Author: Farook

Bukhari-6666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6666. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(துல்ஹஜ் 10ஆம் நாளில் மினாவில் இருந்தபோது) நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர், ‘கல்லெறிவதற்கு முன்பே நான் (தவாஃபில் ஸியாரா) சுற்றி வந்துவிட்டேன்’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள். மற்றொருவர், ‘பலியிடுவதற்கு முன்பே தலை முடி களைந்துவிட்டேன்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ என்றார்கள். இன்னொருவர், ‘கல்லெறிந்தற்கு முன்பே பலியிட்டுவிட்டேன்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘குற்றமில்லை’ என்றார்கள்.

Book :83


قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «لَا حَرَجَ» قَالَ آخَرُ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ؟ قَالَ: «لَا حَرَجَ» قَالَ آخَرُ: ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ؟ قَالَ: «لَا حَرَجَ»


Bukhari-6665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6665. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் (தம் ஒட்டகத்தின் மேல் இருந்தவாறு) உரை நிகழ்த்திக் கொண்டிருக்கையில் அவர்களை நோக்கி ஒருவர் எழுந்து, ‘நான் (ஹஜ்ஜில்) இன்னின்னதற்கு முன் இன்னின்னது (ஷைத்தானுக்குக் கல் எறிவதற்கு முன் பலியிடல், பலியிடலுக்கு முன் தலைமுடி களைதல்) என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். பிறகு மற்றொருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! (முடி களைதல், பலியிடல், கல்லெறிதல் ஆகிய இம்மூன்றையும் நான் இன்னின்னவாறு நினைத்துக் கொண்டிருந்தேன்’ என்றார்கள். இவை அனைவருக்குமே நபி (ஸல்) அவர்கள் ‘(அவ்வாறே) செய்யுங்கள். (முன் பின்னாகச் செய்வதில்) குற்றமில்லை’ என்றே பதிலளித்தார்கள். அன்று கேட்கப்பட்ட (இத்தகைய) கேள்விகள் அனைத்துக்கும் ‘(அப்படியே செய்யுங்கள்; (அப்படியே செய்யுங்கள். (அதனால்) குற்றமில்லை’ என்றே நபியவர்கள் விடையளித்தார்கள்.

Book :83


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ يَخْطُبُ يَوْمَ النَّحْرِ، إِذْ قَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ: كُنْتُ أَحْسِبُ – يَا رَسُولَ اللَّهِ – كَذَا وَكَذَا قَبْلَ كَذَا وَكَذَا، ثُمَّ قَامَ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كُنْتُ أَحْسِبُ كَذَا وَكَذَا، لِهَؤُلَاءِ الثَّلَاثِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «افْعَلْ وَلَا حَرَجَ» لَهُنَّ كُلِّهِنَّ يَوْمَئِذٍ، فَمَا سُئِلَ يَوْمَئِذٍ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ: «افْعَلْ وَلَا حَرَجَ»


Bukhari-6664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

மறந்து சத்தியத்தை முறித்துவிட்டால்…?55

அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தவறுதலாகச் செய்துவிட்டவற்றில் உங்கள் மீது குற்றமில்லை; மாறாக, மனம் விரும்பி வேண்டுமென்றே செய்தது தான் குற்றமாகும். (33:5)

மேலும் (அல்லாஹ்) கூறுகின்றான்: நான் மறந்துவிட்டதற்காக என்னைத் தண்டித்துவிடாதீர்கள் என அவர் (மூசா) கூறினார். (18:73)

6664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை வழங்குவதில்லை;) மன்னித்துவிடுகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

Book : 83


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ، أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ»


Bukhari-6663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை அளிக்க மாட்டான்; ஆனால், நீங்கள் (நன்கு அறிந்து) உளப்பூர்வமாக செய்தவற்றுக்காகவே உங்களுக்குத் தண்டனை அளிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் நிதானமானவனும் ஆவான். (2:225)

6663. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

‘இறைநம்பிக்கையாளர்களே!) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை அளிக்கமாட்டான்’ எனும் (திருக்குர்ஆன் 02:225 வது) இறைவசனம் ‘லா வல்லாஹி’ (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும், ‘பலா வல்லாஹி) (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!) என்றும் (பொருள் கருதாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுபவர் தொடர்பாக அருளப்பெற்றது.

Book : 83


{لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ} [البقرة: ٢٢٥] قَالَ: قَالَتْ: ” أُنْزِلَتْ فِي قَوْلِهِ: لَا وَاللَّهِ، بَلَى وَاللَّهِ


Bukhari-6662

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

அல்லாஹ்வின் நித்தியத்தின் மீதாணையாக’ என்று ஒரு மனிதர் சொல்வது.52

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (15:72ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ல அம்ருக’எனும் சொல்லுக்கு உமது வாழ்நாள் மீதாணையாக! என்று பொருள்.

6662. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்:

உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் (ரஹ் அலைஹிம்) ஆகியோர், நபி (ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் என்ன சொன்னார்கள் என்பது பற்றியும், (அவதூறு கற்பித்தவர்கள் சொன்னவற்றிலிருந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்களென இறைவன் (தன்னுடைய வேதத்தில்) அறிவித்தது பற்றியும் கூற கேட்டேன்.

அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இந்த சம்பவத்தில் ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அதில் (பின்வருமாறு உள்ளது:) அப்போது நபி (ஸல்) அவர்கள் எழுந்து, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபைக்கு

حِينَ قَالَ لَهَا أَهْلُ الإِفْكِ مَا قَالُوا، فَبَرَّأَهَا اللَّهُ، – وَكُلٌّ حَدَّثَنِي طَائِفَةً مِنَ الحَدِيثِ وَفِيهِ – «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَعْذَرَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ أُبَيٍّ» فَقَامَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ، فَقَالَ لِسَعْدِ بْنِ عُبَادَةَ: لَعَمْرُ اللَّهِ لَنَقْتُلَنَّهُ


Bukhari-6661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அல்லாஹ்வின் கண்ணியம், அவனுடைய பண்புகள் மற்றும் அவனுடைய உரைகள் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுவார்கள்.47

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் நரகத்திலிருந்து இறை நம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப் பட்ட பிறகு) சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர் என் இறைவா! நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன் என்று கூறுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அந்த மனிதரைப் பார்த்து) அல்லாஹ், இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று கூறுவான். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49

Read More »

Bukhari-6660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6660. சுலைமான் இப்னு மிஹ்ரான் (ரஹ்) அறிவித்தார்.

(மேற்கண்ட ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?’ என்று கேட்டார்கள். மக்கள் அன்னாரிடம் (விஷயத்தைக்) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) அவர்கள், ‘எனக்கும் என் தோழர் ஒருவருக்குமிடையே இருந்த ஒரு கிணறு தொடர்பாக எங்களின் விஷயத்தில் அருளப்பெற்றதே இந்த வசனமாகும்’ என்றார்கள்.

Book :83


فَمَرَّ الأَشْعَثُ بْنُ قَيْسٍ، فَقَالَ: مَا يُحَدِّثُكُمْ عَبْدُ اللَّهِ؟ قَالُوا لَهُ، فَقَالَ الأَشْعَثُ: نَزَلَتْ فِيَّ وَفِي صَاحِبٍ لِي، فِي بِئْرٍ كَانَتْ بَيْنَنَا


Bukhari-6659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

அல்லாஹ்விற்கு நான் அளித்த வாக்குறுதி யின் பெயரால்’ என்று கூறுவது.45

6659. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமின் அல்லது ‘தம் சகோதரனின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக (ஒரு பிரமாண வாக்குமுலத்தின்போது துணிவுடன்) பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்’ என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், ‘அல்லாஹ்வின் (‘அஹ்து’ எனும்) உடன் படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான்.

Book : 83


مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ، يَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ – أَوْ قَالَ: أَخِيهِ – لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ” فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهُ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} [آل عمران: 77]،


Bukhari-6658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்’ என்றோ, நான் அல்லாஹ்வை சாட்சியாக்கி னேன்’ என்றோ ஒருவர் கூறினால் (அது சத்தியமாகுமா)?43

6658. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம், ‘மக்களில் சிறந்தவர் யார்?’ என்று வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(மக்களில் சிறந்தவர்கள்,) என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் பிறகு ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும் அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் ‘சிறுவர்களான எங்களை எங்கள் சான்றோர்கள் (நபித்தோழர்கள்) ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ ‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ கூறுவதைத் தடுத்துவந்தார்கள்.

Book : 83


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ خَيْرٌ؟ قَالَ: ” قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ: تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ ” قَالَ إِبْرَاهِيمُ: «وَكَانَ أَصْحَابُنَا يَنْهَوْنَا – وَنَحْنُ غِلْمَانٌ – أَنْ نَحْلِفَ بِالشَّهَادَةِ وَالعَهْدِ»


Bukhari-6657

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6657. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நபி (ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப்போன்றே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

அத்தியாயம்: 83


أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، وَأَهْلِ النَّارِ: كُلُّ جَوَّاظٍ عُتُلٍّ مُسْتَكْبِرٍ


Next Page » « Previous Page