Author: Farook

Bukhari-6677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6677. (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ வாயில் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

பின்னர் அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் அங்கு வந்து, ‘அபூ அப்திர்ரஹ்மான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) உங்களுக்கு என்ன அறிவித்தார்?’ என்று கேட்டார்கள். ‘இப்படி இப்படி’ என மக்கள் கூறினார்கள்.

அப்போது அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) கூறினார்: (அவர் அறிவித்தது உண்மைதான்.) இந்த வசனம் என் தொடர்பாகவே அருளப்பெற்றது. என் தந்தையின் சகோதரர் மகன் ஒருவரின் நிலத்தில் எனக்கொரு கிணறு இருந்தது. (அக்கிணறு தொடர்பாக எனக்கும் ஒரு யூதருக்குமிடையே தகராறு ஏற்பட்டது.) எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து விஷயத்தைத் தெரிவித்)தேன். அப்போது அவர்கள் ‘(ஒன்று) உன்னுடைய சாட்சி; அல்லது (பிரதிவாதியான) அவரின் சத்தியம்’ என்று கூறினார்கள். (உடனே) நான் ‘அப்படியானால், அந்த யூதர் (தயங்காமல்) அது தொடர்பாக(ப் பொய்)ச் சத்தியம் செய்துவிடுவாரே, இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஒரு முஸ்லிமான மனிதரின் சொத்தை (அநியாயமாக)ப் பறித்துக் கொள்வதற்காக பொய்ச் சத்தியம் செய்கிறவரின் மீது அல்லாஹ்

فَدَخَلَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ، فَقَالَ: مَا حَدَّثَكُمْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ؟ فَقَالُوا: كَذَا وَكَذَا، قَالَ: فِيَّ أُنْزِلَتْ، كَانَتْ لِي بِئْرٌ فِي أَرْضِ ابْنِ عَمٍّ لِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «بَيِّنَتُكَ أَوْ يَمِينُهُ» قُلْتُ: إِذًا يَحْلِفُ عَلَيْهَا يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، وَهُوَ فِيهَا فَاجِرٌ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ يَوْمَ القِيَامَةِ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ»


Bukhari-6676

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகின்றார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை. மேலும், மறுமை நாளில் அவர்களிடம் அல்லாஹ் பேசவு மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். இன்னும் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உண்டு. (3:77)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் நன்மைகள் புரிவதற்கும், தீமையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்வதற்கும், மக்களிடையே சமாதானம் செய்வதற்கும் தடையாக, நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வை(க் கருவி) ஆக்கி விட வேண்டாம். அல்லாஹ் மிகச் செவியுறுவோனும் நன்கு அறிவோனுமாவான். (2:224)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் உடன்படிக்கையை அற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் எது உள்ளதோ அது தான் உங்களுக்கு மேலானதாக இருக்கும். (16:95)

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்.

«مَنْ حَلَفَ عَلَى يَمِينِ صَبْرٍ، يَقْتَطِعُ بِهَا مَالَ امْرِئٍ مُسْلِمٍ، لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ» فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَ ذَلِكَ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا} [آل عمران: 77] إِلَى آخِرِ الآيَةِ


Bukhari-6675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

பொய்ச் சத்தியம்67

நீங்கள் உங்களுடைய சத்தியங்களை உங்களுக்கிடையே துரோகத்திற்குக் கருவியாக்கிவிடாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிலைபெற்ற பின் (உங்களது) பாதம் சரிந்துவிடும். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்த காரணத்தால் (இம்மையில்) துன்பத்தை அனுபவிப்பீர்கள்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனை உண்டு. (16:94)

(இவ்சனத்தின் மூலத்திலுள்ள) தகல்’ (துரோகம்) எனும் சொல்லுக்குச் சூழ்ச்சி, வஞ்சகம் என்று பொருள்.

6675. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவனுக்கு இணைகற்பிப்பது, தாய் தந்தையரை புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும்.

என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

Book : 83


الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَاليَمِينُ الغَمُوسُ


Bukhari-6674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6674. ஜுன்தப் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் (ஹஜ்ஜப்) பெருநாள் தினத்தில் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையில் கலந்து கொண்டேன். (தொழுகை முடிந்த) பிறகு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் யார் தொழுகைக்கு முன் (குர்பானப் பிராணியை) அறுத்துவிட்டாரோ அவர் அதற்கு மாற்றாக மற்றொன்றை தொழுகைக்குப் பிறகு) அறுக்கட்டும். யார் அறுத்திருக்கிவல்லையோ அவர் அல்லாஹ்வின் பெயர் கூறி (தொழுகைக்குப் பிறகு) அறுக்கட்டும் என்று கூறினார்கள்.

Book :83


شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ عِيدٍ، ثُمَّ خَطَبَ، ثُمَّ قَالَ: «مَنْ ذَبَحَ فَلْيُبَدِّلْ مَكَانَهَا، وَمَنْ لَمْ يَكُنْ ذَبَحَ، فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ»


Bukhari-6673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6673. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது.

எங்களிடம் விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். ஆகவே, நான் என் வீட்டாரிடம் (ஹஜ்ஜப் பெருநாள் தொழுகையை முடித்துக் கொண்டு) நான் திரும்பி வருவதற்குள் விருந்தாளி சாப்பிடுவதற்காக (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டார்கள். பிறகு இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் அறுத்திடுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி என்னிடம் உள்ளது. இது இரு இறைச்சி ஆடுகளை விட சிறந்தது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்டேன்.(நபியவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள்)

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள், ஆமீர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பை இத்துடன் நிறுத்தி விட்டு, முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் (அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவித்துள்ள இதே போன்ற ஹதீஸை அறிவித்தார்கள். பிறகு, இத்துடன் நிறுத்தி விட்டு, பராஉ (ரலி) அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இச்சலுகை பொருந்துமா?

قَالَ البَرَاءُ بْنُ عَازِبٍ: «وَكَانَ عِنْدَهُمْ ضَيْفٌ لَهُمْ، فَأَمَرَ أَهْلَهُ أَنْ يَذْبَحُوا قَبْلَ أَنْ يَرْجِعَ، لِيَأْكُلَ ضَيْفُهُمْ، فَذَبَحُوا قَبْلَ الصَّلَاةِ، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الذَّبْحَ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، عِنْدِي عَنَاقٌ جَذَعٌ، عَنَاقُ لَبَنٍ، هِيَ خَيْرٌ مِنْ شَاتَيْ لَحْمٍ فَكَانَ ابْنُ عَوْنٍ، يَقِفُ فِي هَذَا المَكَانِ عَنْ حَدِيثِ الشَّعْبِيِّ، وَيُحَدِّثُ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، بِمِثْلِ هَذَا الحَدِيثِ، وَيَقِفُ فِي هَذَا المَكَانِ، وَيَقُولُ: «لَا أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ غَيْرَهُ أَمْ لَا»


Bukhari-6671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6671. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு லுஹ்ர் தொழுகையை தொழுகை நடத்தினார்கள். அப்போது ‘(ஐந்து ரக்அத்களாக) அதிகமாக்கி அல்லது ‘(மூன்று ரக்அத்களாகக்) குறைத்துத்’ தொழுகை நடத்தினார்கள்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்சூர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த இடத்தில் சந்தேகத்துடன் அறிவித்தது இப்ராஹீம் (ரஹ்) அவர்களா? அல்லது அல்கமா (ரஹ்) அவர்களா? என்று எனக்குத் தெரியாது –

(தொழுகை முடிந்த பின்), ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத் எண்ணிக்கை) குறைந்துவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா?’ என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இப்படி இப்படி நீங்கள் தொழுகை நடத்தினீர்கள்’ என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் சேர்ந்து இரண்டு சஜ்தாச் செய்தார்கள். பிறகு, ‘இந்த இரண்டு சஜ்தாக்கள், தம் தொழுகையில் அதிகப்படுத்திவிட்டோமா அல்லது குறைத்துவிட்டோமா என்று (உறுதியாகத்)

أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ صَلَاةَ الظُّهْرِ، فَزَادَ أَوْ نَقَصَ مِنْهَا، قَالَ مَنْصُورٌ: لَا أَدْرِي إِبْرَاهِيمُ وَهِمَ أَمْ عَلْقَمَةُ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، أَقَصُرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ؟ قَالَ: «وَمَا ذَاكَ؟» قَالُوا: صَلَّيْتَ كَذَا وَكَذَا، قَالَ: فَسَجَدَ بِهِمْ سَجْدَتَيْنِ، ثُمَّ قَالَ: ” هَاتَانِ السَّجْدَتَانِ لِمَنْ لَا يَدْرِي: زَادَ فِي صَلَاتِهِ أَمْ نَقَصَ، فَيَتَحَرَّى الصَّوَابَ، فَيُتِمُّ مَا بَقِيَ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ


Bukhari-6670

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6670. அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். (அத் தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது (அத்தஹிய்யாத்தில்) அமராமல் (மூன்றாவது ரக்அத்திற்காக மறதியாக) எழுந்து தொழுகையைத் தொடர்ந்தார்கள்.

தொழுகை முடியும் தருவாயில் நபி(ஸல்) அவர்கள் ‘சலாம்’ கொடுப்பதை மக்கள் எதிர்ப்பார்த்திருந்தபோது (இருபபிலேயே) சலாம் கொடுப்பதற்கு முன்பாக தக்பீர் கூறி சஜ்தா செய்தார்கள். பிறகு (முதல் சஜ்தாவிலிருந்து) தலையைத் தூக்கி மீண்டும் தக்பீர் கூறி (இரண்டாவது) சஜ்தா செய்து பின்னர் தலையை உயர்த்தி சலாம் கொடுத்தார்கள். 62

Book :83


«صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ، فَمَضَى فِي صَلَاتِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ انْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، فَكَبَّرَ وَسَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَسَلَّمَ»


Bukhari-6669

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6669. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நோன்பு நோற்றிருக்கும் ஒருவர் மறதியாகச் சாப்பிட்டுவிட்டால் அவர் தம் நோன்பை நிறைவு செய்யட்டும்! ஏனெனில், அல்லாஹ்வே அவரை உண்ணவும் பருகவும் செய்தான்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :83


«مَنْ أَكَلَ نَاسِيًا، وَهُوَ صَائِمٌ، فَلْيُتِمَّ صَوْمَهُ، فَإِنَّمَا أَطْعَمَهُ اللَّهُ وَسَقَاهُ»


Bukhari-6668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6668. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். அது அவர்களில் (வெளிப்படையாகவே) தெரிந்தது. அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கூச்சலிட்டான். உடனே முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி), பின் அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர்.

அப்போது ஹுதைஃபா இப்னு அல்யமான் (ரலி) அவர்கள், தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார். உடனே, ‘(அவர்) என் தந்தை! என் தந்தை!’ என்று (சப்தமிட்டுக்) கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘(என் தந்தையைத் தவறுதலாகக் கொன்றுவிட்ட) உங்களை அல்லாஹ் மன்னிப்பானாக!’ என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

Read More »

Bukhari-6667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6667. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார், பள்ளிவாசலின் ஒரு மூலையில் (அமர்ந்து) இருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம் ‘திரும்பச் சென்று தொழுவீராக! ஏனென்றால் நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள்.

அந்த மனிதர் திரும்பிச் சென்று (முன்பு தொழுததைப் போன்றே) தொழுதுவிட்டு வந்து (நபிகளாருக்கு) சலாம் சொன்னார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘வ அலைக்க’ (அவ்வாறே உம்மீதும் சாந்தி உண்டாகுக! என பதில் சலாம் கூறிவிட்டு) ‘திரும்பச் சென்று தொழுவீராக! நீர் (முறையாகத்) தொழவில்லை’ என்று கூறினார்கள்.

(இவ்வாறு மூன்று முறை நடந்தது) மூன்றாவது முறையில் அந்த மனிதர், ‘அவ்வாறாயின் எனக்கு (தொழுகை முறையை)க் கற்றுத் தாருங்கள்!’ என்று கேட்டார்.

‘நீர் தொழ நினைத்தால் (முதலில்) பரிபூரணமாக அங்கசுத்தி (உ@) செய்வீராக! பிறகு கிப்லா (இறையில்லம் கஅபாவின் திசையை) முன்னோக்கி (நின்று) ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறும்! பிறகு குர்ஆனில் உமக்குத் தெரிந்ததை

أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ يُصَلِّي، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَاحِيَةِ الْمَسْجِدِ، فَجَاءَ فَسَلَّمَ عَلَيْهِ، فَقَالَ لَهُ : ” ارْجِعْ فَصَلِّ ؛ فَإِنَّكَ لَمْ تُصَلِّ “. فَرَجَعَ فَصَلَّى، ثُمَّ سَلَّمَ، فَقَالَ : ” وَعَلَيْكَ، ارْجِعْ فَصَلِّ ؛ فَإِنَّكَ لَمْ تُصَلِّ “. قَالَ فِي الثَّالِثَةِ : فَأَعْلِمْنِي. قَالَ : ” إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ، ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ، فَكَبِّرْ وَاقْرَأْ بِمَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ رَأْسَكَ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ وَتَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَسْتَوِيَ قَائِمًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا “.


Next Page » « Previous Page