Author: Farook

Bukhari-6799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6799. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.16

Book :86


«لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ البَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ»


Bukhari-6798

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6798. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காகத் திருடனின் கையைத் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதிலாக) ‘கீமத்துஹு’ (அதன் விலை) என அறிவித்தார்கள்.

Book :86


«قَطَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ سَارِقٍ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ»


Bukhari-6797

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6797. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

Book :86


«قَطَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ»


Bukhari-6796

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6796. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக்காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

Book :86


«قَطَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ»


Bukhari-6795

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6795. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலைமதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் (ஸமனுஹு என்பதற்கு பதில்) ‘கீமத்துஹு’ என அறிவித்தார்கள் என்று லைஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். (இரண்டுக்கும் பொருள்: விலை)

Book :86


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «قَطَعَ فِي مِجَنٍّ ثَمَنُهُ ثَلاَثَةُ دَرَاهِمَ»


Bukhari-6794

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6794. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கவசம்’ அல்லது ‘தோல் கேடயத்தின்’ விலையை விடத் தாழ்ந்த (விலையுள்ள) பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டதில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புடையதாகும்.

அத்தியாயம்: 86


«لَمْ تُقْطَعْ يَدُ سَارِقٍ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَدْنَى مِنْ ثَمَنِ المِجَنِّ تُرْسٍ أَوْ حَجَفَةٍ، وَكَانَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ذَا ثَمَنٍ»


Bukhari-6793

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6793. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(நபி (ஸல்) அவர்களின் காலத்தில்) ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தை ‘விடத் தாழ்ந்த பொருளுக்காகத் திருடனின் கரம் துண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இவை ஒவ்வொன்றும் விலை மதிப்புள்ளதாகும்.

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் முர்சலாக (தொடர் முறிந்ததாக) வந்துள்ளது.

Book :86


«لَمْ تَكُنْ تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي أَدْنَى مِنْ حَجَفَةٍ أَوْ تُرْسٍ، كُلُّ وَاحِدٍ مِنْهُمَا ذُو ثَمَنٍ»


Bukhari-6792

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6792. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘தோல் கேடயம்’ அல்லது ‘தோல் கவசத்தின்’ விலை (மதிப்புள்ள பொருளு)க்காகவே தவிர, திருடனின் கை துண்டிக்கப்பட்டதில்லை.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :86


«أَنَّ يَدَ السَّارِقِ لَمْ تُقْطَعْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا فِي ثَمَنِ مِجَنٍّ حَجَفَةٍ أَوْ تُرْسٍ»


Bukhari-6791

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6791. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனாருக்காக (பொற் காசுக்காக அதைத் திருடியவரின்) கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86


«تُقْطَعُ اليَدُ فِي رُبُعِ دِينَارٍ»


Bukhari-6790

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6790. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால் தீனாரை (பொற் காசு) திருடியவரின் கை வெட்டப்படும்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

Book :86


«تُقْطَعُ يَدُ السَّارِقِ فِي رُبُعِ دِينَارٍ»


Next Page » « Previous Page