Author: Farook

Bukhari-6623

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6623. அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.

நான் (என்) அஷ்அரீ குலத்தாரில் ஒரு குழுவினருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (எங்களையும் எங்கள் பயணச் சுமைகளையும்) சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களை (ஒட்டகத்தில்) ஏற்றியனுப்ப முடியாது. ஏனெனில், உங்களை ஏற்றியனுப்பத் தேவையான (வாகன) ஒட்டகங்கள் என்னிடம் (தற்போது கைவசம்) இல்லை’ என்றார்கள். பிறகு அல்லாஹ் நாடிய நேரம் வரை நாங்கள் (அங்கேயே) இருந்தோம். பின்பு நபியவர்களிடம் வெள்ளைத் திமில்கள் கொண்ட மூன்று ஒட்டக மந்தைகள் கொண்டுவரப்பட்டன. எனவே, அவற்றின் மீது எங்களை ஏற்றி அனுப்பினார்கள்.

நாங்கள் (அங்கிருந்து விடைபெற்றுச்) சென்றுகொண்டிருந்தபோது நாங்கள் எங்களுக்குள்’ அல்லது ‘எங்களில் சிலர்’, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (நபி (ஸல்) அவர்கள் தரமாட்டேனென்று சத்தியம் செய்த பிறகு இவற்றை நாம் வாங்கிச் சென்றால் இவற்றில்) நமக்கு வளம் (பரக்கத்) ஏற்படாது. நபி (ஸல்) அவர்களிடம் நம்மைச் சுமந்து செல்ல (ஒட்டகங்கள் ஏற்பாடு) செய்யும்படி கேட்டோம். அவ்வாறு

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رَهْطٍ مِنَ الأَشْعَرِيِّينَ أَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ» قَالَ: ثُمَّ لَبِثْنَا مَا شَاءَ اللَّهُ أَنْ نَلْبَثَ، ثُمَّ أُتِيَ بِثَلاَثِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَحَمَلَنَا عَلَيْهَا، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا، أَوْ قَالَ بَعْضُنَا: وَاللَّهِ لاَ يُبَارَكُ لَنَا، أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَسْتَحْمِلُهُ فَحَلَفَ أَنْ لاَ يَحْمِلَنَا، ثُمَّ حَمَلَنَا، فَارْجِعُوا بِنَا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُذَكِّرُهُ، فَأَتَيْنَاهُ فَقَالَ: ” مَا أَنَا حَمَلْتُكُمْ، بَلِ اللَّهُ حَمَلَكُمْ، وَإِنِّي وَاللَّهِ – إِنْ شَاءَ اللَّهُ – لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا كَفَّرْتُ عَنْ يَمِينِي وَأَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ – أَوْ: أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَكَفَّرْتُ عَنْ يَمِينِي –


Bukhari-6622

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6622. அப்துர் ரஹ்மான் இப்னு சமுரா (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘அப்துர் ரஹ்மான் இப்னு சமுராவே! ஆட்சிப் பொறுப்பை நீயாக (ஆசைப்பட்டு)க் கேட்காதே! ஏனெனில், (நீ) கேட்டதால் அது உனக்கு அளிக்கப்பட்டால் அதோடு நீ (தனிமையில்) விடப்படுவாய். (இறைவின் உதவி கிட்டாது.) கேட்காமல் அது உனக்கு அளிக்கப்பட்டால் அது தொடர்பாக உனக்கு (இறைவனின்) உதவி அளிக்கப்படும். நீ ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீ கருதினால் உன்னுடைய சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)துக்கான பரிகாரத்தைச் செய்துவிடு. சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்து’ என்றார்கள். 3

Book :83


«يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ، لاَ تَسْأَلِ الإِمَارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا ، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ»


Bukhari-6621

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் செய்த வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை. ஆயினும், நீங்கள் உறுதிப்பாட்டுடன் செய்த சத்தியங்களுக்காக (அவற்றை நீங்கள் முறித்துவிட்டால்) உங்களை அவன் நிச்சயம் தண்டிப்பான்.

(முறித்துவிட்ட) சத்தியத்திற்கான குற்றப் பரிகாரம் (இது தான் ): நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு அளிக்கின்ற உணவுகளில் நடுத்தரமான வகையிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைகள் வழங்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்.

ஆனால், (இவற்றில் எதற்கும்) சக்தி பெறாதோர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் செய்த சத்தியங்களை முறித்துவிட்டால் இது தான் அவற்றுக்குரிய குற்றப் பரிகாரமாகும். எனவே, உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பேணுங்கள். இவ்வாறு தன்னுடைய சட்டத் திட்டங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்குகின்றான்; நீங்கள் நன்றி செலுத்துவோராய் திகழக்கூடும் என்பதற்காக! (5:89)

6621. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) அபூ பக்ர்(ரலி)

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، لَمْ يَكُنْ يَحْنَثُ فِي يَمِينٍ قَطُّ، حَتَّى أَنْزَلَ اللَّهُ كَفَّارَةَ اليَمِينِ، وَقَالَ: «لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَرَأَيْتُ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ، وَكَفَّرْتُ عَنْ يَمِينِي»


Bukhari-6620

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிரா விட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கவேமாட்டோம் என்று அவர்கள் கூறுவார்கள் (எனும் 7:43ஆவது இறை வசனம்).

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லது அல்லாஹ் எனக்கு நேர் வழியை அறிவித்திருந்தால், நானும் பயபக்தியாளர்களில் ஒருவனாகி இருப்பேனே! என்று எவரும் கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்பெற்ற நல்லவற்றைப் பின்பற்றுங்கள்). (39:57)

6620. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்.

அகழ்ப்போரின்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருப்பதை கண்டேன். அப்போது அவர்கள் (இவ்வாறு பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம். நோன்பு நோற்றிருக்கமாட்டோம். தொழுதிருக்கவுமாட்டோம்.

நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்களின்

رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الخَنْدَقِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ، وَهُوَ يَقُولُ: «وَاللَّهِ لَوْلاَ اللَّهُ مَا اهْتَدَيْنَا، وَلاَ صُمْنَا وَلاَ صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا، وَالمُشْرِكُونَ قَدْ بَغَوْا عَلَيْنَا، إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا»


Bukhari-6619

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

அல்லாஹ் எழுதியதைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை ஒரு போதும் அணுகாது என்று (நபியே!) நீர் கூறுக (எனும் 9:51ஆவது இறைவசனம்).

அல்லாஹ் எழுதியது’ என்பது விதியைக் குறிக்கும்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (37:162ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பி ஃபாத்தினீன்’ எனும் சொல்லுக்கு அல்லாஹ் யாரை நரகத்தில் நுழைவார்கள் என்று எழுதிவிட்டானோ அவர்களைத் தவிர வேறெவரையும் நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது என்று பொருள்.

(87:3ஆவது வசனத்திலுள்ள) அவனே விதியை நிர்ணயித்தான். வழியையும் காட்டினான் என்பதற்கு மனிதர்களின் நற்கதியையும் துர்பாக்கியத்தையும் விதியாக்கினான். கால்நடைகளுக்கு அவற்றின் மேய்ச்சல் நிலங்களைக் காட்டினான் என்று பொருள்.

6619. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அதற்கவர்கள் ‘அதுதான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாக

أَنَّهَا سَأَلَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الطَّاعُونِ، فَقَالَ: «كَانَ عَذَابًا يَبْعَثُهُ اللَّهُ عَلَى مَنْ يَشَاءُ، فَجَعَلَهُ اللَّهُ رَحْمَةً لِلْمُؤْمِنِينَ، مَا مِنْ عَبْدٍ يَكُونُ فِي بَلَدٍ يَكُونُ فِيهِ، وَيَمْكُثُ فِيهِ لاَ يَخْرُجُ مِنَ البَلَدِ، صَابِرًا مُحْتَسِبًا، يَعْلَمُ أَنَّهُ لاَ يُصِيبُهُ إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَهُ، إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ شَهِيدٍ»


Bukhari-6618

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6618. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இப்னு ஸய்யாதிடம் நபி (ஸல்) அவர்கள் ‘நான் (உன்னைச் சோதிப்பதற்காக) ஒன்றை மனத்தில் மறைத்துவைத்துள்ளேன். (அது என்னவென்று சொல்)’ என்று கேட்டார்கள். (அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அத்துகான்’ எனும் 44 வது அத்தியாயத்தின் 10 வது வசனத்தை மனத்திற்குள் நினைத்துக் கொண்டார்கள்.) அதற்கு இப்னு ஸய்யாத் ‘(அது) ‘அத்துக்’ என்றான்.

உடனே நபி (ஸல்) அவர்கள் ‘தூர விலகிப்போ! நீ உன் எல்லையைத் தாண்டிவிட முடியாது’ என்றார்கள். (அருகிலிருந்த) உமர்(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இவனைக் கொன்றுவிட எனக்கு அனுமதியளியுங்கள்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘இவனைவிட்டுவிடுங்கள். இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனை நீங்கள் கொல்ல முடியாது. (ஏனெனில், இவனைக் கொல்ல வேறொருவர்- நபி ஈசா (அலை) வருவார் என்பது இறைவனின் ஏற்பாடு.) இவன் அவனாக இல்லையாயின் இவனைக் கொல்வதில் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை’ என்று கூறினார்கள். 28

Book :82


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِابْنِ صَيَّادٍ: «خَبَأْتُ لَكَ خَبِيئَا» قَالَ: الدُّخُّ، قَالَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ» قَالَ عُمَرُ: ائْذَنْ لِي فَأَضْرِبَ عُنُقَهُ، قَالَ: «دَعْهُ، إِنْ يَكُنْ هُوَ فَلاَ تُطِيقُهُ، وَإِنْ لَمْ يَكُنْ هُوَ فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»


Bukhari-6617

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

அல்லாஹ் மனிதனையும் அவனது உள்ளத்தையும் சூழ்ந்து நிற்கின்றான்.27

6617. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் (சத்தியம் செய்வதாக இருந்தால்) ‘இல்லை. உள்ளங்களைப் புரட்டக்கூடியவன் மீதாணையாக!’ என்றே பெரும்பாலும் சத்தியம் செய்வார்கள்.

Book : 82


كَثِيرًا مِمَّا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْلِفُ: «لاَ وَمُقَلِّبِ القُلُوبِ»


Bukhari-6616

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

அழிவில் வீழ்வதிலிருந்தும் விதியின் கேட்டிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவது.

அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) நீர் சொல்வீராக: விடியலின் இறைவனிடம், அவன் படைத்துள்ளவற்றின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன். (113:1,2)

6616. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் அல்லாஹ்விடம் தாங்கமுடியாத சோதனை, அழிவில் வீழ்வது, விதியின் கேடு, எதிரிகளால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருங்கள்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். 26

Book : 82


«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ جَهْدِ البَلاَءِ، وَدَرَكِ الشَّقَاءِ، وَسُوءِ القَضَاءِ، وَشَمَاتَةِ الأَعْدَاءِ»


Bukhari-6615

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அல்லாஹ் கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை.

6615. முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான வர்ராத்(ரஹ்) அறிவித்தார்.

முஆவியா (ரலி) அவர்கள், முஃகீரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின் ஓதிய துஆக்களில் நீங்கள் செவியேற்றதை எனக்கு எழுதி அனுப்புங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது (பின்வருமாறு பதில்) எழுதுமாறு முஃகீரா (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: தொழுகைக்குப் பின் நபி (ஸல்) அவர்கள் ‘லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஉதைத்த வ லா முஉத்திய லிமா மன உத்த வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்கல் ஜத்’ என்று கூறுவதை கேட்டேன். (பொருள்: வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவன் எவனுமில்லை. இறைவா! நீ கொடுப்பதைத் தடுப்பவர் யாருமில்லை. நீ தடுப்பதைக் கொடுப்பவர் யாருமில்லை. எச்செல்வரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் (ஏதும்) அளிக்காது.)

Read More »

Bukhari-6614

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்: 11

அல்லாஹ்வின் அருகில் ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்து கொண்டார்கள்.

6614. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இறைத்தூதர்களான) ஆதம்(அலை) அவர்களும் மூஸா(அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். ஆதம்(அலை) அவர்களிடம் மூஸா(அலை) அவர்கள் ‘ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள்; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள்’ என்றார்கள். அதற்கு ஆதம்(அலை) அவர்கள் ‘மூஸாவே! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தன் கரத்தால் (வல்லமையால்) உமக்காக (தவ்ராத் எனும் (வேதத்தை) வரைந்தான். (இத்தகைய நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என் மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?’ என்று கேட்டார்கள். (இந்த பதில் மூலம்) மூஸா (அலை) அவர்களை ஆதம்(அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்; தோற்கடித்துவிட்டார்கள் என மூன்று முறை ‘ என்று இறைத்தூதர்(ஸல்)

احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: يَا آدَمُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنَ الجَنَّةِ، قَالَ لَهُ آدَمُ: يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلاَمِهِ، وَخَطَّ لَكَ بِيَدِهِ، أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً؟ فَحَجَّ آدَمُ مُوسَى، فَحَجَّ آدَمُ مُوسَى ” ثَلاَثًا


Next Page » « Previous Page