Author: Farook

Bukhari-6875

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6875. அஹ்னஃப் இப்னு கைஸ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் (ஜமல் போரில்) இந்த மனிதருக்கு (அலீ (ரலி) அவர்களுக்கு) உதவுவதற்காக (காலதாமதமாக)ப் போய்க் கொண்டிருந்தேன். அப்போது அபூ பக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, ‘எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். ‘நான் இந்த மனிதருக்கு உதவச் சொல்கிறேன்’ என்றேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். ஏனெனில், (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், ‘இரண்டு முஸ்லிம்கள் தம் வாட்களால் சண்டையிட்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் ஆகிய இருவருமே நரகத்திற்கே செல்வார்கள்’ என்றார்கள். அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! இவரோ கொலை செய்தவர். (நரகத்திற்குச் செல்வது சரி!) கொல்லப்பட்டவரின் நிலை என்ன? (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்?)’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கொல்ல வேண்டுமென்று இவர் பேராசை கொண்டிருந்தாரே!’ என்று கூறினார்கள்.12

Book :87


ذَهَبْتُ لِأَنْصُرَ هَذَا الرَّجُلَ، فَلَقِيَنِي أَبُو بَكْرَةَ، فَقَالَ: أَيْنَ تُرِيدُ؟ قُلْتُ: أَنْصُرُ هَذَا الرَّجُلَ، قَالَ: ارْجِعْ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا التَقَى المُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالقَاتِلُ وَالمَقْتُولُ فِي النَّارِ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا القَاتِلُ، فَمَا بَالُ المَقْتُولِ؟ قَالَ: «إِنَّهُ كَانَ حَرِيصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ»


Bukhari-6874

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6874. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ மூஸா (ரலி) அவர்களும் இதை அறிவித்தார்கள்.

Book :87


«مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ مِنَّا»


Bukhari-6873

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6873. உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்விற்கு நாங்கள் எதனையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் செய்யமாட்டோம்; அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ள எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்; கொள்ளையடிக்கமாட்டோம்; (எந்த நற்செயலிலும் உங்களுக்கு) மாறு செய்யமாட்டோம்; (இவற்றை நாங்கள் செய்யாமல் விட்டுவிட்டால்) எங்களுக்கு சொர்க்கம் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றை நாங்கள் செய்தால் அதன் முடிவு அல்லாஹ்விடம் உள்ளது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழிப் பிரமாணம் செய்து கொடுத்த தலைவர்களில் நானும் ஒருவனாவேன்.11

Book :87


«إِنِّي مِنَ النُّقَبَاءِ الَّذِينَ بَايَعُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بَايَعْنَاهُ عَلَى أَنْ لاَ نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا، وَلاَ نَسْرِقَ، وَلاَ نَزْنِيَ، وَلاَ نَقْتُلَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ، وَلاَ نَنْتَهِبَ، وَلاَ نَعْصِيَ، بِالْجَنَّةِ إِنْ فَعَلْنَا ذَلِكَ، فَإِنْ غَشِينَا مِنْ ذَلِكَ شَيْئًا، كَانَ قَضَاءُ ذَلِكَ إِلَى اللَّهِ»


Bukhari-6872

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6872. உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.

எங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஜுஹைனா’ குலத்தைச் சேர்ந்த ‘ஹுரக்கா’ எனும் கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். அதிகாலைப் பொழுதில் அவர்களிடம் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் போய்ச் சேர்ந்து அவரை நாங்கள் சுற்றி வளைத்துக் கொண்டோம். அப்போது அவர் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்றார்.

எனவே, அவரைவிட்டு அந்த அன்சாரி (நண்பர்) ஒதுங்கி கொண்டார். ஆனால், நான் என் ஈட்டியை அவரின் மீது பாய்ச்சி அவரைக் கொன்றுவிட்டேன். நாங்கள் (மதீனா) வந்து சேர்ந்தபோது இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘உசாமா! ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று அவர் சொன்னதற்குப் பிறகுமா அவரை நீங்கள் கொன்றீர்கள்?’ என்று கேட்டார்கள். நான் ‘அவர் உயிரைப் காத்துக்கொள்ளவே (அவ்வாறு கூறினார்)’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘லாயிலாஹ இல்லல்லாஹ்

بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الحُرَقَةِ مِنْ جُهَيْنَةَ، قَالَ: فَصَبَّحْنَا القَوْمَ فَهَزَمْنَاهُمْ، قَالَ: وَلَحِقْتُ أَنَا وَرَجُلٌ مِنَ الأَنْصَارِ رَجُلًا مِنْهُمْ، قَالَ: فَلَمَّا غَشِينَاهُ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، قَالَ: فَكَفَّ عَنْهُ الأَنْصَارِيُّ، فَطَعَنْتُهُ بِرُمْحِي حَتَّى قَتَلْتُهُ، قَالَ: فَلَمَّا قَدِمْنَا بَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَقَالَ لِي: «يَا أُسَامَةُ، أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا كَانَ مُتَعَوِّذًا، قَالَ: «أَقَتَلْتَهُ بَعْدَ مَا قَالَ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ» قَالَ: فَمَا زَالَ يُكَرِّرُهَا عَلَيَّ، حَتَّى تَمَنَّيْتُ أَنِّي لَمْ أَكُنْ أَسْلَمْتُ قَبْلَ ذَلِكَ اليَوْمِ


Bukhari-6871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6871. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.

இதன் அறிவிப்பாளரான அனஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.

Book :87


أَكْبَرُ الكَبَائِرِ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَقَتْلُ النَّفْسِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَوْلُ الزُّورِ، – أَوْ قَالَ: وَشَهَادَةُ الزُّورِ


Bukhari-6870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6870. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும்.

மற்றோர் அறிவிப்பில், ‘இறைவனுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘மனிதனைக் கொலை செய்வதும்’ பெரும் பாவங்களாகும்’ என்று வந்துள்ளது.

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.9

(மேற்காணும் இரண்டு அறிவிப்புகளில் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவித்தார்கள்.

Book :87


الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، – أَوْ قَالَ: – اليَمِينُ الغَمُوسُ ” شَكَّ شُعْبَةُ وَقَالَ مُعَاذٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: ” الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَاليَمِينُ الغَمُوسُ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، أَوْ قَالَ: وَقَتْلُ النَّفْسِ


Bukhari-6869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6869. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், ‘மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) ‘எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’ என்றார்கள்.8

இந்த ஹதீஸை, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.

Book :87


قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-6868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6868. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 87


«لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-6867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

ஓர் உயிரை வாழவைப்பவன் மக்கள் அனைவரையும் வாழவைப்பவனைப் போன்றவனாவன் எனும் (5:32ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) முறையின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கின்றாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.

6867. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களின் முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.6

Book : 87


«لاَ تُقْتَلُ نَفْسٌ إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْهَا»


Bukhari-6866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6866. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம், ‘இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனத்திற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?’ என்று கேட்டார்கள்.5

Book :87


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمِقْدَادِ: «إِذَا كَانَ رَجُلٌ مُؤْمِنٌ يُخْفِي إِيمَانَهُ مَعَ قَوْمٍ كُفَّارٍ، فَأَظْهَرَ إِيمَانَهُ فَقَتَلْتَهُ؟ فَكَذَلِكَ كُنْتَ أَنْتَ تُخْفِي إِيمَانَكَ بِمَكَّةَ مِنْ قَبْلُ»


Next Page » « Previous Page