாங்கள் تَخَلَّفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَخَلَّفْتُ مَعَهُ فَلَمَّا قَضَى حَاجَتَهُ قَالَ: «أَمَعَكَ مَاءٌ؟» فَأَتَيْتُهُ بِمِطْهَرَةٍ، «فَغَسَلَ كَفَّيْهِ وَوَجْهَهُ، ثُمَّ ذَهَبَ يَحْسِرُ عَنْ ذِرَاعَيْهِ فَضَاقَ كُمُّ الْجُبَّةِ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ تَحْتِ الْجُبَّةِ، وَأَلْقَى الْجُبَّةَ عَلَى مَنْكِبَيْهِ، وَغَسَلَ ذِرَاعَيْهِ، وَمَسَحَ بِنَاصِيَتِهِ وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى خُفَّيْهِ، ثُمَّ رَكِبَ وَرَكِبْتُ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ، وَقَدْ قَامُوا فِي الصَّلَاةِ، يُصَلِّي بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَقَدْ رَكَعَ بِهِمْ رَكْعَةً، فَلَمَّا أَحَسَّ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ، فَصَلَّى بِهِمْ، فَلَمَّا سَلَّمَ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْتُ، فَرَكَعْنَا الرَّكْعَةَ الَّتِي سَبَقَتْنَا»
சமீப விமர்சனங்கள்