Author: Farook

Bukhari-6707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33

(ஒருவர் தமது செல்வம்’ தொடர்பாகச் செய்த) சத்தியம் மற்றும் நேர்த்திக்கடனில் நிலம், ஆடு, பயிர்,உபயோகப் பொருட்கள் ஆகியன அடங்குமா?106

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான் ஒரு செல்வத்தை (ஸம்ஃக்’ எனும் பேரீச்சந் தோட்டத்தை) அடைந்துள்ளேன். இதைவிட உயர்ந்ததொரு செல்வத்தை ஒரு போதும் அடைந்ததில்லை. (அதை நான் தர்மம் செய்ய விரும்புகிறேன்) என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்துவிடுங்கள் என்று கூறினார்கள்.107 அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் என் செல்வங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது பைருஹா’ எனும் தோட்டமே என்று (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த தமது தோட்டம் குறித்துக் கூறினார்கள்.108

6707. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் ‘கைபர்’ தினத்தன்று (வெற்றி கண்டு) புறப்பட்டோம்ட.

خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ خَيْبَرَ، فَلَمْ نَغْنَمْ ذَهَبًا وَلَا فِضَّةً، إِلَّا الأَمْوَالَ وَالثِّيَابَ وَالمَتَاعَ، فَأَهْدَى رَجُلٌ مِنْ بَنِي الضُّبَيْبِ، يُقَالُ لَهُ رِفَاعَةُ بْنُ زَيْدٍ، لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلَامًا، يُقَالُ لَهُ مِدْعَمٌ، فَوَجَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى وَادِي القُرَى، حَتَّى إِذَا كَانَ بِوَادِي القُرَى، بَيْنَمَا مِدْعَمٌ يَحُطُّ رَحْلًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِذَا سَهْمٌ عَائِرٌ فَقَتَلَهُ، فَقَالَ النَّاسُ: هَنِيئًا لَهُ الجَنَّةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلَّا، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّ الشَّمْلَةَ الَّتِي أَخَذَهَا يَوْمَ خَيْبَرَ مِنَ المَغَانِمِ، لَمْ تُصِبْهَا المَقَاسِمُ، لَتَشْتَعِلُ عَلَيْهِ نَارًا» فَلَمَّا سَمِعَ ذَلِكَ النَّاسُ جَاءَ رَجُلٌ بِشِرَاكٍ – أَوْ شِرَاكَيْنِ – إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” شِرَاكٌ مِنْ نَارٍ – أَوْ: شِرَاكَانِ مِنْ نَارٍ –


Bukhari-6706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6706. ஸியாத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்.

நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர், ‘நான் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு ‘செவ்வாய் கிழமையும்’ அல்லது ‘புதன் கிழமையும்’ நோன்பு நோற்க நேர்ந்து கொண்டுள்ளேன். ஆனால், ஏதேச்சையாக இந்த நாள் ஹஜ்ஜுப் பெருநாளாக அமைந்துவிட்டது (நான் என்ன செய்வது?)’ என்று கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வோ நேர்த்திக்கடனை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். (அதே நேரத்தில்) ஹஜ்ஜுப் பெருநாளில் நோன்பு நோற்கக் கூடாதென (இறைத்தூதர் மூலம்) நமக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர் திரும்பவும் (அதே கேள்வியைக்) கேட்டதற்கு இப்னு உமர்(ரலி) அவர்கள் முன்பு போன்றே பதிலளித்தார்கள்; கூடுதலாக எதுவும் கூறவில்லை.105

Book :83


كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ، فَسَأَلَهُ رَجُلٌ فَقَالَ: نَذَرْتُ أَنْ أَصُومَ كُلَّ يَوْمِ ثَلَاثَاءَ أَوْ أَرْبِعَاءَ مَا عِشْتُ، فَوَافَقْتُ هَذَا اليَوْمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «أَمَرَ اللَّهُ بِوَفَاءِ النَّذْرِ، وَنُهِينَا أَنْ نَصُومَ يَوْمَ النَّحْرِ» فَأَعَادَ عَلَيْهِ، فَقَالَ مِثْلَهُ، لَا يَزِيدُ عَلَيْهِ


Bukhari-6705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

குறிப்பிட்ட சில தினங்கள் நோன்பு நோற்ப தாக ஒருவர் நேர்ந்துகொள்ள, எதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெருநாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்து விட்டால் (என்ன செய்வது?)104

6705. ஹகீம் இப்னு அபீ ஹுர்ரா அல் அஸ்லமீ (ரஹ்) அறிவித்தார்.

ஒருவர் ‘வருகிற எல்லா நாள்களிலும் நோன்பு நோற்பேன்’ என நேர்ந்திருக்க, ஏதேச்சையாக அது ஹஜ்ஜுப் பெரு நாளாகவோ அல்லது நோன்புப் பெருநாளாகவோ அமைந்துவிட்டால் (என்ன செய்வது?) என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி உள்ளது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளில்கி நோன்புப் பெருநாளில்கி நோன்பு நோற்பவர்களாக இருக்கவுமில்லை; இரண்டு பெருநாள்களில் நோன்பு நோற்பதை (அனுமதிக்கப்பட்டதாக) அவர்கள் கருதவுமில்லை’ என்று பதிலளித்தார்கள்.

Book : 83


سُئِلَ عَنْ رَجُلٍ نَذَرَ أَنْ لَا يَأْتِيَ عَلَيْهِ يَوْمٌ إِلَّا صَامَ، فَوَافَقَ يَوْمَ أَضْحًى أَوْ فِطْرٍ، فَقَالَ: ” {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: ٢١] لَمْ يَكُنْ يَصُومُ يَوْمَ الأَضْحَى وَالفِطْرِ، وَلَا يَرَى صِيَامَهُمَا


Bukhari-6704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6704. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், ‘(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்’ என்றார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

Book :83


بَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، إِذَا هُوَ بِرَجُلٍ قَائِمٍ، فَسَأَلَ عَنْهُ فَقَالُوا: أَبُو إِسْرَائِيلَ، نَذَرَ أَنْ يَقُومَ وَلَا يَقْعُدَ، وَلَا يَسْتَظِلَّ، وَلَا يَتَكَلَّمَ، وَيَصُومَ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ فَلْيَتَكَلَّمْ وَلْيَسْتَظِلَّ وَلْيَقْعُدْ، وَلْيُتِمَّ صَوْمَهُ»


Bukhari-6703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6703. இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் (புனித) கஅபாவைச் சுற்றி வந்துகொண்டிருந்தபோது ஒரு மனிதரைக் கடந்துசென்றார்கள். அவர் இன்னொரு மனிதரை மூக்கணாங்கயிறிட்டு இழுத்துச் சென்றுகொண்டிருந்தார். உடனே தம் கரத்தால் அக்கயிற்றைத் துண்டித்துவிட்ட நபி (ஸல்) அவர்கள், இவரைக் கையைப் பிடித்து அழைத்துச் செல்க என உத்தரவிட்டார்கள்.103

Book :83


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ وَهُوَ يَطُوفُ بِالكَعْبَةِ بِإِنْسَانٍ يَقُودُ إِنْسَانًا بِخِزَامَةٍ فِي أَنْفِهِ، فَقَطَعَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ أَمَرَهُ أَنْ يَقُودَهُ بِيَدِهِ»


Bukhari-6702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6702. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் (ஒட்டகத்தின்) ‘மூக்கணாங்கயிறை’ அல்லது ‘வேறொரு பொருளைத்’ தம் கையில் கட்டிக்கொண்டு (புனித) கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அதைத் துண்டித்துவிட்டார்கள்.102

Book :83


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَطُوفُ بِالكَعْبَةِ بِزِمَامٍ أَوْ غَيْرِهِ فَقَطَعَهُ»


Bukhari-6701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6701. அனஸ் (ரலி) அறிவித்தார்.

‘இ(ந்த முதிய)வர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்து கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அ(ந்த முதிய)வர் தம் இரண்டு புதல்வர்களுக்கிடையே (தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட) நடந்துவந்ததை நபி (ஸல்) அவர்கள் பார்(த்துவிட்டு, விவரம் கேட்க, ‘நேர்த்திக்கடன்’ என்று மக்கள் கூறியபோது தான் மேற்கண்டவாறு தெரிவி)த்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.

Book :83


«إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ تَعْذِيبِ هَذَا نَفْسَهُ» وَرَآهُ يَمْشِي بَيْنَ ابْنَيْهِ


Bukhari-6700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

தமக்கு உடைமையில்லாத ஒன்றிலும் பாவச் செயலிலும் ஒருவர் நேர்ந்துகொள்வது (கூடாது).

6700. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றும் முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.

என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.100

Book : 83


«مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلَا يَعْصِهِ»


Bukhari-6699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6699. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘(இறைத்தூதர் அவர்களே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார்’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய்?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (நானே நிறைவேற்றுவேன்)’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்’ என்றார்கள். 99

Book :83


أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ: إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ، وَإِنَّهَا مَاتَتْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ» قَالَ: نَعَمْ، قَالَ: «فَاقْضِ اللَّهَ، فَهُوَ أَحَقُّ بِالقَضَاءِ»


Bukhari-6698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

நேர்த்திக்கடன் உள்ள நிலையில் ஒருவர் இறந்துவிட்டால் (அவருக்காக மற்றவர்கள் அதை நிறைவேற்ற வேண்டுமா?) (மதீனாவிற்கு அருகிலுள்ள) குபா பள்ளி வாசலில் தொழுவதாக நேர்ந்து கொண்(டு விட்டு, அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்)ட தாய்க்காகத் தொழுதிடுமாறு அவருடைய புதல்விக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இதைப் போன்றே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள்.

6698. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஸஅத் இப்னு உபாதா அல் அன்சாரி (ரலி) அவர்கள், நேர்ந்துகொண்டு அதை நிறைவேற்றுவதற்கு முன்பே இறந்துவிட்ட தம் தாயின் நேர்த்திக்கடன் குறித்து நபி(ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் தம் தாயாருக்காக நேர்த்திக்கடனை நிறைவேற்றிடுமாறு தீர்ப்பளித்தார்கள். அதுவே பின்னர் வழிமுறையாக ஆகிவிட்டது.98

Book : 83


أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ الأَنْصَارِيَّ، اسْتَفْتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، «فَأَفْتَاهُ أَنْ يَقْضِيَهُ عَنْهَا»، فَكَانَتْ سُنَّةً بَعْدُ


Next Page » « Previous Page