Author: Farook

Bukhari-7198

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 ஆட்சித் தலைவருக்கு நெருக்கமானவர் களும் அவருடைய ஆலோசகர்களும். (3:118ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பித்தானா’ (நெருக்கமானோர்) என்பதற்கு அந்தரங்க நண்பர்கள்’என்று பொருள்.

7198. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் ஓர் இறைத்தூதரை அனுப்பினாலும் சரி, ஒருவரை (ஆட்சிக்கு)ப் பிரதிநிதியாக ஆக்கினாலும் சரி அவர்களுக்கு இரண்டு நெருக்கமான ஆலோசகர்கள் அவசியம் இருப்பார்கள். ஓர் ஆலோசகர், அவரை நன்மை செய்யும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். மற்றோர் ஆலோசகர், அவரைத் தீமை புரியும்படி ஏவி அதற்குத் தூண்டுகோலாக இருப்பார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.62

இதே ஹதீஸ் வேறு பல அறிவிப்பாளர் தொடர்கள் வரியாகவும் வந்துள்ளது.

Book : 93


مَا بَعَثَ اللَّهُ مِنْ نَبِيٍّ، وَلاَ اسْتَخْلَفَ مِنْ خَلِيفَةٍ، إِلَّا كَانَتْ لَهُ بِطَانَتَانِ: بِطَانَةٌ تَأْمُرُهُ بِالْمَعْرُوفِ وَتَحُضُّهُ عَلَيْهِ، وَبِطَانَةٌ تَأْمُرُهُ بِالشَّرِّ وَتَحُضُّهُ عَلَيْهِ، فَالْمَعْصُومُ مَنْ عَصَمَ اللَّهُ تَعَالَى “، وَقَالَ سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، بِهَذَا، وَعَنْ ابْنِ أَبِي عَتِيقٍ، وَمُوسَى، عَنْ ابْنِ شِهَابٍ، مِثْلَهُ، وَقَالَ شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَوْلَهُ، وَقَالَ الأَوْزَاعِيُّ، وَمُعَاوِيَةُ بْنُ سَلَّامٍ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ ابْنُ أَبِي حُسَيْنٍ، وَسَعِيدُ بْنُ زِيَادٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَوْلَهُ، وَقَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، حَدَّثَنِي صَفْوَانُ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7197

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41 ஆட்சித் தலைவர் தம் அதிகாரிகளிடம் கணக்குக் கேட்பது.

7197. அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இப்னுல் லுதபிய்யா (அல்லது இப்னுல் உதபிய்யா(ரலி) அவர்களை பனூ சுலைம் குலத்தாரின் ஸகாத் பொருட்களை வசூலிக்கும் அதிகாரியாக நியமித்தார்கள். (அவர் பனூசுலைம் குலத்தாரிடம் சென்று ஸகாத் பொருட்களை வசூலித்துக் கொண்டு) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் கணக்குக் கேட்டார்கள். அப்போது இப்னுல் லுதபிய்யா(ரலி) அவர்கள், ‘இது உங்களுக்காக உள்ளது; இது எனக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு’ என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் (உங்களின் வாதத்தில்) உண்மையாளராக இருந்தால் நீங்கள் உங்கள் தந்தையின் வீட்டிலும் தாயின் வீட்டிலும் உட்கார்ந்து கொண்டு உங்களைத் தேடி அன்பளிப்பு வருகிறதா பாருங்கள்’ என்றார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, ‘இறைவனைப் போற்றிய பின் கூறுகிறேன்: அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் சிலவற்றுக்கு உங்களில்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَ ابْنَ الأُتَبِيَّةِ عَلَى صَدَقَاتِ بَنِي سُلَيْمٍ، فَلَمَّا جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَحَاسَبَهُ قَالَ: هَذَا الَّذِي لَكُمْ، وَهَذِهِ هَدِيَّةٌ أُهْدِيَتْ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهَلَّا جَلَسْتَ فِي بَيْتِ أَبِيكَ، وَبَيْتِ أُمِّكَ حَتَّى تَأْتِيَكَ هَدِيَّتُكَ إِنْ كُنْتَ صَادِقًا»، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَطَبَ النَّاسَ وَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: ” أَمَّا بَعْدُ، فَإِنِّي أَسْتَعْمِلُ رِجَالًا مِنْكُمْ عَلَى أُمُورٍ مِمَّا وَلَّانِي اللَّهُ فَيَأْتِي أَحَدُكُمْ فَيَقُولُ: هَذَا لَكُمْ، وَهَذِهِ هَدِيَّةٌ أُهْدِيَتْ لِي، فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ، وَبَيْتِ أُمِّهِ حَتَّى تَأْتِيَهُ هَدِيَّتُهُ إِنْ كَانَ صَادِقًا، فَوَاللَّهِ لاَ يَأْخُذُ أَحَدُكُمْ مِنْهَا شَيْئًا – قَالَ هِشَامٌ بِغَيْرِ حَقِّهِ – إِلَّا جَاءَ اللَّهَ يَحْمِلُهُ يَوْمَ القِيَامَةِ، أَلاَ فَلَأَعْرِفَنَّ مَا جَاءَ اللَّهَ رَجُلٌ بِبَعِيرٍ لَهُ رُغَاءٌ، أَوْ بِبَقَرَةٍ لَهَا خُوَارٌ، أَوْ شَاةٍ تَيْعَرُ «، ثُمَّ رَفَعَ يَدَيْهِ حَتَّى رَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ» أَلاَ هَلْ بَلَّغْتُ


Bukhari-7196

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7196. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப்(ரலி) கூறினார்: (ரோம் நாட்டு மன்னர்) ஹெராக்ளியஸ், நான் குறைஷி வணிகக் குழு ஒன்றில் இருந்தபோது எனக்கு ஆளனுப்பி அழைத்துவரச் செய்துவிட்டு, தம் மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, ‘நான் இவரிடம் (சில கேள்விகள்) கேட்பேன்; இவர் பதில் கூறும்போது பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார் என்று தெரிவித்துவிட வேண்டும் என இவருடைய நண்பர்களிடம் கூறிவிடு’ என்றார். பிறகு முழு ஹதீஸையும் சொன்னார். (இறுதியில்) அவர் தம் மொழிபெயர்ப்பாளரிடம், ‘நீர் சொல்வது உண்மையாயிருந்தால் என்னுடை இவ்விரு பாதங்கள் இருக்கும் இடத்திற்கு விரைவில் அவர்(முஹம்மத்) அதிபராம்விடுவார் என அவரிடம் சொல்’ என்றார்.60

Book :93


أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا، فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ، فَذَكَرَ الحَدِيثَ، فَقَالَ لِلتُّرْجُمَانِ: ” قُلْ لَهُ: إِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا، فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَيَّ هَاتَيْنِ


Bukhari-7195

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7195. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், யூதர்களின் (ஹீப்ரு அல்லது சிரியாக மொழி) எழுத்து வடிவைக் கற்றுக்கொள்ளும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே கற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்கள் (யூதர்களுக்கு) அனுப்பும் கடிதங்களை நான் எழுதிவந்தேன்; யூதர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு எழுதும் கடிதங்களை நபி(ஸல்) அவர்களுக்குப் படித்துக் காட்டி வந்தேன்.

உமர்(ரலி) அவர்கள் தம்மிடம் அலீ(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் இருக்க, (மொழி பெயர்ப்பாளர் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாத்திப்(ரலி) அவர்களிடம்), ‘இந்த(க் கர்ப்பிணி)ப் பெண் என்ன சொல்கிறாள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இவள் தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கிறாள்’ என்றார்கள்.

அபூ ஜம்ரா(ரலி) அவர்கள், ‘நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் அவர்களிடம் தீர்ப்பு கேட்டுவரும்) மக்களுக்கும் இடையே மொழிபெயர்ப்பாளராக இருந்துவந்தேன்’ என்று கூறுகிறார்கள்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ «أَنْ يَتَعَلَّمَ كِتَابَ اليَهُودِ» حَتَّى كَتَبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُتُبَهُ، وَأَقْرَأْتُهُ كُتُبَهُمْ، إِذَا كَتَبُوا إِلَيْهِ وَقَالَ عُمَرُ وَعِنْدَهُ عَلِيٌّ، وَعَبْدُ الرَّحْمَنِ، وَعُثْمَانُ: «مَاذَا تَقُولُ هَذِهِ؟»، قَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ حَاطِبٍ: فَقُلْتُ: تُخْبِرُكَ بِصَاحِبِهَا الَّذِي صَنَعَ بِهَا وَقَالَ أَبُو جَمْرَةَ: كُنْتُ أُتَرْجِمُ بَيْنَ ابْنِ عَبَّاسٍ وَبَيْنَ النَّاسِ ” وَقَالَ بَعْضُ النَّاسِ: لاَ بُدَّ لِلْحَاكِمِ مِنْ مُتَرْجِمَيْنِ