Author: Farook

Bukhari-6717

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

தமக்கும் இன்னொருவருக்கும் சொந்தமான ஓர் அடிமையை (குற்றப் பரிகாரத்திற்காக) ஒருவர் விடுதலை செய்தால்…?15

பாடம் : 9

குற்றப் பரிகாரத்திற்காக ஓர் அடிமையை விடுதலை செய்தால், அந்த அடிமையின் வாரிசுரிமை யாருக்குக் கிடைக்கும்?

6717. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(அடிமையாயிருந்த) பரீராவை நான் விலைக்கு வாங்க விரும்பினேன். ஆனால், அவருக்கு வாரிசாகும் உரிமை தங்களுக்கே இருக்க வேண்டுமென அவரின் எசமான்கள் முன் நிபந்தனை விதித்தார்கள். எனவே, இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் ‘பரீராவை விலைக்கு வாங்கி (விடுதலை செய்து) விடு! ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை சொந்தம்’ என்றார்கள்.16

Book : 86


أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، فَاشْتَرَطُوا عَلَيْهَا الوَلاَءَ، فَذَكَرَتْ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «اشْتَرِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»


Bukhari-6716

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

முதப்பர்’ (பின் விடுதலை அளிக்கப்பட்ட அடிமை), உம்முல் வலத்’ (எசமானின் குழந்தைக்குத் தாயான அடிமைப் பெண்), முகாதப்’ (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஆகியோரை பரிகாரத் திற்காக விடுதலை செய்வதும் விபசாரத்தில் பிறந்த (அடிமைக்) குழந்தையை விடுதலை செய்வதும்.

தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முதப்பர், உம்முல் வலத் ஆகியோரை (பரிகாரத்திற்காக) விடுதலை செய்வது செல்லும்.13

6716. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.

அன்சாரிகளில் ஒருவர் தம் அடிமை ஒருவனைத் தம் இறப்புக்குப் பின் விடுதலை பெற்றவனாவான் என்று அறிவித்திருந்தார். ஆனால், அவரிடம் அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவுமிருக்கவில்லை. இந்த விஷயம் நபி( ஸல்) அவர்களுக்கு எட்டியபோது ‘என்னிடமிருந்து இவனை (விலைக்கு) வாங்குபவர் யார்?’ என்று கேட்டார்கள். அப்போது அவனை நுஐம் இப்னு நஹ்ஹராம் (ரலி) அவர்கள் எண்ணூறு திர்ஹங்களுக்கு (வெள்ளிக் காசுகளுக்கு) வாங்கினார்கள்.

(அறிவிப்பாளர்களில்

أَنَّ رَجُلًا مِنَ الأَنْصَارِ دَبَّرَ مَمْلُوكًا لَهُ، وَلَمْ يَكُنْ لَهُ مَالٌ غَيْرُهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «مَنْ يَشْتَرِيهِ مِنِّي» فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ النَّحَّامِ بِثَمَانِ مِائَةِ دِرْهَمٍ فَسَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ: عَبْدًا قِبْطِيًّا، مَاتَ عَامَ أَوَّلَ


Bukhari-6715

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

எந்த அடிமையை உரிமை விடுவது நல்லது?

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (5:89)11

6715. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிமான அடிமையை எவர் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வொரு உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான். அவருடைய மர்ம உறுப்புக்கு பதிலாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலை செய்வான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 86


«مَنْ أَعْتَقَ رَقَبَةً مُسْلِمَةً، أَعْتَقَ اللَّهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنَ النَّارِ، حَتَّى فَرْجَهُ بِفَرْجِهِ»


Bukhari-6714

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6714. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவா! (மதீனாவாசிகளான) இவர்களுக்கு இவர்களின் அளவைகளான ‘ஸாஉ’ மற்றும் ‘முத்’ ஆகியவற்றில் வளம் சேர்ப்பாயாக’ என்று பிரார்த்தித்தார்கள்.10

Book :86


«اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَصَاعِهِمْ وَمُدِّهِمْ»


Bukhari-6713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6713. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் ரமளான் மாத (ஸதகத்துல் ஃபித்ர்) தர்மத்தை ஆரம்ப(க் கால) ‘முத்’தான நபி (ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கி வந்தார்கள். மேலும், சத்திய (முறிவுக்கான) பரிகாரத்தையும் நபி (ஸல்) அவர்களின் ‘முத்’தைக் கொண்டே வழங்கிவந்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ குதைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்கள், ‘(மதீனாவில் வழக்கிலுள்ள) எங்களின் ‘முத்’தே (ஹிஷாம் உருவாக்கிய) உங்களின் ‘முத்’தை விட (அளவில் சிறியதானாலும் வளத்தில்) பெரியதாகும். நபி (ஸல்) அவர்களின் (காலத்தில் இருந்த மதீனா) ‘முத்’தில் தவிர வேறொன்றில் சிறப்பு இருப்பதாக நாங்கள் கருதவில்லை’ என்று கூறினார்கள்.

மேலும், அவர்கள் என்னிடம் ‘ஓர் ஆட்சியாளர் உங்களிடம் வந்து நபி (ஸல்) அவர்களின் ‘முத’ தைவிட (அளவில்) சிறியதொரு ‘முத்’தை நிர்ணயித்தால், நீங்கள் எந்த அளவையைக் கொண்டு (ரமளான் தர்மம், பரிகாரம் ஆகியவற்றை)

«كَانَ ابْنُ عُمَرَ، يُعْطِي زَكَاةَ رَمَضَانَ بِمُدِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُدِّ الأَوَّلِ، وَفِي كَفَّارَةِ اليَمِينِ بِمُدِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُوقُتَيْبَةَ: قَالَ لَنَا مَالِكٌ: «مُدُّنَا أَعْظَمُ مِنْ مُدِّكُمْ، وَلاَ نَرَى الفَضْلَ إِلَّا فِي مُدِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَقَالَ لِي مَالِكٌ: لَوْ جَاءَكُمْ أَمِيرٌ فَضَرَبَ مُدًّا أَصْغَرَ مِنْ مُدِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تُعْطُونَ؟ قُلْتُ: كُنَّا نُعْطِي بِمُدِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَفَلاَ تَرَى أَنَّ الأَمْرَ إِنَّمَا يَعُودُ إِلَى مُدِّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

மதீனாவின் ஸாஉ’ம் நபி (ஸல்) அவர்கள் (காலத்து) முத்’தும் அதன் வளமும் வாழையடி வாழையாக மதீனாவாசிகள் கடைப்பிடித்து வந்ததும்.7

6712. சாயிப் இப்னு யஸீத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ‘ஸாஉ’ என்பது, இன்றைக்கு (நடைமுறையிலிருக்கும்) உங்களின் ‘முத்’தில் ஒரு ‘முத்’தும் மூன்றில் ஒரு பாகமும் (1 1ஃ3) கொண்டதாக இருந்தது. பின்னர் உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் காலத்தில் இதன் அளவு அதிகமாக்கப்பட்டது.8

Book : 86


«كَانَ الصَّاعُ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُدًّا وَثُلُثًا بِمُدِّكُمُ اليَوْمَ، فَزِيدَ فِيهِ فِي زَمَنِ عُمَرَ بْنِ عَبْدِ العَزِيزِ»


Bukhari-6711

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

(சத்திய முறிவுக்கான) பரிகாரத்திற்காகப் பத்து ஏழைகளுக்கு (உணவு) அளிக்கும் போது அவர்கள் நெருங்கிய உறவினர்களாகவோ தூரத்து உறவினர்களாகவோ இருக்கலாம்.

6711. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்துவிட்டேன்!’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை விடுதலை செய்யும் வசதியைப் பெற்றுள்ளீரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதம் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘என்னால் இயலாது’ என்றார்.

பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் பேழீச்சம்

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ، قَالَ: «وَمَا شَأْنُكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، قَالَ: «هَلْ تَجِدُ مَا تُعْتِقُ رَقَبَةً» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ، قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ أَجِدُ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ، فَقَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ» فَقَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا؟ مَا بَيْنَ لاَبَتَيْهَا أَفْقَرُ مِنَّا، ثُمَّ قَالَ: «خُذْهُ فَأَطْعِمْهُ أَهْلَكَ»


Bukhari-6710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

பரிகாரத்தை நிறைவேற்றுவதற்காக ஏழைக்கு உதவுதல்

6710. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘(இறைத்தூதர் அவர்களே!) நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக் கொண்டே) என் மனைவியைப் புணர்ந்துவிட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘(விடுதலை செய்வதற்கு) ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உமக்கு சக்தி இருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்கு சக்தியிருக்கிறதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் ‘இல்லை’ என்றார். பின்னர் அன்சாரிகளில் ஒருவர் ‘அரக்’ ஒன்றைக் கொண்டு வந்தார். -‘அரக்’ என்பது பேரீச்சம் பழம் உள்ள கூடை ஆகும். -அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘இதைக் கொண்டு சென்று தர்மம் செய்வீராக!’ என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் ‘இறைத்தூதர்

جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ، فَقَالَ: «وَمَا ذَاكَ؟» قَالَ: وَقَعْتُ بِأَهْلِي فِي رَمَضَانَ، قَالَ: «تَجِدُ رَقَبَةً» قَالَ: لاَ، قَالَ: «هَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ، قَالَ: «فَتَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ، قَالَ: فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ بِعَرَقٍ – وَالعَرَقُ المِكْتَلُ – فِيهِ تَمْرٌ، فَقَالَ: «اذْهَبْ بِهَذَا فَتَصَدَّقْ بِهِ» قَالَ: أَعَلَى أَحْوَجَ مِنَّا يَا رَسُولَ اللَّهِ؟ وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، مَا بَيْنَ لاَبَتَيْهَا أَهْلُ بَيْتٍ أَحْوَجُ مِنَّا، ثُمَّ قَالَ: «اذْهَبْ فَأَطْعِمْهُ أَهْلَكَ»


Bukhari-6709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

செல்வரின் மீதும் ஏழையின் மீதும் எப்போது பரிகாரம் கடமையாகும்?

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (தக்க பரிகாரங்களுடன்) முறித்துக்கொள்வதை உங்களுக்கு அனுமதித்திருக்கின்றான். அல்லாஹ்வோ உங்கள் எஜமானன். அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (66:2)

6709. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழிந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘நான் ரமளானில் (நோன்பு வைத்துக்கொண்டே) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்’ என்று அவர் சொன்னார். நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் முடியுமா?’ என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க உம்மால் முடியுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ‘இல்லை’ என்றார். ‘அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உம்மால் முடியுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க,

جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: هَلَكْتُ. قَالَ: «وَمَا شَأْنُكَ؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي فِي رَمَضَانَ، قَالَ: «تَسْتَطِيعُ تُعْتِقُ رَقَبَةً» قَالَ: لاَ. قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ» قَالَ: لاَ. قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُطْعِمَ سِتِّينَ مِسْكِينًا» قَالَ: لاَ. قَالَ: «اجْلِسْ» فَجَلَسَ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ – وَالعَرَقُ المِكْتَلُ الضَّخْمُ – قَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ» قَالَ: أَعَلَى أَفْقَرَ مِنَّا؟ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، قَالَ: «أَطْعِمْهُ عِيَالَكَ»


Bukhari-6708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

அதன் பரிகாரமாவாது: உங்கள் குடும்பத்தாருக்கு நீங்கள் அளிக்கும் உணவில் நடுத்தரமான உணவைப் பத்து ஏழைகளுக்கு அளித்திட வேண்டும்; அல்லது அவர்களுக்கு ஆடை அளித்திட வேண்டும்; அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்திட வேண்டும். (இதில் எதற்குமே சக்தி) பெறாவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்றிட வேண்டும் எனும் (5:89ஆவது) இறைவசனமும், நோன்பு நோற்றல், அல்லது தர்மம் செய்தல், அல்லது பலியிடல் (ஹஜ்ஜில் பலியிடுவதற்கு முன்பே தலைமுடி களைவதற்குப்) பரிகாரமாகும் எனும் (2:196ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளையும்.2

இப்னு அப்பாஸ் (ரலி), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்), இக்ரிமா (ரஹ்) ஆகியோர் (மேற்கண்ட வசனங்களைப் போன்று) குர்ஆனில் எங்கெல்லாம் வந்துள்ளதோ அங்கெல்லாம் சம்பந்தப்பட்டவருக்கு (அங்கு குறிப்பிடப் பட்டவற்றில் ஒன்றைக் தேர்ந்தெடுக்க) விருப்ப உரிமை உண்டு என்று கூறியுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் தலைமுடி களைந்ததற்கான) பரிகாரம் தொடர்பாக கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களுக்கு விருப்ப உரிமை அளித்தார்கள்.3

6708. கஅப் இப்னு உஜ்ரா (ரலி) அறிவித்தார்.

أَتَيْتُهُ – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ: «ادْنُ» فَدَنَوْتُ، فَقَالَ: «أَيُؤْذِيكَ هَوَامُّكَ» قُلْتُ: نَعَمْ، قَالَ: «فِدْيَةٌ مِنْ صِيَامٍ، أَوْ صَدَقَةٍ، أَوْ نُسُكٍ» وَأَخْبَرَنِي ابْنُ عَوْنٍ، عَنْ أَيُّوبَ، قَالَ: «صِيَامُ ثَلَاثَةِ أَيَّامٍ، وَالنُّسُكُ شَاةٌ، وَالمَسَاكِينُ سِتَّةٌ»


Next Page » « Previous Page