Author: Farook

Bukhari-7465

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7465. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் ‘நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்’ என்று சொன்னேன்.

நான் இவ்வாறு சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். திரும்பிச் சென்ற நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையில் தட்டிக் கொண்டே ‘மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.107

Book :97


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَقَهُ وَفَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً، فَقَالَ لَهُمْ: «أَلاَ تُصَلُّونَ»، قَالَ عَلِيٌّ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا أَنْفُسُنَا بِيَدِ اللَّهِ، فَإِذَا شَاءَ أَنْ يَبْعَثَنَا بَعَثَنَا، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قُلْتُ ذَلِكَ، وَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، ثُمَّ سَمِعْتُهُ وَهُوَ مُدْبِرٌ يَضْرِبُ فَخِذَهُ وَيَقُولُ: {وَكَانَ الإِنْسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا} [الكهف: 54]


Bukhari-7464

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7464. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை புரியும்போது வலியுறுத்திக் கேளுங்கள். நீ விரும்பினால் எனக்குக் கொடு என்று கேட்காதீர்கள். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அல்லாஹ்வை நிர்பந்திப்பவர் எவருமில்லை.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.106

Book :97


«إِذَا دَعَوْتُمُ اللَّهَ فَاعْزِمُوا فِي الدُّعَاءِ، وَلاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنْ شِئْتَ فَأَعْطِنِي، فَإِنَّ اللَّهَ لاَ مُسْتَكْرِهَ لَهُ»


Bukhari-7463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 (நபியே!) கூறுக: என் இறைவனின் வாக்குகளை எழுதுவதற்குக் கடலே மையாக ஆனாலும் என் இறைவனின் வாக்குகள் வற்றுவதற்கு முன்னால் கடல் வற்றிப்போய்விடும்; மேலதிகமாக அதைப் போன்ற (கடல்) ஒன்றை நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே எனும் (18:109ஆவது) இறைவசனம். மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுதுகோல்களானாலும் கடல் முழுவதும் மையானாலும் அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்கள் இருந்தாலும்கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போக மாட்டா. திண்ணமாக, அல்லாஹ் வல்லமைமிக்க வனும் நுண்ணறிவாளனும் ஆவான். (31:27) உங்கள் இறைவனாகிய அல்லாஹ் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு,அரியாசனத்தில் (ஆட்சியில்) அமர்ந்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான். மேலும்,அவ்விரவு பகலை விரைவாகப் பின் தொடர்கிறது. அவனே சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவற்றையும் படைத்தான். அவையனைத்தும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்படுகின்றன. படைக்கும் ஆற்றலும் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரமும் அவனுக்குரியவையே. அனைத்துலகங்களுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் வளம் மிக்கவன் ஆவான். (7:54)

7463. இறைத்தூதர்(ஸல்) அவர்கள்

«تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ مِنْ بَيْتِهِ إِلَّا الجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَتِهِ، أَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، أَوْ يَرُدَّهُ إِلَى مَسْكَنِهِ بِمَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»


Bukhari-7462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7462. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவில் உள்ள ஒரு வேளாண் பூமியில் பேரீச்சந் தோட்டத்தில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது யூதர்கள் சிலரை நாங்கள் கடந்து சென்றோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியபடி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது யூதர்களில் ஒருவர் மற்றொருவரிடம் ‘அவரிடம் உயிர் (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்’ என்றார். அதற்கு மற்றவர் ‘அவரிடம் கேட்காதீர்கள். இது தொடர்பாக நீங்கள் விரும்பாத பதிலை அவர் தந்து விடக் கூடும்’ என்று சொல்ல, மற்றவர்கள் ‘நாம் அவரிடம் நிச்சயம் கேட்போம்’ என்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் எழுந்து வந்து) ‘அபுல் காசிமே! உயிர் (ரூஹ்) என்பதென்ன?’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (அவருக்க பதில் எதுவும் சொல்லாமல்) மெளனமாக இருந்தார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறுகின்றது என்று அறிந்து கொண்டேன். ‘(நபியே!) உங்களிடம் அவர்கள் உயிர் பற்றிக் கேட்கிறார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. அவர்களுக்குச் சிறிதளவு ஞானமே வழங்கப்பட்டுள்ளது’ எனும்

بَيْنَا أَنَا أَمْشِي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ حَرْثِ المَدِينَةِ وَهُوَ يَتَوَكَّأُ عَلَى عَسِيبٍ مَعَهُ، فَمَرَرْنَا عَلَى نَفَرٍ مِنَ اليَهُودِ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ، فَقَالَ بَعْضُهُمْ: لاَ تَسْأَلُوهُ أَنْ يَجِيءَ فِيهِ بِشَيْءٍ تَكْرَهُونَهُ، فَقَالَ بَعْضُهُمْ: لَنَسْأَلَنَّهُ، فَقَامَ إِلَيْهِ رَجُلٌ مِنْهُمْ فَقَالَ: يَا أَبَا القَاسِمِ ، مَا الرُّوحُ؟ «فَسَكَتَ عَنْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلِمْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ»، فَقَالَ: (وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتُوا مِنَ العِلْمِ إِلَّا قَلِيلًا)، قَالَ الأَعْمَشُ هَكَذَا فِي قِرَاءَتِنَا


Bukhari-7461

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7461. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் புடைசூழ (தன்னை நபி என வாதிட்ட மகா பொய்யன்) முசைலிமாவுக்கு அருகே நின்றார்கள். அப்போது (தலைமைப் பதவியை உங்களுக்குப் பின் எனக்குத் தர வேண்டும் என அவன் கேட்டான். அதற்கு) நபி(ஸல்) அவர்கள் ‘நீ இந்தப் பேரீச்ச மட்டையின் துண்டை என்னிடம் கேட்டாலும் நான் அதை உனக்குத் தரமாட்டேன். அல்லாஹ் உன் விஷயத்தில் விதித்துள்ள கட்டளையை உன்னால் தாண்டிச் சென்றுவிட முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்துவிடுவான்’ என்றார்கள்.101

Book :97


وَقَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مُسَيْلِمَةَ فِي أَصْحَابِهِ فَقَالَ: «لَوْ سَأَلْتَنِي هَذِهِ القِطْعَةَ مَا أَعْطَيْتُكَهَا، وَلَنْ تَعْدُوَ أَمْرَ اللَّهِ فِيكَ، وَلَئِنْ أَدْبَرْتَ لَيَعْقِرَنَّكَ اللَّهُ»


Bukhari-7460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7460. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் கட்டளையை நிலை நிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்து கொண்டேயிருப்பர். அவர்களை நம் மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்து கொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமைநாள்) வந்துவிடும்.

இதை முஆவியா(ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் இப்னு யுகாமிர்(ரஹ்) அவர்கள், ‘முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள், ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்’ என்று சொல்ல கேட்டேன்’ என்று கூற, முஆவியா(ரலி) அவர்கள் ‘இதோ, இந்த மாலிக் ‘இந்தக் குழுவனிர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்’ என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்’ என்றார்கள். 100

Book :97


«لاَ يَزَالُ مِنْ أُمَّتِي أُمَّةٌ قَائِمَةٌ بِأَمْرِ اللَّهِ، مَا يَضُرُّهُمْ مَنْ كَذَّبَهُمْ وَلاَ مَنْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ وَهُمْ عَلَى ذَلِكَ»، فَقَالَ مَالِكُ بْنُ يُخَامِرَ، سَمِعْتُ مُعَاذًا، يَقُولُ: وَهُمْ بِالشَّأْمِ، فَقَالَ مُعَاوِيَةُ: هَذَا مَالِكٌ يَزْعُمُ أَنَّهُ سَمِعَ مُعَاذًا يَقُولُ: وَهُمْ بِالشَّأْمِ


Bukhari-7459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால் நாம் கூறுவதெல்லாம் ஆகுக’ என்பது தான் . உடனே அது உண்டாகிவிடும் எனும் (16:40ஆவது) இறைவசனம்.

7459. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் கட்டளை(யான மறுமை நாள்) வரும் வரை என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர், (உண்மையை எதிர்க்கும்) மக்களின் மீது மேலாண்மை கொண்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்.

என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.99

Book : 97


«لاَ يَزَالُ مِنْ أُمَّتِي قَوْمٌ ظَاهِرِينَ عَلَى النَّاسِ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللَّهِ»


Bukhari-7458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7458. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் இன மாச்சரியத்திற்காகப் போரிடுகிறார். ஒருவர் வீரத்தை வெளிக்காட்டப் போரிடுகிறார். இன்னொருவர் பிறருக்குக் காட்டிக் கொள்வதற்காகப் போரிடுகிறார். இவர்களில் இறைவழியில் போரிடுகிறவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகப் போரிடுகிறவரே இறைவழியில் போரிடுபவராவார்’ என்று பதிலளித்தார்கள்.98

Book :97


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الرَّجُلُ: يُقَاتِلُ حَمِيَّةً، وَيُقَاتِلُ شَجَاعَةً، وَيُقَاتِلُ رِيَاءً، فَأَيُّ ذَلِكَ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ هِيَ العُلْيَا، فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ»


Bukhari-7457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7457. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவழியில் போராடுவதற்காகவும் அவனுடைய வாக்குகளை உண்மையென நிரூபிப்பதற்காகவும் மட்டுமே வெளியே புறப்பட்டு, அவனுடைய பாதையில் போராடியவரை சொர்க்கத்தில் அனுப்புவதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்; அல்லது அவர் பெற்ற நன்மையுடன், அல்லது (அந்த நன்மையுடன் சேர்த்து) போரில் கிடைத்த செல்வத்துடன் அவரை வீட்டிற்குத் திரும்பக் கொண்டு வர அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான்.

என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.97

Book :97


«تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ، لاَ يُخْرِجُهُ إِلَّا الجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَاتِهِ، بِأَنْ يُدْخِلَهُ الجَنَّةَ، أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ، مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ»


Bukhari-7456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7456. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் மதீனாவிலுள்ள ஒரு வேளாண்மை பூமியில் (பேரீச்சந் தோப்பில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நடந்து (போய்க்) கொண்டிருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றை ஊன்றியவாறு யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்களில் ஒருவர் மற்றொருவரிடம், (நபியவர்களைச் சுட்டிக்காட்டி,) ‘இவரிடம் ‘உயிர்’ (ரூஹ்) பற்றிக் கேளுங்கள்!’ என்றார். இன்னொருவர், ‘இவரிடம் கேட்காதீர்கள்! (நாம் விரும்பாத பதிலை அவர் சொல்லிவிடலாம்)’ என்றார்.

பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி(ஸல்) அவர்களிடம் ‘ரூஹ்’ பற்றிக் கேட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டையை ஊன்றியவர்களாக எழுந்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னாலிருந்த நான், நபி(ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) வருகிறது என அறிந்துகொண்டேன். பிறகு அவர்கள், ‘(நபியே!) உயிரைப் பற்றி அவர்கள் உங்களிடம் கேட்கின்றனர். சொல்லுங்கள்; உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது. உங்களுக்கு ஞானத்தில் சிறிதளவே கொடுக்கப்பட்டுள்ளது’ எனும் (திருக்குர்ஆன் 17:85 வது)

كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَرْثٍ بِالْمَدِينَةِ وَهُوَ مُتَّكِئٌ عَلَى عَسِيبٍ، فَمَرَّ بِقَوْمٍ مِنَ اليَهُودِ ، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: سَلُوهُ عَنِ الرُّوحِ، وَقَالَ بَعْضُهُمْ: لاَ تَسْأَلُوهُ عَنِ الرُّوحِ، فَسَأَلُوهُ، «فَقَامَ مُتَوَكِّئًا عَلَى العَسِيبِ وَأَنَا خَلْفَهُ فَظَنَنْتُ أَنَّهُ يُوحَى إِلَيْهِ، فَقَالَ»: {وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُمْ مِنَ العِلْمِ إِلَّا قَلِيلًا} [الإسراء: 85]، فَقَالَ بَعْضُهُمْ لِبَعْضٍ: قَدْ قُلْنَا لَكُمْ لاَ تَسْأَلُوهُ


Next Page » « Previous Page