Author: Farook

Bukhari-7136

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7136. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

யஃஜூஜ் மற்றும் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவர் இந்த அளவிற்குத் திறக்கப்படுகின்றது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரனா வுஹைப் இப்னு காலித்(ரஹ்) அவர்கள் (அரபு எண்) தொண்ணூறு என்பதைப் போன்று (விரல்களை) மடித்துக் காட்டினார்கள்.68

Book :92


«يُفْتَحُ الرَّدْمُ، رَدْمُ يَأْجُوجَ وَمَأْجُوجَ، مِثْلُ هَذِهِ وَعَقَدَ وُهَيْبٌ تِسْعِينَ»


Bukhari-7135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 – யஃஜூஜ்/ மஃஜூஜ் கூட்டத்தார் (66)

7135. ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அறிவித்தார்.

ஒரு நாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடுக்கத்துடன் என்னிடம் வந்து, ‘வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை; நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபுகளுக்குக் கேடு நேரவிருக்கிறது. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவிற்கு இன்று திறக்கப்பட்டுள்ளது’ என்று சொல்லி, தம் கட்டை விரலையும் அதற்கடுத்த விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களிடையே நல்லவர்கள் இருக்க, நாங்கள் அழிந்துபோவோமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; தீமை பெரும்விடும்போது’ என்றார்கள்.67

Book : 92


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا يَوْمًا فَزِعًا يَقُولُ: «لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَيْلٌ لِلْعَرَبِ مِنْ شَرٍّ قَدِ اقْتَرَبَ فُتِحَ اليَوْمَ مِنْ رَدْمِ يَأْجُوجَ وَمَأْجُوجَ مِثْلُ هَذِهِ، وَحَلَّقَ بِإِصْبَعَيْهِ الإِبْهَامِ وَالَّتِي تَلِيهَا»، قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ؟ قَالَ: «نَعَمْ إِذَا كَثُرَ الخُبْثُ»


Bukhari-7134

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7134. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மதீனா நகருக்கு தஜ்ஜால் வருவான். அதை வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, அதை தஜ்ஜால் நெருங்கமாட்டான்; அல்லாஹ் நாடினால் கொள்ளைநோயும் அணுகாது.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :92


«المَدِينَةُ يَأْتِيهَا الدَّجَّالُ، فَيَجِدُ المَلاَئِكَةَ يَحْرُسُونَهَا، فَلاَ يَقْرَبُهَا الدَّجَّالُ» قَالَ: «وَلاَ الطَّاعُونُ إِنْ شَاءَ اللَّهُ»


Bukhari-7133

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7133. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மதீனாவின் தெருக்களில் வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள். அதில் கொள்ளை நோய் நுழையாது; தஜ்ஜாலும் நுழைய மாட்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :92


«عَلَى أَنْقَابِ المَدِينَةِ مَلاَئِكَةٌ، لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ، وَلاَ الدَّجَّالُ»


Bukhari-7132

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 – தஜ்ஜால் மதீனாவிற்குள் நுழையமாட்டான்.

7132. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். அவனைப் பற்றி எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவித்த இவற்றில் இவையும் அடங்கும்:

மதீனாவின் தெருக்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (ஷாம் நாட்டுத் திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்த நாளில் ‘மக்களிலேயே சிறந்தவரான ஒருவர்’ அல்லது ‘மக்களிலேயே சிறந்தவர்களில் ஒருவர்’ அவனிடம் புறப்பட்டுச் சென்று, ‘எவனுடைய செய்தியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதிகூறுகிறேன்’ என்று கூறுவார். அப்போது தஜ்ஜால், ‘நான் இவரைக் கொன்று பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன் தான் எனும்) விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்கள்?’ என்று (தம்முடன்

حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا حَدِيثًا طَوِيلًا عَنِْ الدَّجَّالِ، فَكَانَ فِيمَا يُحَدِّثُنَا بِهِ أَنَّهُ قَالَ: ” يَأْتِي الدَّجَّالُ، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلَ نِقَابَ المَدِينَةِ، فَيَنْزِلُ بَعْضَ السِّبَاخِ الَّتِي تَلِي المَدِينَةَ، فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ، وَهُوَ خَيْرُ النَّاسِ – أَوْ مِنْ خِيَارِ النَّاسِ – فَيَقُولُ أَشْهَدُ أَنَّكَ الدَّجَّالُ الَّذِي حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:61] حَدِيثَهُ، فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتُمْ إِنْ قَتَلْتُ هَذَا، ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ؟ فَيَقُولُونَ: لاَ، فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ، فَيَقُولُ: وَاللَّهِ مَا كُنْتُ فِيكَ أَشَدَّ بَصِيرَةً مِنِّي اليَوْمَ، فَيُرِيدُ الدَّجَّالُ أَنْ يَقْتُلَهُ فَلاَ يُسَلَّطُ عَلَيْهِ


Bukhari-7131

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7131. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக, உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

இதே கருத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.

Book :92


«مَا بُعِثَ نَبِيٌّ إِلَّا أَنْذَرَ أُمَّتَهُ الأَعْوَرَ الكَذَّابَ، أَلاَ إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّ رَبَّكُمْ لَيْسَ بِأَعْوَرَ، وَإِنَّ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ» فِيهِ أَبُو هُرَيْرَةَ، وَابْنُ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7130. ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

தஜ்ஜாலைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது, ‘அவனுடன் நீரும் நெருப்பும் இருக்கும். அவனுடன் உள்ள நெருப்பு (உண்மையில்) குளிர்ந்த நீராகவும், அவனுடன் உள்ள நீர் (உண்மையில்) நெருப்பாகவும் இருக்கும்’ என்றார்கள்.63

அபூ மஸ்வூத்(ரலி) அவர்களும், ‘நான் இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றிருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

Book :92


قَالَ فِي الدَّجَّالِ: «إِنَّ مَعَهُ مَاءً وَنَارًا، فَنَارُهُ مَاءٌ بَارِدٌ، وَمَاؤُهُ نَارٌ» قَالَ أَبُو مَسْعُودٍ أَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-7129

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7129. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவதை கேட்டிருக்கிறேன்.62

Book :92


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَسْتَعِيذُ فِي صَلاَتِهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ»


Bukhari-7128

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7128. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(ஒரு நாள்) நான் உறங்கிக் கொண்டிருந்தபோது நான் கஅபாவைச் சுற்றிவந்து கொண்டிருப்பதாக (கனவில்) கண்டேன். அப்போது மாநிறமான படிந்த தலை முடியுடைய மனிதர் ஒருவரின் தலையிலிருந்து ‘தண்ணீர் சொட்டிக் கொண்டிருக்க’ அல்லது ‘சிந்திக் கொண்டிருக்க’க் கண்டேன். ‘இவர் யார்?’ என்று கேட்டேன். ‘மர்யமின் மகன் (ஈசா)’ என்றார்கள். பிறகு நான் திரும்பிப் பார்த்தபடியே சென்றபோது (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்று ஒரு கண் குருடான, சுருட்டைத் தலைமுடியுடைய, சிவப்பான, பருமனான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். ‘இவன்தான் தஜ்ஜால், ‘மக்களில் இவனுக்கு உருவ அமைப்பில் ஒப்பானவன் ‘இப்னு கத்தன்’ எனும் குஸாஆ குலத்து மனிதன் ஆவான்’ என்றார்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.61

Book :92


بَيْنَا أَنَا نَائِمٌ أَطُوفُ بِالكَعْبَةِ، فَإِذَا رَجُلٌ آدَمُ سَبْطُ الشَّعَرِ يَنْطُفُ – أَوْ يُهَرَاقُ – رَأْسُهُ مَاءً، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا ابْنُ مَرْيَمَ، ثُمَّ ذَهَبْتُ أَلْتَفِتُ، فَإِذَا رَجُلٌ جَسِيمٌ أَحْمَرُ جَعْدُ الرَّأْسِ أَعْوَرُ العَيْنِ، كَأَنَّ عَيْنَهُ عِنَبَةٌ طَافِيَةٌ، قَالُوا: هَذَا الدَّجَّالُ أَقْرَبُ النَّاسِ بِهِ شَبَهًا ابْنُ قَطَنٍ رَجُلٌ مِنْ خُزَاعَةَ


Bukhari-7127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7127. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிய பின் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது ‘நான் உங்களை அவனைப் பற்றி அச்சுறுத்தி எச்சரிக்கிறேன். இறைத்தூதர் எவரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. ஆயினும், எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாருக்குத் தெரிவிக்காத ஒரு தகவலை நான் உங்களுக்குச் சொல்வேன்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன்’ என்றார்கள்.

Book :92


قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: «إِنِّي لَأُنْذِرُكُمُوهُ، وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، وَلَكِنِّي سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، إِنَّهُ أَعْوَرُ، وَإِنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»


Next Page » « Previous Page