Author: Farook

Muslim-102

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

102. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் கொள்ளையடித்தல் பற்றி இடம்பெற்றுள்ளது. “மதிப்பு மிக்க செல்வத்தை“ எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 1


بِمِثْلِ حَدِيثِ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، ِ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَذَكَرَ النُّهْبَةَ وَلَمْ يَقُلْ ذَاتَ شَرَفٍ


Muslim-101

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

101. இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மேற்கண்ட ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

அதில் (ஹதீஸில் இடம்பெற்றுள்ள மூன்று விஷயங்களுடன்) “மக்களின் செல்வத்தைக் கொள்ளையடிப்பவன் கொள்ளையடிக்கும் போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிப்பதில்லை “என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.” “மக்களின் மதிப்பு மிக்க செல்வம்“ எனும் வாசகத்தை அவர்கள் குறிப்பிடவில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து சயீத் பின் முஸய்யப் (ரஹ்),அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்(ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள இதைப் போன்ற ஹதீஸில் “கொள்ளையடித்தல்“ தொடர்பான தகவலைத் தவிர மற்ற அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

Book : 1


«لَا يَزْنِي الزَّانِي»

وَاقْتَصَّ الْحَدِيثَ بِمِثْلِهِ يَذْكُرُ، مَعَ ذِكْرِ النُّهْبَةِ وَلَمْ يَذْكُرْ ذَاتَ شَرَفٍ، قَالَ ابْنُ شِهَابٍ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ أَبِي بَكْرٍ هَذَا إِلَّا النُّهْبَةَ


Muslim-100

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:24

பாவங்களால் இறைநம்பிக்கை குறைகிறது;பாவத்தில் ஈடுபட்டுள்ளவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று கூறுவது,நிறைவான இறைநம்பிக்கை அவனிடம் இல்லை என்ற கருத்தில்தான்.

100. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விபச்சாரம் புரிகின்றவன் விபச்சாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான்.திருடன் திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடமாட்டான்.(மது அருந்துகின்றவன்)மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் மலிக் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸை அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மக்களுக்கு அறிவித்துவந்தார்கள்.பிறகு “மேற்கண்ட குற்றங்களுடன் பின்வரும் குற்றத்தையும்

«لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ، وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ» قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُحَدِّثُهُمْ هَؤُلَاءِ عَنْ أَبِي هُرَيْرَةَ، ثُمَّ يَقُولُ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يُلْحِقُ مَعَهُنَّ: «وَلَا يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ»


Muslim-99

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

99. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது.

நபி (ஸல்) அவர்களிடம் நான் (அவர்களின் கட்டளையைச்) செவியேற்று (அதற்குக்) கீழ்படிவதாக உறுதிமொழி அளித்தேன்.அப்போது “என்னால் இயன்ற விஷயங்களில்” “ என்று சேர்த்துக் கூறும்படி எனக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தார்கள்.மேலும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நனமை நாடுவேன் என்றும் உறுதிமொழி அளித்தேன்.

இதை ஷஅபீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 1


«بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ – فَلَقَّنَنِي – فِيمَا اسْتَطَعْتُ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ» قَالَ يَعْقُوبُ فِي رِوَايَتِهِ: قَالَ: حَدَّثَنَا سَيَّارٌ


Muslim-98

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

98. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் நான் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நலம் நாடுவதாக உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

இதை ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 1


«بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»


Muslim-97

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

97. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் தொழுகையைக் கடைப்பிடிப்பதாகவும்,ஸகாத் வழங்குவதாகவும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

இதை கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 1


«بَايَعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى إِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ»


Muslim-96

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

96. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 1


بِمِثْلِهِ

(55) وَحَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامَ، حَدَّثَنَا يَزِيدُ، يَعْنِي ابْنَ زُرَيْعٍ، حَدَّثَنَا رَوْحٌ وَهُوَ ابْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا سُهَيْلٌ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، سَمِعَهُ وَهُوَ يُحَدِّثُ أَبَا صَالِحٍ، عَنْ تَمِيمٍ الدَّارِيِّ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-95

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது” தான்.

95. தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது“ தான் என்று கூறினார்கள். நாங்கள், யாருக்கு (நலம் நாடுவது)?“ என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்“ என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் சுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) அவர்களிடம் “அம்ர் அவர்கள் கஅகாஃ அவர்களிடலிருந்தும்,அவர் உங்கள் தந்தை அபூஸாலிஹ் அவர்களிடமிருந்தும் இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள்“ என்றேன்.அதற்கு சுஹைல் “எனக்கும் என் தந்தைக்கும் இடையே வேறொருவர் அறிவிப்பாளராக இருப்பதை நான் விரும்பவில்லை“ என்று கூறியதுடன், “என் தந்தை யாரிடமிருந்து இந்த ஹதீஸைக் கேட்டார்களோ அவரிடமிருந்தே நானும் கேட்டேன்.அவர் எனக்கு ஷாமில் (சிரியாவில்) நண்பராக இருந்தார் “என்றும் கூறினார்கள்.பின்னர் அந்த நண்பரான அதா பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாகவே சுஹைல் அறிவித்தார்.

Book : 1


«الدِّينُ النَّصِيحَةُ» قُلْنَا: لِمَنْ؟ قَالَ: «لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ»


Muslim-94

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

94. மேற்கண்ட ஹதீஸைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). அவர்கள், “என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்கத்தில் நுழைய முடியாது“ என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Book : 1


«وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا» بِمِثْلِ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ، وَوَكِيعٍ


Muslim-93

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும்.

93. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரையில் சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 1


«لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا، وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا، أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ؟ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ»


Next Page » « Previous Page