Author: Farook

Bukhari-7545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7545. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்)அவர்கள் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்கள் குறித்து அவதூறு கிளப்பியவர்கள் அவர்களின் மீது அவதூறு பேசிய நிகழ்ச்சி தொடர்பாக உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்), ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்), அல்கமா இப்னு வக்காஸ்(ரஹ்), உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) ஆகியோர் என்னிடம் தெரிவித்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் அந்தச் சம்பவத்தின் ஒரு பகுதியை எனக்கு அறிவித்தார்கள்.

ஆயிஷா(ரலி) கூறினார்: நான் (உடல் நலம் குன்றி) படுக்கையில் கிடந்தேன். நான் குற்றமற்றவள் என்பதையும் அல்லாஹ் என்னைக் குற்றமற்றவள் என்று அறிவிப்பான் என்பதையும் அப்போதே அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் என் விஷயத்தில் (என்னைக் கலங்கமற்றவள் என்று எடுத்துரைக்க காலங் காலமாக) ஓதப்படுகிற வேத அறிவிப்பு ஒன்றை அருள்வான் என்று நான் எண்ணிப் பார்க்கவில்லை. ஓதப்படுகிற வசனம் ஒன்றில் என் தொடர்பாக அல்லாஹ் பேசுகிற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்லள் என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. ஆனால், வலிவும், மகத்துவமும் மிக்க அல்லாஹ், ‘அவதூறு கற்பித்தவர்கள்

عَنْ حَدِيثِ عَائِشَةَ، حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ، قَالَتْ: ” فَاضْطَجَعْتُ عَلَى فِرَاشِي وَأَنَا حِينَئِذٍ أَعْلَمُ أَنِّي بَرِيئَةٌ، وَأَنَّ اللَّهَ يُبَرِّئُنِي، وَلَكِنِّي وَاللَّهِ مَا كُنْتُ أَظُنُّ أَنَّ اللَّهَ يُنْزِلُ فِي شَأْنِي وَحْيًا يُتْلَى، وَلَشَأْنِي فِي نَفْسِي كَانَ أَحْقَرَ مِنْ أَنْ يَتَكَلَّمَ اللَّهُ فِيَّ بِأَمْرٍ يُتْلَى، وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ عُصْبَةٌ مِنْكُمْ} العَشْرَ الآيَاتِ كُلَّهَا


Bukhari-7544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 குர்ஆன் அறிஞர், கண்ணியத்திற்குரி யோரும் நல்லோ(ருமான வானவ)ர்களுடன் இருப்பார்; உங்களது (இனிய) குரலால் குர்ஆனுக்கு அழகு சேருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

7544. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ், தன் தூதர் ஒருவர் இனிய குரலில் குர்ஆனை உரக்க ஓதும்போது அதை செவிகொடுத்துக் கேட்டதைப் போன்று, வேறு எதையும் அவன் செவிகொடுத்துக் கேட்டதில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book : 97


«مَا أَذِنَ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِنَبِيٍّ حَسَنِ الصَّوْتِ بِالقُرْآنِ يَجْهَرُ بِهِ»


Bukhari-7543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7543. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

விபசாரம் செய்துவிட்ட ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம், ‘நீங்கள் விபசாரிகளை என்ன செய்வீர்கள்?’ என்று கேட்க, அவர்கள் ‘இருவரின் முகங்களிலும் கரும்புள்ளியிட்டு இருவரையும் கேவலப்படுத்திவிடுவோம்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து ஓதிக் காட்டுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவர்கள் அதை கொண்டுவந்து தாங்கள் விரும்பிய ஓர் (ஓற்றைக் கண்) மனிதரிடம் ‘ஒற்றைக் கண்ணரே! ஓதும்!’ என்று கூறினார்கள். அவர் ஓதிக் கொண்டே சென்றார். அதில் ஓரிடத்தை அடைந்ததும் அந்த இடத்தில் தன்னுடைய கையை வைத்து (மறைத்து)க் கொண்டார். நபி(ஸல்) அவர்கள், ‘கையை எடுங்கள்’ என்று கூற அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே கல்லெறி தண்டனை (ரஜ்கி) தொடர்பான வசனம் ‘பளிச்’ சென்று தெரிந்தது. அந்த மனிதர் ‘முஹம்மதே! இந்த இருவரையும் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும். ஆயினும், நாங்கள் அதை எங்களுக்கிடையே பரஸ்பரம் மறைத்துக்கொண்டிருந்தோம்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள்

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنَ اليَهُودِ قَدْ زَنَيَا، فَقَالَ لِلْيَهُودِ: «مَا تَصْنَعُونَ بِهِمَا؟»، قَالُوا: نُسَخِّمُ وُجُوهَهُمَا وَنُخْزِيهِمَا، قَالَ: {فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ} [آل عمران: 93]، فَجَاءُوا، فَقَالُوا لِرَجُلٍ مِمَّنْ يَرْضَوْنَ: يَا أَعْوَرُ، اقْرَأْ فَقَرَأَ حَتَّى انْتَهَى إِلَى مَوْضِعٍ مِنْهَا فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ، قَالَ: «ارْفَعْ يَدَكَ»، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهِ آيَةُ الرَّجْمِ تَلُوحُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ عَلَيْهِمَا الرَّجْمَ، وَلَكِنَّا نُكَاتِمُهُ بَيْنَنَا، فَأَمَرَ بِهِمَا فَرُجِمَا، فَرَأَيْتُهُ يُجَانِئُ عَلَيْهَا الحِجَارَةَ


Bukhari-7542

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7542. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேய) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். வேதக்காரர்கள் (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். (மாறாக, முஸ்லிம்களே!) கூறுங்கள்: அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோருக்கும் யஃகூபின் சந்ததியினருக்கும் அருளப்பட்டதையும் மற்றும் மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், மற்றும் நபிமார்கள் அனைவருக்கும், அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம். (அல்குர்ஆன்: 2:136)

Book :97


كَانَ أَهْلُ الكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالعِبْرَانِيَّةِ، وَيُفَسِّرُونَهَا بِالعَرَبِيَّةِ لِأَهْلِ الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لاَ تُصَدِّقُوا أَهْلَ الكِتَابِ وَلا تُكَذِّبُوهُمْ وَقُولُوا: {آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ} [البقرة: 136] ” الآيَةَ


Bukhari-7541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 தவ்ராத் உள்ளிட்ட இறைவேதங்களுக்கு அரபு மொழியிலும் பிற மொழிகளிலும் (மொழிபெயர்த்து) விளக்கமளிப்பது அனுமதிக்கப்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) கூறுக: நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாய் இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக் காட்டுங்கள். (3:93)

7541. அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) அறிவித்தார்.

(ரோமப் பேரரசர்) ஹெராக்ளியஸ் தம் மொழி பெயர்ப்பாளரை அழைத்து வரச் சொன்னார். பின்னர் நபி(ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டு வரச் சொல்லி அதைப் படி(க்குமாறு ஆணைபிறப்பி)த்தார். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்… இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமான முஹம்மதிடமிருந்து மன்னர் ஹெராக்ளியஸுக்கு எங்களுக்கும் உங்களுக்கம் இடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். 

Book : 97


أَنَّ هِرَقْلَ دَعَا تَرْجُمَانَهُ، ثُمَّ دَعَا بِكِتَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَهُ: ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ، عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ، إِلَى هِرَقْلَ، وَ: {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ} [آل عمران: 64] الآيَةَ


Bukhari-7540

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7540. ஷுஅபா இப்னு அல்ஹஜ்ஜாஜ்(ரஹ்) அவர்கள் கூறினார்:

முஆவியா இப்னு குர்ரா(ரஹ்) அவர்கள், ‘அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸனீ(ரலி) அவர்கள், மக்கா வெற்றி தினத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகம் ஒன்றின் மீது இருந்தபடி ‘அல்ஃபத்ஹ் எனும் (48 வது) அத்தியாயத்தை’ அல்லது ‘அல்ஃபத்ஹ் அத்தியாயத்தில் ஒரு பகுதியை’ ஓதிக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று எனக்கு அறிவித்தார்கள்’ எனக் கூறிவிட்டு, இப்னு முகஃப்பல்(ரலி) அவர்கள் ஓதியதைப் போன்று அப்படியே ஓதிக் காட்டினார்கள்.

பிறகு, ‘உங்களைச் சுற்றி மக்கள் கூடி விடுவார்கள் எனும் அச்சம் எனக்கில்லாவிட்டால் நபி(ஸல்) அவர்கள் ஓதிய வித்தை இப்னு முகஃப்பல்(ரலி) அவர்கள் ஓசை நயத்துடன் (இழுத்து) ஓதிக் காட்டியதைப் போன்றே நானும் ஓதிக் காட்டியிருப்பேன்’ என்றார்கள். நான், முஆவியா(ரஹ்) அவர்களிடம், ‘அவர்கள் ஓசை நயத்துடன் ஓதிய முறை எப்படி?’ என்று கேட்க (‘ஆ’ எனும் இடத்தில்) ‘ஆ..ஆ..ஆ..’ என்று மும்முறை (இழுத்து) அவர்கள் ஓதினார்கள்’ என்றார்கள்.

Book :97


«رَأَيْتُ رَسُولَ اللهِ ﷺ يَوْمَ الْفَتْحِ عَلَى نَاقَةٍ لَهُ يَقْرَأُ سُورَةَ الْفَتْحِ، أَوْ مِنْ سُورَةِ الْفَتْحِ، قَالَ: فَرَجَّعَ فِيهَا، قَالَ: ثُمَّ قَرَأَ مُعَاوِيَةُ يَحْكِي قِرَاءَةَ ابْنِ مُغَفَّلٍ وَقَالَ: لَوْلَا أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيْكُمْ لَرَجَّعْتُ كَمَا رَجَّعَ ابْنُ مُغَفَّلٍ يَحْكِي النَّبِيَّ ﷺ، فَقُلْتُ لِمُعَاوِيَةَ: كَيْفَ كَانَ تَرْجِيعُهُ؟ قَالَ: آ آ آ ثَلَاثَ مَرَّاتٍ.»


Bukhari-7539

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7539. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: ‘(இறுதித் தூதரான) நான் (இறைத்தூதர்) யூனுஸ் இப்னு மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர்’ என்று சொல்வது எந்த அடியானுக்கும் தகாது. இவ்வாறு (யூனுஸ்) இப்னு மத்தா – மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களின் தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. 179

Book :97


لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: إِنَّهُ خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ” وَنَسَبَهُ إِلَى أَبِيهِ


Bukhari-7538

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7538. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகிறான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையை விட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும். 178

Book :97


«لِكُلِّ عَمَلٍ كَفَّارَةٌ، وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخُلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ المِسْكِ»


Bukhari-7537

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7537. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன்’ என்று அல்லாஹ் கூறுவதாக ஒரு முறை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.177

இதே ஹதீஸ் அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து ‘நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :97


رُبَّمَا ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا تَقَرَّبَ العَبْدُ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، – أَوْ بُوعًا -»، وَقَالَ مُعْتَمِرٌ: سَمِعْتُ أَبِي، سَمِعْتُ أَنَسًا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ


Bukhari-7536

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ).

7536. நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்.

(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவிற்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவிற்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரண்டு கைகளின் நீள அளவிற்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச் செல்கிறேன்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book : 97


«إِذَا تَقَرَّبَ العَبْدُ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً»


Next Page » « Previous Page