Author: Farook

Bukhari-7218

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7218. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது) ‘நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூ பக்ர்(ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான்விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்விதம் தான் (யாரையும் நியமிக்காமல்)விட்டுச் சென்றிருக்கிறார்கள்’ என்றார்கள். உடனே நபித்தோழர்கள் உமர்(ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன்.

قِيلَ لِعُمَرَ أَلاَ تَسْتَخْلِفُ؟ قَالَ: «إِنْ أَسْتَخْلِفْ فَقَدِ اسْتَخْلَفَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي أَبُو بَكْرٍ، وَإِنْ أَتْرُكْ فَقَدْ تَرَكَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» فَأَثْنَوْا عَلَيْهِ فَقَالَ: «رَاغِبٌ رَاهِبٌ، وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْهَا كَفَافًا، لاَ لِي وَلاَ عَلَيَّ، لاَ أَتَحَمَّلُهَا حَيًّا وَلاَ مَيِّتًا»


Bukhari-7217

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51 ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது.

7217. காசிம் இப்னு முஹம்மத் இப்னி அபீ பக்ர் அஸ்ஸித்தீக்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்கள் தம் இறுதி நாள்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா(ரலி) அவர்கள், ‘அந்தோ! என் தலை(வலி)யே!’ என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (-இறப்பு-) ஏற்பட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்’ என்றார்கள். ஆயிஷா(ரலி) அவர்கள், ‘அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்து போக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (என்னுடைய இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், (புன்னகைத்துவிட்டு), ‘இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது.

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: وَارَأْسَاهْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذَاكِ لَوْ كَانَ وَأَنَا حَيٌّ فَأَسْتَغْفِرُ لَكِ وَأَدْعُو لَكِ»، فَقَالَتْ عَائِشَةُ: وَا ثُكْلِيَاهْ، وَاللَّهِ إِنِّي لَأَظُنُّكَ تُحِبُّ مَوْتِي، وَلَوْ كَانَ ذَاكَ، لَظَلَلْتَ آخِرَ يَوْمِكَ مُعَرِّسًا بِبَعْضِ أَزْوَاجِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” بَلْ أَنَا وَارَأْسَاهْ، لَقَدْ هَمَمْتُ – أَوْ أَرَدْتُ – أَنْ أُرْسِلَ إِلَى أَبِي بَكْرٍ وَابْنِهِ فَأَعْهَدَ، أَنْ يَقُولَ: القَائِلُونَ أَوْ يَتَمَنَّى المُتَمَنُّونَ ، ثُمَّ قُلْتُ: يَأْبَى اللَّهُ وَيَدْفَعُ المُؤْمِنُونَ، – أَوْ يَدْفَعُ اللَّهُ وَيَأْبَى المُؤْمِنُونَ


Bukhari-7216

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 அளித்த உறுதிமொழியை முறிப்பது.

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) உங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (உண்மையில்) அல்லாஹ் விடமே உறுதிப் பிரமாணம் செய்கின்றார்கள். அல்லாஹ்வின் கரம் அவர்களுடைய கரத்தின் மீது உள்ளது. உறுதிப் பிரமாணத்தை முறிப்பவர் தமக்கெதிராகவே அதை முறித்துக்கொள்கிறார். அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுப வருக்கு அல்லாஹ் மகத்தான பிரதிபலனை விரைவில் வழங்குவான். (48:10)

7216. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, ‘(இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தை என்னிடமிருந்து பெறுங்கள்’ என்று கோரினார். நபி(ஸல்) அவர்களும் அவரிடம் இஸ்லாத்தை ஏற்கும் விசுவாசப் பிரமாணத்தைப் பெற்றார்கள். பிறகு அவர் அடுத்த நாள் காய்ச்சலுடன் வந்து, ‘(என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து) என்னை விடுவித்துவிடுங்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (விடுவிக்க) மறுத்துவிட்டார்கள்.

அவர் திரும்பிச் சென்றபோது,

جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: بَايِعْنِي عَلَى الإِسْلاَمِ، فَبَايَعَهُ عَلَى الإِسْلاَمِ، ثُمَّ جَاءَ الغَدَ مَحْمُومًا، فَقَالَ: أَقِلْنِي، فَأَبَى، فَلَمَّا وَلَّى، قَالَ: «المَدِينَةُ كَالكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا»


Bukhari-7215

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7215. உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் (-பெண்கள்) உறுதிமொழி (பைஅத்) அளித்தோம். அப்போது அவர்கள் எங்களுக்கு இந்த (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். ஒப்பாரிவைக்கக் கூடாதென்று எங்களுக்குத் தடை விதித்தார்கள். அப்போது எங்களில் ஒரு பெண் (விசுவாசப் பிரமாணம் செய்யும் வகையில் சைகை செய்வதற்காக நீட்டிய) தன்னுடைய கையைப் பின்வாங்கிக் கொண்டு இன்ன பெண் எனக்கு (என் துக்கத்தில் உடனிருந்து ஒப்பாரிவைத்து) உதவினாள். எனவே, நான் அவளுக்குப் பிரதியுபகாரம் செய்ய (அவளுடன் சேர்ந்து ஒப்பாரிவைக்க) விரும்புகிறேன்’ என்று சொன்னாள். நபி(ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அவள் சென்றுவிட்டுப் பிறகு திரும்பி வந்(து உறுதிமொழி அளித்)தாள். (ஒப்பாரி வைக்கமாட்டோம் என்று உறுதிமொழியளித்தவர்களில்) உம்முசுலைம், உம்முல் அலா ஆகியோரும் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களின் துணைவியாரான ‘பின்த் அபீ சப்ராவும்’ அல்லது ‘பின்த் அபீ சப்ராவும் முஆத்(ரலி) அவர்களின் துணைவியாரும்’ தவிர வேறெவரும் தம் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.78

Book :93


بَايَعْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَرَأَ عَلَيْنَا: {أَنْ لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} [الممتحنة: 12]، وَنَهَانَا عَنِ النِّيَاحَةِ، فَقَبَضَتِ امْرَأَةٌ مِنَّا يَدَهَا، فَقَالَتْ: فُلاَنَةُ أَسْعَدَتْنِي، وَأَنَا أُرِيدُ أَنْ أَجْزِيَهَا، فَلَمْ يَقُلْ شَيْئًا، فَذَهَبَتْ ثُمَّ رَجَعَتْ، فَمَا وَفَتِ امْرَأَةٌ إِلَّا أُمُّ سُلَيْمٍ، وَأُمُّ العَلاَءِ، وَابْنَةُ أَبِي سَبْرَةَ، امْرَأَةُ مُعَاذٍ، أَوِ ابْنَةُ أَبِي سَبْرَةَ، وَامْرَأَةُ مُعَاذٍ


Bukhari-7214

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7214. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் ‘நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செயலில் உங்களுக்கு மாறுசெய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்கமாட்டார்கள்.)

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கை, அவர்களுக்குத் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.77

Book :93


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ بِالكَلاَمِ بِهَذِهِ الآيَةِ: {لاَ يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا} [الممتحنة: 12]، قَالَتْ: وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ إِلَّا امْرَأَةً يَمْلِكُهَا


Bukhari-7213

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 பெண்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) இது தொடர்பாக நபி (ஸல்) அவர் களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.75

7213. உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஓர் அவையில் இருந்தபோது எங்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; உங்கள் குழந்தைகளை (வறுமைக்கு அஞ்சி)க் கொல்லமாட்டீர்கள்; நீங்கள் எவர் மீதும் அவதூறை இட்டுக்கட்டி உங்களிடையே பரப்பமாட்டீர்கள்; நன்மையான காரியத்தில் (தலைவருக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளியுங்கள். உங்களில் (இந்த உறுதிமொழிக்கேற்ப நடந்து) அதை நிறைவேற்றுகிறவருக்கு நற்பலன் அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இந்தக் குற்றங்களில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து உலம்லேயே அதற்காக அவர் தண்டிக்கப்பட்டால் அந்தத் தண்டனையே அவரின் (குற்றத்திற்குப்) பரிகாரமாக ஆகிவிடும். அதில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அதை (உலகில்) மறைத்துவிட்டால் அவரின் விவகாரம் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டதாகும்.

قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِي مَجْلِسٍ: «تُبَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا أَوْلاَدَكُمْ، وَلاَ تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ، وَلاَ تَعْصُوا فِي مَعْرُوفٍ، فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَسَتَرَهُ اللَّهُ فَأَمْرُهُ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَاقَبَهُ، وَإِنْ شَاءَ عَفَا عَنْهُ»، فَبَايَعْنَاهُ عَلَى ذَلِكَ


Bukhari-7212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 உலகாதாயத்திற்காக மட்டுமே ஒருவருக்கு விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்தல்.

7212. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மூன்றுபேரிடம் அல்லாஹ் மறுமை நாளில் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான். அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு.

ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில் தேவைக்கு மிஞ்சிய தண்ணீரை வைத்திருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்தவிடாமல் தடுத்துவிட்டவன் ஆவான்.

இன்னொருவன் (ஆட்சித்) தலைவரிடம் தன்னுடைய உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிராமணம் செய்துகொண்டவன். தான் விரும்பியதை அவர் கொடுத்தால் அவருக்கு விசுவாசமாக நடப்பான்; இல்லையென்றால் அவருக்கு விசுவாசகமா நடக்கமாட்டான்.

மற்றொருவன் அஸ்ர் நேரத்திற்குப் பிறகு தன்னுடைய வியாபாரப் பொருளை மற்றொருவரிடம் விற்பதற்காக, ‘இந்தப் பொருள் இன்ன (அதிக) விலை கொடுக்கப்(பட்டு வாங்கப்)பட்டது’ என்று அவ்வாறு கொடுக்கப்படாமலேயே (பொய்ச்) சத்தியம் செய்து,

ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ وَلاَ يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ: رَجُلٌ عَلَى فَضْلِ مَاءٍ بِالطَّرِيقِ يَمْنَعُ مِنْهُ ابْنَ السَّبِيلِ، وَرَجُلٌ بَايَعَ إِمَامًا لاَ يُبَايِعُهُ إِلَّا لِدُنْيَاهُ، إِنْ أَعْطَاهُ مَا يُرِيدُ وَفَى لَهُ وَإِلَّا لَمْ يَفِ لَهُ، وَرَجُلٌ يُبَايِعُ رَجُلًا بِسِلْعَةٍ بَعْدَ العَصْرِ، فَحَلَفَ بِاللَّهِ لَقَدْ أُعْطِيَ بِهَا كَذَا وَكَذَا فَصَدَّقَهُ، فَأَخَذَهَا، وَلَمْ يُعْطَ بِهَا


Bukhari-7211

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 47 விசுவாசப் பிரமாணம் (பைஅத்) அளித்து விட்டுப் பின்னர் அதை விலக்கிக்கொள்வது.

7211. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்கு மதீனாவில் காய்ச்சல் கண்டது. உடனே அந்தக் கிராமவாசி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு அவர் (மீண்டும்) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு (மூன்றாம் முறையாக) அவர் நபியவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்’ என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

எனவே, அந்தக் கிராமவாசி (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மதீனா, கொல்லனின் உலை போன்றதேயாகும்.

أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الإِسْلاَمِ، فَأَصَابَ الأَعْرَابِيَّ وَعْكٌ بِالْمَدِينَةِ، فَأَتَى الأَعْرَابِيُّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ الأَعْرَابِيُّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا المَدِينَةُ كَالكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا»


Bukhari-7210

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 சிறுவர்களின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்) .

7210. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.

என் தாயார் ஸைனப் பின்த் ஹுமைத்(ரலி) அவர்கள் (நான் சிறுவனாயிருந்த போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னைக் கொண்டு சென்றார்கள். அப்போது அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இவனிடம் உறுதிப் பிரமாணம் வாங்குங்கள்’ என்று கூற, நபி(ஸல்) அவர்கள், ‘இவன் சிறுவனாயிற்றே’ என்று சொல்லிவிட்டு, (அன்போடு) என் தலையை வருடிக்கொடுத்து எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.72

(அறிவிப்பாளர் ஸுஹ்ரா இப்னு மஅபத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

என் பாட்டனார் அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அவர்கள் ஒரேயொரு ஆட்டை அறுத்துத் தம் குடும்பத்தார் அனைவருக்காகவும் குர்பானி கொடுத்துவந்தார்கள்.

Book : 93


عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ، وَكَانَ قَدْ أَدْرَكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَتْ بِهِ أُمُّهُ زَيْنَبُ بِنْتُ حُمَيْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، بَايِعْهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ صَغِيرٌ» فَمَسَحَ رَأْسَهُ، وَدَعَا لَهُ، وَكَانَ يُضَحِّي بِالشَّاةِ الوَاحِدَةِ عَنْ جَمِيعِ أَهْلِهِ


Bukhari-7209

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 கிராமவாசிகளின் விசுவாசப் பிரமாணம் (பைஅத்).

7209. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

கிராமவாசி ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாக விசுவாசப் பிரமாணம் செய்தார். பின்னர் அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அந்தக் கிராமவாசி, ‘என் விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை விடுவித்து விடுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் (அதை ஏற்க) மறுத்துவிட்டார்கள். பிறகு மீண்டும் வந்து ‘என்னுடைய விசுவாசப் பிரமாணத்திலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்’ என்றார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். எனவே, அந்த மனிதர் (மதீனாவிலிருந்து) வெளியேறினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘மதீனா, கொல்லனின் உலை போன்றதாகும். அது தன்னிலுள்ள தீயவர்களை வெளியேற்றிவிட்டு நல்லவர்களைத் தூய்மைப்படுத்தும்’ என்றார்கள்.

Book : 93


أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الإِسْلاَمِ، فَأَصَابَهُ وَعْكٌ، فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي، فَأَبَى، فَخَرَجَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المَدِينَةُ كَالكِيرِ، تَنْفِي خَبَثَهَا، وَيَنْصَعُ طِيبُهَا»


Next Page » « Previous Page