Author: Farook

Bukhari-6687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

தொடுகறியுடன் சாப்பிடமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், ரொட்டியுடன் பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டால்…? மேலும் எதுவெல்லாம் தொடுகறியாகும்?84

6687. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை அவர்களின் குடும்பத்தார் மூன்று நாள்கள் தொடர்ச்சியாகக் குழம்புடன் வெள்ளைக் கோதுமை ரொட்டியை வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

இதன் அறிவிப்பாளரான ஆபிஸ் இப்னு ரபீஆ (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், தாம் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் இதைத் தெரிவித்ததாக இடம் பெற்றுள்ளது.85

Book : 83


«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ خُبْزِ بُرٍّ مَأْدُومٍ ثَلَاثَةَ أَيَّامٍ، حَتَّى لَحِقَ بِاللَّهِ»


Bukhari-6686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6686. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் சவ்தா (ரலி) அறிவித்தார்.

எங்களுக்குரிய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அதில் நாங்கள் பழரசத்தை ஊற்றி வைத்து வந்தோம். இறுதியில் அது (இற்றுப்போன) துருத்தியாக மாறிவிட்டது.

Book :83


«مَاتَتْ لَنَا شَاةٌ، فَدَبَغْنَا مَسْكَهَا، ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَ شَنًّا»


Bukhari-6685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

ஊறவைக்கப்பட்ட பழச் சாற்றை (நபீத்) அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்த ஒருவர், சுண்டக் காய்ச்சப்பட்ட திராட்சை சாற்றையோ, பேரீச்சச் செங்காய் ஊறலையோ, திராட்சைப் பிழிவையோ அருந்திவிட்டால், சிலரது கூற்றுப்படி அவர் சத்தியத்தை முறித்தவராக மாட்டார். (ஏனெனில்,) அவர்களின் கருத்துப்படி இவை நபீதி’ல் சேரா.82

6685. ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

நபித்தோழர் அபூ உசைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் தங்களின் திருமணத்திற்கு நபி (ஸல்) அவர்களை அழைத்தார்கள். அப்போது மணப்பெண்ணே (விருந்துக்கு வந்த) மக்களுக்குப் பணிவிடை செய்பவராக இருந்தார்.

மக்களே! மணப்பெண் நபி (ஸல்) அவர்களுக்கு என்ன புகட்டினார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் கல் (அல்லது மரப்) பாத்திரத்தில் நபி (ஸல்) அவர்களுக்காகப் பேரீச்சம் பழங்களை இரவிலேயே ஊறவைத்திருந்தார். காலையில் நபி அவர்களுக்கு அதை அவர் புகட்டினார்.83

Book : 83


أَنَّ أَبَا أُسَيْدٍ صَاحِبَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْرَسَ، فَدَعَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُرْسِهِ، فَكَانَتِ العَرُوسُ خَادِمَهُمْ، فَقَالَ سَهْلٌ لِلْقَوْمِ: «هَلْ تَدْرُونَ مَا سَقَتْهُ؟» قَالَ: «أَنْقَعَتْ لَهُ تَمْرًا فِي تَوْرٍ مِنَ اللَّيْلِ، حَتَّى أَصْبَحَ عَلَيْهِ، فَسَقَتْهُ إِيَّاهُ»


Bukhari-6684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

ஒருவர், தம் வீட்டாரிடம் ஒரு மாதம் செல்லமாட்டேன் என்று சத்தியம் செய்து அந்த மாதம் இருபத்தொன்பது நாட்களாய் அமைந்துவிட்டால்…?80

6684. அனஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தார்கள். அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள் மாடியறை ஒன்றில் இருபத்தொன்பது நாள்கள் தங்கியிருந்தார்கள். பின்னர் அவர்கள் இறங்கி வந்தபோது மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்க மாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே? (ஆனால், இருபத்தொன்பதாம் நாளில் வந்துவிட்டீர்களே?)’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் இருக்கலாம்’ என்றார்கள்.81

Book : 83


آلَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نِسَائِهِ، وَكَانَتْ انْفَكَّتْ رِجْلُهُ، فَأَقَامَ فِي مَشْرُبَةٍ تِسْعًا وَعِشْرِينَ لَيْلَةً ثُمَّ نَزَلَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، آلَيْتَ شَهْرًا؟ فَقَالَ: «إِنَّ الشَّهْرَ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ»


Bukhari-6683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6683. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவராக மரணிக்கிறவர் நரகத்தில் நுழைவிக்கப்படுவார்’ என்றார்கள். நான் மற்றொரு வார்த்தையில், அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதவராக மரணிக்கிறவர் சொர்க்கத்தில் புகுத்தப்படுவார்’ என்று சொன்னேன். 79

Book :83


«مَنْ مَاتَ يَجْعَلُ لِلَّهِ نِدًّا أُدْخِلَ النَّارَ» وَقُلْتُ أُخْرَى: «مَنْ مَاتَ لَا يَجْعَلُ لِلَّهِ نِدًّا أُدْخِلَ الجَنَّةَ»


Bukhari-6682

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

6682. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:)

1 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (அல்லாஹ்வை புகழ்வதோடு அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்).

2 . ஸுப்ஹானல்லாஹில் அழீம். (மகத்தான அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 83


«كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ»


Bukhari-6681

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 19

ஒருவர் அல்லாஹ்வின் மீதாணையாக! இன்று நான் பேசமாட்டேன்’ என்று சத்தியம் செய்துவிட்டுப் பிறகு தொழுதார்; அல்லது (குர்ஆன்) ஓதினார்; அல்லது சுப்ஹானல்லாஹ்’ என்றார்; அல்லது அல்லாஹு அக்பர்’ என்று சொன்னார்; அல்லது அல்ஹம்து லில்லாஹ்’ என்றார்; அல்லது லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று சொன்னார் என்றால், அவர் எண்ணப் படியே அமையும்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேச்சில் சிறந்தது நான்காகும்:
1. ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்.)
2. அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.)
3. லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை.)
4. அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்.)


அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸிற்கு எழுதிய கடிதத்தில், (வேதக்காரர்களே!) எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள் என்று எழுதினார்கள்.


முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இறையுணர்வூட்டும் பேச்சு என்பது, லாயிலாஹ

لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الوَفَاةُ، جَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «قُلْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ»


Bukhari-6680

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6680. ஸஹதம் இப்னு முளர்ரிப் (ரஹ்) அறிவித்தார்.

நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (என்) அஷ்அரீ குலத்தார் சிலருடன் சென்றேன். அப்போது அவர்கள் (ஏதோ) கோபத்தில் இருந்தார்கள். அன்னாரிடம் நாங்கள் (எங்கள் பயணத்திற்குத் தேவையான) வாகனங்களைக் கோரினோம். அப்போது அவர்கள், எங்களுக்கு வாகனங்கள் தரமாட்டேன் என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள்.

பிறகு (எங்களுக்கு வாகன ஒட்டகங்களைத் தந்துவிட்டு) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் நாடினால், நான் இனி எந்த ஒன்றுக்காகவும் சத்தியம் செய்து, பிறகு அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில், சிறந்ததையே செய்வேன்; சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரமும் செய்வேன்’ என்றார்கள். 73

Book :83


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ، فَوَافَقْتُهُ وَهُوَ غَضْبَانُ، فَاسْتَحْمَلْنَاهُ، فَحَلَفَ أَنْ لَا يَحْمِلَنَا، ثُمَّ قَالَ: «وَاللَّهِ، إِنْ شَاءَ اللَّهُ، لَا أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ، وَتَحَلَّلْتُهَا»


Bukhari-6679

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6679. இப்னு ஷிஹாப் (முஹம்மத் இப்னு முஸ்லிம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா (ரஹ் – அலைஹிம்) ஆகியோர், நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொரு வரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். (அதில் பின்வருமாறு உள்ளது:)

அப்போது அல்லாஹ், ‘(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர்தாம்’ என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளினான்.

(ஆயிஷா(ரலி) கூறினார்:) என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து

حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ مِمَّا قَالُوا، كُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ فَأَنْزَلَ اللَّهُ: {إِنَّ الَّذِينَ جَاءُوا بِالإِفْكِ} العَشْرَ الآيَاتِ كُلَّهَا فِي بَرَاءَتِي، فَقَالَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ، وَكَانَ يُنْفِقُ عَلَى مِسْطَحٍ لِقَرَابَتِهِ مِنْهُ: وَاللَّهِ لَا أُنْفِقُ عَلَى مِسْطَحٍ شَيْئًا أَبَدًا، بَعْدَ الَّذِي قَالَ لِعَائِشَةَ. فَأَنْزَلَ اللَّهُ: {وَلَا يَأْتَلِ أُولُو الفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ، أَنْ يُؤْتُوا أُولِي القُرْبَى} الآيَةَ قَالَ أَبُو بَكْرٍ: ” بَلَى وَاللَّهِ إِنِّي لَأُحِبُّ أَنْ يَغْفِرَ اللَّهُ لِي، فَرَجَعَ إِلَى مِسْطَحٍ النَّفَقَةَ الَّتِي كَانَ يُنْفِقُ عَلَيْهِ، وَقَالَ: وَاللَّهِ لَا أَنْزِعُهَا عَنْهُ أَبَدًا


Bukhari-6678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

தமக்கு உடைமையில்லாத ஒன்றில் சத்தியம் செய்வதும், பாவத்துக்காகச் சத்தியம் செய்வதும், கோபமாக இருக்கையில் சத்தியம் செய்வதும்.70

6678. அபூ மூஸா (ரலி) அறிவித்தார்.

என் (அஷ்அரீ குலத்துத்) தோழர்கள் எங்களை ஏற்றியனுப்ப வாகன ஒட்டகம் கேட்கும்படி நபி (ஸல்) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். (நான் சென்று அவர்களிடம் ஒட்டகம் கேட்டேன்) அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை நான் எதன் மீதும் ஏற்றியனுப்ப இயலாது’ என்று கூறினார்கள். அந்த நேரம் அவர்கள் கோபமாய் இருந்தார்கள். பிறகு நான் அவர்களிடம் சென்றபோது, நீங்கள் உங்கள் நண்பர்களிடம் சென்று, ‘அல்லாஹ்’ அல்லது ‘இறைத்தூதர்’ உங்களை ஏற்றியனுப்ப வாகனம் வழங்குவார்கள் என்று சொல்லுங்கள் என்றார்கள்.71

Book : 83


أَرْسَلَنِي أَصْحَابِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْأَلُهُ الحُمْلَانَ، فَقَالَ: «وَاللَّهِ لَا أَحْمِلُكُمْ عَلَى شَيْءٍ» وَوَافَقْتُهُ وَهُوَ غَضْبَانُ، فَلَمَّا أَتَيْتُهُ، قَالَ: ” انْطَلِقْ إِلَى أَصْحَابِكَ فَقُلْ: إِنَّ اللَّهَ، أَوْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُكُمْ


Next Page » « Previous Page