Author: Farook

Bukhari-6895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)33

6895. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

இதைப் போன்றே நபி (ஸல்) அவர்களிடம் தாம் செவியேற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.

Book : 87


«هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ» يَعْنِي الخِنْصَرَ وَالإِبْهَامَ


Bukhari-6894

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

பல்லுக்குப் பல்32

6894. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளுடைய முன் பல்லை உடைத்துவிட்டார். எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.

Book : 87


«أَنَّ ابْنَةَ النَّضْرِ لَطَمَتْ جَارِيَةً فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالقِصَاصِ»


Bukhari-6893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6893. யஃலா இப்னு உமய்யா (ரலி) அறிவித்தார்.

நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒருவர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தம் கையை விடுவிக்கும் போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

Book :87


«خَرَجْتُ فِي غَزْوَةٍ، فَعَضَّ رَجُلٌ فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَأَبْطَلَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-6892

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

ஒருவர் மற்றவர்(கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்…?31

6892. இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்து விட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது’ என்றார்கள்.

Book : 87


أَنَّ رَجُلًا عَضَّ يَدَ رَجُلٍ، فَنَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ، فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الفَحْلُ؟ لاَ دِيَةَ لَكَ»


Bukhari-6891

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

ஒருவர் தவறுதலாகத் தம்மைத் தாமே கொலை செய்து கொண்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.29

6891. ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரிடம்) ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். எனவே, ஆமிர்(ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த ஒட்டகவோட்டி யார்?’ என்று கேட்டார்கள். ‘ஆமிர் இப்னு அக்வஃ’ என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்து கொண்ட) மக்கள், ‘அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (இறைத்தூதர் அவர்களே!)?’ என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் காலையில் (தம் முழங்காலில் தம் வாளாலேயே) தாக்கப்பட்டு

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: أَسْمِعْنَا يَا عَامِرُ مِنْ هُنَيْهَاتِكَ، فَحَدَا بِهِمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ السَّائِقُ» قَالُوا: عَامِرٌ، فَقَالَ: «رَحِمَهُ اللَّهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَلَّا أَمْتَعْتَنَا بِهِ، فَأُصِيبَ صَبِيحَةَ لَيْلَتِهِ، فَقَالَ القَوْمُ: حَبِطَ: عَمَلُهُ، قَتَلَ نَفْسَهُ، فَلَمَّا رَجَعْتُ وَهُمْ يَتَحَدَّثُونَ أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَجِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، فَدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَقَالَ: «كَذَبَ مَنْ قَالَهَا، إِنَّ لَهُ لَأَجْرَيْنِ اثْنَيْنِ، إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، وَأَيُّ قَتْلٍ يَزِيدُهُ عَلَيْهِ»


Bukhari-6890

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால்..?27

6890. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!’ என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள்.

அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை’ என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.

لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ هُزِمَ المُشْرِكُونَ، فَصَاحَ إِبْلِيسُ: أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ اليَمَانِ، فَقَالَ: أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ” قَالَتْ: «فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، قَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ» قَالَ عُرْوَةُ: «فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ»


Bukhari-6889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6889. யஹ்யா இப்னு ஸயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘ஒருவர் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டு சென்றார்கள்’ என்று ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நான் ‘இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஹுமைத் (ரஹ்) அவர்கள், ‘அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தாம் ( அறிவித்தார்கள்)’ என்று பதிலளித்தார்கள். 26

Book :87


أَنَّ رَجُلًا اطَّلَعَ فِي بَيْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَسَدَّدَ إِلَيْهِ مِشْقَصًا» فَقُلْتُ: مَنْ حَدَّثَكَ؟ قَالَ: أَنَسُ بْنُ مَالِكٍ


Bukhari-6888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6888. மேற்சொன்ன அதே அறிவிப்பாளர் தொடரில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.

Book :87


«لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ، وَلَمْ تَأْذَنْ لَهُ، خَذَفْتَهُ بِحَصَاةٍ، فَفَقَأْتَ عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ»


Bukhari-6887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தமது உறவினருக் காகத்) தாமே பழிவாங்குவதும்.24

6887. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். 25

Book : 87


«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-6886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

ஆண்களாயினும் பெண்களாயினும் காயங்களுக்கும் தண்டனை உண்டு.22

பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படுவான் என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆணைக் கொன்றதற்குத் தண்டனையாகப் பெண் பழிவாங்கப்படுவாள். இது வேண்டுமென்றே நடந்த எல்லாக் கொலைகளுக்கும், கொலையை விடக் குறைவான காயங்களுக்கும் பொருந்தும் என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து இதையே அறிவித்துள்ளார்கள். ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) அவர் களுடைய சகோதரி ஓர் ஆணைக் காயப் படுத்திவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கும்) பழிவாங்கல் உண்டு என்று சொன்னார்கள்.

6886. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்யப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம்.

لَدَدْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ، فَقَالَ: «لاَ تُلِدُّونِي» فَقُلْنَا: كَرَاهِيَةُ المَرِيضِ لِلدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ: «لاَ يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلَّا لُدَّ، غَيْرَ العَبَّاسِ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ»


Next Page » « Previous Page