Author: Farook

Bukhari-7166

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7166. பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவுகொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்று விடலாமா? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?’ என்று கேட்டார். பிறகு (இறைகட்டளைக்கேற்பக் கணவன், மனைவி) இருவரும் பள்ளிவாசலிலேயே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்கள். அப்போது நானும் அங்கிருந்தேன்.28

Book :93


أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا، أَيَقْتُلُهُ؟ «فَتَلاَعَنَا فِي المَسْجِدِ» وَأَنَا شَاهِدٌ


Bukhari-7165

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 பள்ளிவாசலில் தீர்ப்புக் கூறுவதும் (தம்பதியரை) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்’) செய்யவைப்பதும். உமர் (ரலி) அவர்கள் (ஒரு தம்பதியரை) நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்’) செய்யச் சொன்னார்கள். (நீதிபதி) ஷுரைஹ் (ரஹ்), யஹ்யா பின் யஅமர் (ரஹ்) ஆகியோர் பள்ளிவாசலில் தீர்ப்பளித்துள்ளார்கள். (ஆளுநர்) மர்வான் பின் ஹகம், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் சத்தியம் செய்ய வேண்டும் என்று சொற்பொழிவு மேடை (மிம்பர்) அருகே தீர்ப்பளித்தார்கள். ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களும் ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும் மஸ்ஜிதுக்கு வெளியே முற்றத்தில் வைத்துத் தீர்ப்பளித்துள்ளார்கள்.

7165. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

ஒரு தம்பதியர் (பள்ளிவாசலில்) சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த நேரத்தில் நான் அங்கிருந்தேன். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாக இருந்தேன். அவ்விருவரும் (மணபந்தத்திலிருந்து) பிரித்துவைக்கப்பட்டார்கள்.

Book : 93


«شَهِدْتُ المُتَلاَعِنَيْنِ، وَأَنَا ابْنُ خَمْسَ عَشْرَةَ سَنَةً، وَفُرِّقَ بَيْنَهُمَا»


Bukhari-7164

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7164. உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எனக்கு நன்கொடை வழங்குவார்கள். அப்போது நான், ‘என்னை விட அதிகமாகத் தேவை உள்ளவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்வேன். ஒரு முறை எனக்கு (நன்கொடைப்) பெருநாள் ஒன்றை அவர்கள் வழங்கியபோது, நான், ‘என்னை விட அதிகமாக இது யாருக்குத் தேவைப்படுகிறதோ அவருக்கு இதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) நீங்கள் இதை வாங்கி, உங்களுக்கு உடைமையாக்கிக் கொள்ளுங்கள். பிறகு (உங்களுக்குத் தேவைப்படாவிட்டால்) தர்மம் செய்துவிடுங்கள். நீங்கள் ஆசைப்பட்டு எதிர்பார்க்காமலும் நீங்களாகக் கேட்காமலும் இச்செல்வத்திலிருந்து உங்களுக்கு (தானாக) வரும் எதுவாயினும் அதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அப்படி வராவிட்டால் அதன் பின்னே நீங்களாகச் செல்லாதீர்கள்’ என்றார்கள்.

Book :93


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ، فَأَقُولُ أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ: أَعْطِهِ مَنْ هُوَ أَفْقَرُ إِلَيْهِ مِنِّي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهُ، فَتَمَوَّلْهُ، وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ، وَمَالاَ فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»


Bukhari-7163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 16

நீதிபதியாகும் தகுதியை ஒருவர் எப்போது பெறுகிறார்?

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள், நீதிபதிகள் மன இச்சையைப் பின்பற்றக் கூடாது; மக்களுக்கு அஞ்சக் கூடாது; தன் வசனங்களை அற்ப விலைக்கு விற்கக் கூடாது என அவர்களிடம் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியுள்ளான் என்று கூறிவிட்டு,

“தாவூதே! உங்களை நாம் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். ஆகவே, மக்களுக்கிடையே (நேர்மையாக) சத்தியத் தீர்ப்பு வழங்குங்கள். மன இச்சையைப் பின்பற்றாதீர்கள். அது உங்களை இறைவழியிலிருந்து தவறச் செய்து விடும். இறைவழியிலிருந்து தவறிச்செல்பவர்களுக்கு, அவர்கள் கணக்கு வாங்கும் நாளை மறந்துவிட்ட காரணத்தால் கடுமையான வேதனை உண்டு எனும் (அல்குர்ஆன்: 38:26) ஆவது இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மேலும், நிச்சயமாக நாம்தாம் தவ்ராத்’ தையும் அருளினோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன; (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள். இறைபக்தியாளர்களும் அறிஞர் களும் -அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப்

أَنَّهُ قَدِمَ عَلَى عُمَرَ فِي خِلاَفَتِهِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَلَمْ أُحَدَّثْ أَنَّكَ تَلِيَ مِنْ أَعْمَالِ النَّاسِ أَعْمَالًا، فَإِذَا أُعْطِيتَ العُمَالَةَ كَرِهْتَهَا، فَقُلْتُ: بَلَى، فَقَالَ عُمَرُ: فَمَا تُرِيدُ إِلَى ذَلِكَ، قُلْتُ: إِنَّ لِي أَفْرَاسًا وَأَعْبُدًا وَأَنَا بِخَيْرٍ، وَأُرِيدُ أَنْ تَكُونَ عُمَالَتِي صَدَقَةً عَلَى المُسْلِمِينَ، قَالَ عُمَرُ: لاَ تَفْعَلْ، فَإِنِّي كُنْتُ أَرَدْتُ الَّذِي أَرَدْتَ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْطِينِي العَطَاءَ، فَأَقُولُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، حَتَّى أَعْطَانِي مَرَّةً مَالًا، فَقُلْتُ: أَعْطِهِ أَفْقَرَ إِلَيْهِ مِنِّي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْهُ، فَتَمَوَّلْهُ، وَتَصَدَّقْ بِهِ، فَمَا جَاءَكَ مِنْ هَذَا المَالِ وَأَنْتَ غَيْرُ مُشْرِفٍ وَلاَ سَائِلٍ فَخُذْهُ، وَإِلَّا فَلاَ تُتْبِعْهُ نَفْسَكَ»


Bukhari-7162

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 முத்திரையிடப்பெற்ற கடிதத்திற்கு (அது இன்னாரது கடிதம்தான் என்று) சாட்சிய மளிப்பதும், அதில் எது செல்லும்? அல்லது செல்லாது? என்பதும், ஆட்சியாளர் தம் அதிகாரிகளுக்கு எழுதும் கடிதமும், ஒரு நீதிபதி மற்றொரு நீதிபதிக்கு எழுதும் கடிதமும். (அறிஞர் பெரு)மக்களில் சிலர், குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் தவிர மற்ற விஷயங்களில் (நீதிபதிக்கு ஆலோசனை கூறி) ஆட்சியாளர் கடிதம் எழுதலாம் என்று கூறினர். பிறகு அவர்களே,தவறுதலாக நடந்துவிடும் கொலை விஷயத்தில் மட்டுமே (இப்படி ஆலோசனை கூறி ஆட்சியாளர் நீதிபதிக்குக்) கடிதம் எழுதுவது செல்லும் என்று கூறுகிறார்கள். ஏனெனில், இது அவர்களைப் பொறுத்த வரை (இழப்பீடு வழங்க வேண்டிய) பொருள் சம்பந்தப்பட்ட விஷயம்தான். (ஆனால், இந்தக் கருத்து தவறானதாகும்.) ஏனென்றால், இது பொருள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மாறுவ தெல்லாம் கொலை நிரூபணமான பின்புதான். ஆகவே, (ஆரம்பக் கட்டத்தில்,) தவறுதலாக நடந்த கொலையானாலும் வேண்டுமென்றே செய்யப்பட்ட கொலையானாலும் இரண்டும் ஒன்றே. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குற்றவியல் தண்டனைகள் தொடர்பாகத் தம் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்கள்.25 உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களும் உடைக்கப்பட்ட ஒரு பல் தொடர்பான வழக்கில் (தனி மனிதரின்

لَمَّا أَرَادَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الرُّومِ، قَالُوا: إِنَّهُمْ لاَ يَقْرَءُونَ كِتَابًا إِلَّا مَخْتُومًا، ” فَاتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا مِنْ فِضَّةٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِهِ، وَنَقْشُهُ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ


Bukhari-7161

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 மக்களின் உரிமைகள் தொடர்பாக நீதிபதி தமது சொந்த அறிவால் தீர்ப்பளிப்பது செல்லும்; ஆனால்,சந்தேகமும் அவதூறும் கிளம்பும் என்ற அச்சம் அவருக்கு இருக்கலாகாது. நபி (ஸல்) அவர்கள், ஹிந்த் பின்த் உத்பா (ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்று: உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள். (மக்களிடையே) பிரபலமாக உள்ள விஷயங்களில்தான் இது செல்லும்.23

7161. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்) பூமியின் முதும்லுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகு) இன்று பூமியின் முதும்லுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் அடைவதையும் விட உங்கள் வீட்டார் கண்ணியம் அடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக மாறிவிட்டது’ என்று கூறிவிட்டுப் பிறகு, ‘(என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதர். அவருக்கரிய (செல்வத்)திலிருந்து (அவருக்குத் தெரியாமல்)

جَاءَتْ هِنْدٌ بِنْتُ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ، مَا كَانَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ، وَمَا أَصْبَحَ اليَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ خِبَائِكَ، ثُمَّ قَالَتْ: إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَيَّ مِنْ حَرَجٍ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ عِيَالَنَا؟ قَالَ لَهَا: «لاَ حَرَجَ عَلَيْكِ أَنْ تُطْعِمِيهِمْ مِنْ مَعْرُوفٍ»


Bukhari-7160

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7160. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

என் மனைவி மாதவிடாயில் இருந்தபோது, அவளை நான் மணவிலக்கு (தலாக்) செய்துவிட்டேன். இதை (என் தந்தை) உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அது குறித்துக் கோபமடைந்தார்கள். பிறகு, ‘அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும். பின்னர் அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும் வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும். பிறகு அவளை மணவிலக்குச் செய்தே தீர வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அவளை மணவிலக்குச் செய்து விடட்டும்’ என்றார்கள்.22

Book :93


أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، فَذَكَرَ عُمَرُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَغَيَّظَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «لِيُرَاجِعْهَا، ثُمَّ لِيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ فَتَطْهُرَ، فَإِنْ بَدَا لَهُ أَنْ يُطَلِّقَهَا فَلْيُطَلِّقْهَا»


Bukhari-7159

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7159. அபூ மஸ்வூத் அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ன மனிதர் தொழுகையை எங்களுக்கு நீண்ட நேரம் தொழுகை நடத்துவதால் அதிகாலை(க் கூட்டு)த் தொழுகைக்கு வராமல் நான் தாமதித்துவிடுகிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் அன்று ஆற்றிய உரையின்போது கோபப்பட்டதைவிடக் கடுமையாகக் கோபப்பட்டு நான் ஒருபோதும் கண்டதில்லை. பிறகு அவர்கள், ‘மக்களே! (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பூட்டுபவர்களும் உங்களில் உள்ளனர். எனவே, உங்களில் யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினாலும் அவர் சுருக்கமாகத் தொழுகை நடத்தட்டும். ஏனெனில், மக்களில் முதியோரும் பலவீனரும் அலுவல் உடையோரும் உள்ளனர்’ என்றார்கள்.21

Book :93


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي وَاللَّهِ لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ، مِمَّا يُطِيلُ بِنَا فِيهَا، قَالَ: فَمَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ أَشَدَّ غَضَبًا فِي مَوْعِظَةٍ مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيُوجِزْ، فَإِنَّ فِيهِمُ الكَبِيرَ، وَالضَّعِيفَ، وَذَا الحَاجَةِ»


Bukhari-7158

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 நீதிபதி கோபமாக இருக்கும் போது தீர்ப்போ மார்க்க விளக்கமோ அளிக்கலாமா?

7158. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ரா(ரலி) அவர்கள் தம் புதல்(வரும் என் சகோதரருமான உபைதுல்லாஹ் என்ப)வருக்குக் கடிதம் எழுதினார்கள். -அவர் (ஈரான் – ஆப்கன் எல்லையிலிருந்த) சிஜிஸ்தான் பகுதியில் (நீதிபதியாக) இருந்தார். ‘நீ கோபமாக இருக்கும்போது இருவரிடையே தீர்ப்பளிக்க வேண்டாம். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், நீதிபதி எவரும் கோபமாக இருக்கும்போது இருவருக்கிடையே தீர்ப்பளிக்கவேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்’ (என்று அக்கடிதத்தில் எழுதினார்கள்).

Book : 93


كَتَبَ أَبُو بَكْرَةَ إِلَى ابْنِهِ، وَكَانَ بِسِجِسْتَانَ، بِأَنْ لاَ تَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ، فَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَقْضِيَنَّ حَكَمٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ»


Bukhari-7157

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7157. (தொடர்ந்து) அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

(யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்ற பின்பு யூதராக மாறிவிட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்தபோது முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்கள் வந்தார்கள். ‘இவருக்கு என்ன?’ என்று முஆத் கேட்டார்கள். நான், ‘இவர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு யூதராம்விட்டார்’ என்று சொன்னேன். முஆத்(ரலி) அவர்கள், ‘நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமரமாட்டேன். இதுதான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும்’ என்றார்கள்.20

Book :93


أَنَّ رَجُلًا أَسْلَمَ ثُمَّ تَهَوَّدَ، فَأَتَى مُعَاذُ بْنُ جَبَلٍ وَهُوَ عِنْدَ أَبِي مُوسَى فَقَالَ: مَا لِهَذَا؟ قَالَ: أَسْلَمَ ثُمَّ تَهَوَّدَ، قَالَ: «لاَ أَجْلِسُ حَتَّى أَقْتُلَهُ، قَضَاءُ اللَّهِ وَرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page